Author Topic: இந்த உலகத்தின் அதிபதி யார் ?  (Read 18717 times)

manimaran matthew

  • Guest
If one controlled by satan,its eqal to satan, revelu 12:9 read

udaya

  • Guest
Do you say the serpent , found in rev 12:9 and the serpent found in Genesis are one and same ?

If so , then, according to rev 12: 9 , that serpent/Satan was dead and no more.

So , there is no Satan , no sin , no deceiving , etc
Offcourse , we don't need a saviour too.

Your reasoning gives counterproductive .


manimaran matthew

  • Guest
Bro...First u know Revelution is not happened,it may happen,However satan is not only one, he have one kingdom.

udaya

  • Guest
Rev 12:9 is in past tense.

manimaran matthew

  • Guest
Revu 1:1  read, in rev12:9 no one is dead read on tamil vers. I think no more explaination for this.

susan paul

  • Guest
Udaya bro. Just try to read the verse again revelation 12:9 k

udaya

  • Guest
போர் நடந்தது . போரில் சாத்தானும் அவனை சார்ந்தவர்களும் தள்ளப்பட்டார்கள் , வீழ்ந்தார்கள் , மடிந்தார்கள், என்று பலவிதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

எதுவானாலும் , இறந்த காலத்தில் கூறப்பட்டிருப்பதனால் , அது நடந்து முடிந்த கதை.

susan paul

  • Guest
My goodness I said u to see the another name for Satan its given serpent OK

udaya

  • Guest
Revelation was written in the last decade of the first century (ca . A.D. 94 -96 ), near the end of Emperor Domitian's reign ( A.D. 81 - 96 ).

Until that period , " Genesis serpent " was called just " serpent ". Nobody said it as Satan .

Even , Jesus himself didn't say about the serpent, when he lived here.

When revelation came into existence , suddenly , we are told that G.serpent had a link to some verses of revelation .
( மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு !)

G.serpent = R.serpent = Satan = devil = etc,
is a wishful thinking .

Earlier apologists manufactured this link , to threaten people of that period . Today apologists ,too , doing this tactics to control people and earn some money . But they find selling this stuff to be  very difficult .

Ok..... let it be.

I can discuss the 4 main interpretive approaches of "revelation " , with some non delusional people , if necessary .

manimaran matthew

  • Guest
சகோ...அது முடிந்து போனதென்றால் இப்ப சாத்தான் உலகில் இல்லொையா வெளிப்12யை தொடர்ந்து வாசித்தால் பாம்பு உயிராக இருப்பது புரியும்.. பழைய பாம்பு என்று உள்ளதே அது என்ன பழைய பாம்பு...விளக்கம் கூறு ..வெளிப்1:1ல் சொல்வது என்ன இறந்தகாலமா..நீ ஒரு கனவை கண்ட பின்பு அதை சொல்லும் போது இறந்தகாலத்தை தான் பயன்படுத்துக்வாய் பிறகு (ஒருவேளை நிறைவேறினால்) அது நடப்பது வருங்காலத்தில் தான். சரி சர்ப்பம் ஆதாமை வஞ்சிக்க காரணம் என்ன?அதற்கு என்ன லாபம்?

udaya

  • Guest
@:  சகோ...அது முடிந்து போனதென்றால் இப்ப சாத்தான் உலகில் இல்லொையா வெளிப்12யை தொடர்ந்து வாசித்தால் பாம்பு உயிராக இருப்பது புரியும்..

Bro , பாம்பு ஒருவேளை உயிருடன் இருந்தால் , இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் மூலம் அது செத்த பாம்புக்கு சம்மானதாகவே இருக்கும்.
இயேசு அதன் தலையை நசுக்கிவிட்டார் என்றுதானே கூறுகிறார்கள் . ஆதியாகமம் 3:15ல் சொல்லப்பட்டபடி கிறிஸ்து அதன் தலையை நசுக்கிவிட்டார் என்று கூறகிறார்களே !!!!
இக்கருத்து சரி என்றால் பாம்பின் கதை முடிந்த கதைதானே !

