General Category > Tamil Bible

சாத்தான் என்பவன் யார் ?

(1/8) > >>

udaya:
சாத்தான் என்பவன் யார் ?

சாத்தான் தேவனாகிய கர்த்தரின் பணியாளன் . சாத்தான் என்பது ஒருவனின் பெயரல்ல . அது ஒரு குறிப்பிட்ட பணியை செய்பவனைக் குறிக்கும் . உதாரணமாக , driver , teacher ,doctor போன்றவை அந்தந்த பணி செய்பவரை குறிப்பது போல சாத்தான் என்பதும் ஒரு பணியாளனைக் குறிக்கும் .

சாத்தானின் பணி என்ன ?

மானிடர் மேல் குற்றம் சுமத்தி அவர்களது செயல்பாடுகளை கர்த்தரின் கவனத்திற்கு கொண்டு வருதல் . குற்றம் குறைகளை கண்டு பிடித்தல் .
இப்பதவி சற்றேறக்குறைய public prosecutor பதவிக்கு ஒப்பானது .

சாத்தானின் அதிகாரம் என்ன ?

சாத்தானுக்கு எந்த அதிகாரமும் கிடையாது . கர்த்தர் என்ன சொல்லுகிறாரோ அதன்படி செய்ய வேண்டியதுதான் அவன் கடமை.  கீழ்ப்படிந்து நடப்பது மிகஅவசியம் . பாரபட்சம் இன்றி செயல்படவேண்டும் .

கர்த்தர் சாத்தானை ஏன் பணியமர்த்தினார் ?

கர்த்தர் , தன்னுடைய புனிதம் மற்றும் மகிமையும் , தான் உருவாக்கிய தீமையும் சரியான விகிதத்தில் மனிதர்களிடத்தில் இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்து கொள்வதற்காக உருவாக்கிய ஏற்பாடுதான் சாத்தான் . நன்மை-தீமை விகிதாச்சாரம் மனிதனுக்கு மனிதன் மாறுபடும் . உதாரணமாக கொடூரனுக்கு அது 0:100 என்றால் , இயேசு கிறிஸ்துவுக்கு 100:0.

சாத்தானின் எல்லை எது ?

பூமி அவனது எல்லை. பூமியின் நிர்வாகியான சாத்தானுக்கு " உலகத்தின் அதிபதி "என்ற ஸ்தானத்தையும் கர்த்தர் வழங்கியிருக்கிறார் . இயேசு கிறிஸ்து உட்பட அனைவரும் அவனால் சோதிக்கப்பட வேண்டுமென்பது கர்த்தரின் நியமனம்.

கூடுதல் விவரம் :

சாத்தானின் வேலையை மனிதன் செய்தாலும் அவன் சாத்தான்தான் . (அதாவது தாற்காலிக சாத்தான்) . இயேசு கிறிஸ்து பேதுருவை கடிந்துகொண்டது இந்த வகைதான் . மற்றவர்களை குற்றப்படுத்த வேண்டாம் என்று பைபிள் போதிப்பதுவும் இதன் காரணமாகத்தான் .

சாத்தானுக்கு கொடுக்கப்பட பணியின் தன்மை , அவனுக்கு கெட்ட பெயரை மக்களிடம் ஏற்படுத்தியது . மக்கள் அவனை வெறுக்க ஆரம்பித்தனர் . பாதிக்கப்பட்டவர்கள் அவனை தீயவனாக உருவகிக்க தொடங்கினர் . அவன் எப்போது ஒழிவான் என்று காத்திருந்தனர் .இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தின் மூலம் சாத்தானின் தலையை நசுக்கினார் என்று சொல்லி திருப்திப்பட்டுக்கொண்டனர்.

சாத்தானின் முடிவு :

சாத்தானுக்கு முடிவு கிடையாது .  பணி மாறுதல் செய்யப்பட்டு 1000 வருடங்கள் அவன் பாதாள உலகம்  செல்ல வேண்டியிருக்கும் .அது எப்போது ?

ஏரேமியா 31:31-34. , எபிரேயர் 8:8-12 பகுதிகளில்
இந்த காலம் சொல்லப்பட்டிருக்கிறது .

எனவே இயேசு கிறிஸ்துவின் போர் வீரர்கள் , சாத்தானை கண்டு பயப்பட வேண்டியதில்லை .பயப்பட்டு பயனில்லை . அவனுடன் போர்புரிய அவசியமில்லை .

சாத்தானை வணங்குபவர்களுக்கும் அவன் எந்த ஒரு சலுகையும் அளிப்பதில்லை .

பொதுவாக சொல்லவேண்டும் என்றால் , சாத்தான் ஒரு கொசுக்கடி.

sanakya:
கொசுக்கடி  !!!!! அருமையான உதாரணம்

udaya:
இந்த கொசுவினால் பாதிப்பு ஏற்பட்டால் மருந்து என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் .

susan paul:
Always talking about Satan try to come out of this topic

udaya:
You say try? Ok I will.

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version