@:  பழைய பாம்பு என்று உள்ளதே அது என்ன பழைய பாம்பு...விளக்கம் கூறு

பழைய பாம்பு என்று அப்போஸ்தலனாகிய யோவான் தான் கூறியிருக்கிறார் . அதற்கு அவர்  விளக்கத்தை கூறவில்லை . அவர் எதை குறிப்பிடுகிறார் என்பது தெரியவில்லை . சுவிசேஷ ஊழியர்கள்தான் தங்களுடைய சுயலாபத்திற்காக ஆதியாகமத்தை இணைத்து பேசிக்கொண்டு இருக்கின்றனர் .

@:  வெளிப்1:1ல் சொல்வது என்ன இறந்தகாலமா..நீ ஒரு கனவை கண்ட பின்பு அதை சொல்லும் போது இறந்தகாலத்தை தான் பயன்படுத்துக்வாய் பிறகு (ஒருவேளை நிறைவேறினால்) அது நடப்பது வருங்காலத்தில் தான்.

உங்களுடைய reasoning சரியாகத்தான் இருக்கிறது சகோ.

@:  சரி சர்ப்பம் ஆதாமை வஞ்சிக்க காரணம் என்ன?அதற்கு என்ன லாபம்?

தேவனாகிய கர்த்தரின் சித்தத்தின்படி சர்ப்பம் ஏதேன் தோட்டத்தில் அனுமதிக்கப்படிருந்தது . சர்ப்பம் ஆதாமை / ஏவாளை வஞ்சித்தது , கர்த்தரின் சித்தமா என்று தெரியவில்லை . ஆனால் , கர்த்தரின் சித்தத்தை மீறி அங்கு எதுவும் நடக்க வாய்ப்பில்லை . வஞ்சனை கொண்ட சர்ப்பத்தை உருவாக்கிய தேவனுக்கு , அது மனிதனை வஞ்சித்துவிடும் என்று தெரியாமலா போயிருக்கும் ?  அனைத்தும் கர்த்தரின் சித்தமே . மற்றபடி சர்ப்பத்திற்கு இதனால் எந்த லாபமும் கிடையாது .

சகோ.
பழையதையும் புதியதையும் இணைப்பது சரியல்ல . இயேசு கிறிஸ்து கூட  , பழையதையும் புதியதையும் இணைப்பது சரியாகாது என்று உவமைகள் மூலமாக கூறியிருப்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் .


manimaran matthew

  • Guest
இயேசுவும் பல இடங்களில் பழைய ஏற்பாட்டை  மேற்க்கோளாக காட்டியுள்ளாரே..அது என்ன ...அப்போஸ்தலர்களும் அப்படி கூறியுள்ளனரே அது...

manimaran matthew

  • Guest
ஒரு ஆட்டக்காரன் திறமையாக இருந்தால் அவனை தனது அணிக்காக வாங்கி அவன் திறமையை இவர்கள் பயன்படுத்திக்கொள்வர்.. அது போல சர்பத்தின் தந்திரத்தை சாத்தான் பயன்படுத்திக்கொண்டான். ஒவ்வொரு ஜீவனுக்குள் ஒரு பண்பு உண்டு. மனிதன் வஞ்சிக்கப்படுவது தேவனுக்கு தெரியும் அதனால் முன்னமே சாப்பிட கூடாதெனவும் விளைவும் சொல்லியிருந்தார்.ஆனால் மனிதனின் உரிமையை அவர் மதித்தார்.  அவன் சித்தத்தில் அவர் தலையிடுவதில்லை. நம் நாட்டில் பல சட்டங்கள் உள்ளன அது ஒழுங்கை ஏற்ப்படுத்தவே அடிமைபடுத்த அல்ல. (டிராபிக் சிக்னல் இல்லை என்றால் என்னவாகும்.)ஏதேனுக்கு ஒரே ஒரு கட்டளை போதும். அதையும் மீறியதால் தான் தண்டனை.பூமியில் ஏராளமான பாவங்கள் நடக்கிறது அது தேவ சித்தமா.. நடப்பதெல்லாம் தேவனுக்கு தெரியுமே ஒழிய எல்லாம் அவர் சித்தமல்ல..


udaya

  • Guest
@: இயேசுவும் பல இடங்களில் பழைய ஏற்பாட்டை  மேற்க்கோளாக காட்டியுள்ளாரே..அது என்ன ...

உண்மைதான் சகோ.    தவறுதலாக கூட மேற்கோள் காட்டியுள்ளார் . ...அடுத்த பதிலை பார்க்கவும் .

@:  அப்போஸ்தலர்களும் அப்படி கூறியுள்ளனரே அது...

பிசாசுகூட சங்கீதத்தை மேற்கோள் காட்டியுள்ளான் !!! விஷயம் அதுவல்ல . பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாட்டை நசுக்குகிறது . மட்டுமல்ல ,  இயேசு கிறிஸ்துவை கடவுளாகவோ ரட்சகராகவோ ஏற்க மறுக்கிறது . அதனால் ......அதை மேற்கோள் காட்டுவதை தவிர்க்க வேண்டும் .

@:  ஒரு ஆட்டக்காரன் திறமையாக இருந்தால் அவனை தனது அணிக்காக வாங்கி அவன் திறமையை இவர்கள் பயன்படுத்திக்கொள்வர்.. அது போல சர்பத்தின் தந்திரத்தை சாத்தான் பயன்படுத்திக்கொண்டான்.

ஆக ...சர்ப்பம் வேறு , சாத்தான் வேறு . சரிதானா ?

@: ஒவ்வொரு ஜீவனுக்குள் ஒரு பண்பு உண்டு. மனிதன் வஞ்சிக்கப்படுவது தேவனுக்கு தெரியும்

தொடர்ச்சியாக , பாவம் உருவாகப் போவதும் தெரியும் ?

@: அதனால் முன்னமே சாப்பிட கூடாதெனவும் விளைவும் சொல்லியிருந்தார்.

ஆம், சொல்லியிருந்தார். ஆனால் சொல்லியிருந்த விளைவு ஏற்படவில்லை !!!

@: ஆனால் மனிதனின் உரிமையை அவர் மதித்தார்.  அவன் சித்தத்தில் அவர் தலையிடுவதில்லை.

மனிதனின் உரிமையை அவர் மதித்தது உண்மயானால் , ஏதேன் தோட்டத்தை விட்டு ஏன் விரட்டினார் ? இன்றும் கூட எரிகிற அக்கினி கடலில் தள்ளுவதாக மிரட்டுகிறாரே :(
யோனாவின் சித்தத்தில் அவர் தலையிட்டதை படிக்கிறோமே !

@: நம் நாட்டில் பல சட்டங்கள் உள்ளன அது ஒழுங்கை ஏற்ப்படுத்தவே அடிமைபடுத்த அல்ல. (டிராபிக் சிக்னல் இல்லை என்றால் என்னவாகும்.)

அந்த சட்டங்கள் நமக்காக நாமே ஏற்படுத்திக்கொண்டதனால் , அடிமைத்தனம் என்ற பேச்சிற்கே இடமில்லை . தேவனுடைய சட்டங்கள் அப்படி அல்லவே !

@: ஏதேனுக்கு ஒரே ஒரு கட்டளை போதும். அதையும் மீறியதால் தான் தண்டனை.

யாருடைய மீறலினால் யாருக்கு தண்டனை ?

@:  பூமியில் ஏராளமான பாவங்கள் நடக்கிறது அது தேவ சித்தமா..

சரியாக தெரியவில்லை .

@:  நடப்பதெல்லாம் தேவனுக்கு தெரியுமே ஒழிய எல்லாம் அவர் சித்தமல்ல..

நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் தேவன் , அது நடைபெறாமல் தடுத்து நிறுத்துவதை விட்டு விட்டு , நடந்து முடியும்வரை காத்திருந்து பிறகு  தண்டிப்பதுதான் அவர் சித்தமா ?
பாவங்களின் காரணகர்த்தாவை கட்டுப்படுத்துவதை
விடுத்து , நம்மை குறை கூறுவது ஏன் ? எய்தவன் இருக்க அம்பை நோவதேன் :(

manimaran matthew

  • Guest
சகோ...உதயா தங்களுக்கு இரட்சிப்பின் அநுபவம் உண்டா. மாற்12:24..படிக்க. இயேசுவால் மீட்பு..நித்திய ஜீவன் உண்டென்று நம்புகிறீர்களா.?தேவனைக்குறித்த தங்களது  எண் எண்ணங்களை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். 1கொரி2:16,ரோமரா11:34 செசெப3:5. பார்க்க, தங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும். ஆனால் இந்த முறையில்  அல்ல. விரும்பினால்  போன் நம்பரை தெரிவிக்கவும். .