Author Topic: சாத்தான் என்பவன் யார் ?  (Read 15180 times)

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #15 on: July 10, 2015, 10:08:49 AM »
@: SHAHMARKS
By the way , God asked devil to test Jesus Christ ....right ?
« Last Edit: July 10, 2015, 10:10:46 AM by udaya »

Selvamvijayan

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #16 on: August 11, 2015, 10:00:43 AM »
தீய ஆவி என்று உண்டா? இதுவும் சாத்தானும் ஒன்றா?  ரொம்ப விசுவாசமான வீட்டிலும் தீய ஆவி பாடாய் படுத்துகின்றதே? ஏன்? வீடு முழுவதும் ஆண்டவரின் படங்கள் இருந்தும் எப்பொழுதும் ஜெபம் ஏறெடுத்துக் கொண்டிருக்கும் போதும் தீய ஆவி எங்ஙனம் வீட்டிற்குள் பிரவேசிக்கிறது? ஆண்டவரிடம் பயம் இல்லையா?

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #17 on: August 12, 2015, 01:07:26 AM »
@:    தீய ஆவி என்று உண்டா? இதுவும் சாத்தானும் ஒன்றா? 
சாத்தானின் பல ஆயுதங்களில் தீய ஆவியும் ஒன்று.

@:    ரொம்ப விசுவாசமான வீட்டிலும் தீய ஆவி பாடாய் படுத்துகின்றதே? ஏன்?
விசுவாசமான வீடு அவிசுவாசமான வீடு என்ற கணக்கெல்லாம் சாத்தானுக்கு கிடையாது.
யோபு புத்தகத்தை படித்துப்பார்த்தால் புரியும்.

@:      வீடு முழுவதும் ஆண்டவரின் படங்கள் இருந்தும் எப்பொழுதும் ஜெபம் ஏறெடுத்துக் கொண்டிருக்கும் போதும் தீய ஆவி எங்ஙனம் வீட்டிற்குள் பிரவேசிக்கிறது?
படமும் ஜெமும் தீய ஆவியை தடுத்து நிறுத்தும் என்று நீங்கள் நம்ப காரணம் என்ன ?

@:    ஆண்டவரிடம் பயம் இல்லையா?
எஜமான் என்ற விசுவாசம் உண்டு.  பயம் எதற்கு ?

சரி.......

பகுத்தறிவின் அடிப்படையில் ஒரு கருத்து இதோ...

நமது இல்லங்களில் எழும் இன்னல்களுக்கு, தீய நிகழ்வுகளுக்கு , தீய ஆவிதான் காரணம் என்று காலகாலமாக நமக்கு போதிக்கப்பட்டு வருகிறது.
ஜெபம் செய்து தீய ஆவிகளை விரட்டுகிறேன் , என்று கூறி நம் வீட்டிற்குள் நுழையும் சுவிசேஷ ஊழியர்கள் , நம்மை தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள , அவர்களுக்கு பயன்படும் சாதனம் " தீய ஆவி ".
பொறுமையோடும் , நம்பிக்கையுடனும் , விடாமுயற்சியுடனும் செயல்பட்டு இன்னல்களை இனங்கண்டு களைந்தெறிய முற்படுவர்களின் பார்வையில் ' தீய ஆவி ' என்பது ஒரு joke.....:-)

Selvamvijayan

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #18 on: August 12, 2015, 02:13:00 AM »
நன்றி! தீய ஆவிகளை எப்படி முறியடிப்பது/ஜெயிப்பது. கடுமையான கூட்டு ஜெபத்தில் கூட சில ஆவிகள் வெளியேர மறுப்பது / வெளியேறினாலும் திரும்ப வந்து தொந்தரவு செய்கின்றதே?

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #19 on: August 12, 2015, 06:13:59 AM »
அசுத்த ஆவி பிரச்சனையை வேதாகம கண்ணோட்டத்தில் அணுகினால் , தீர்வு , மாற்கு 9:29 ல் கூறப்பட்டுள்ளது.

மாறாக....

மருத்துவ கண்ணோட்டத்தில் அணுகினால் , நிச்சயமான தீர்வை அடைய இயலும்.

Vickyalpha

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #20 on: October 20, 2018, 06:31:15 PM »
.

Vickyalpha

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #21 on: October 20, 2018, 07:07:16 PM »
@reply 8

எசேக்கியல் அதிகாரத்தில் தொடக்கத்தில் அவர் தீருவின் ராஜாவை குறித்து பேச தொடங்கினாலும், பின்பு அவனுக்குள் இருந்து அவனை நடத்தும் சாத்தானையும் கடிந்து கொள்ள தொடங்குகிறார். எனவே அது சாத்தானை குறிப்பதாகவே கருதுகிறேன் brother. ஏனெனில் அதில் உள்ள சில வர்ணனைகள் மனிதனுக்கு பொருந்துவதாய் இல்லை.
He talk with the force behind the king.
« Last Edit: October 20, 2018, 07:32:28 PM by Vickyalpha »

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #22 on: October 21, 2018, 12:31:01 AM »
எசேக்கியல் 28 ம் அதிகாரம் 3 உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது . அதில்  முதல் 2 பிரிவுகள் தீரு ராஜாவுக்கான தீர்க்கதரிசனங்கள். இதில் சொல்லப்பட்டுள்ள வசனங்களைக் கொண்டு , தீரு ராஜா என்பது சாத்தானைக் குறிக்கிறது என்ற சிலர் நினைக்கின்றனர் . அது சரியல்ல என்பது என் கருத்து .

எசேக்கியல் 28 ம் அதிகாரம் 9,10 வசனங்கள் , தீரு ராஜா ஒரு மனிதன் என்று நிரூபிக்கிறது . சாத்தான் மனிதானாக இருந்திருந்தால் பூமியில் இருந்து பரலோகத்திற்கு போவதும் வருவதுமாக இருந்திருக்க முடியாது .(யோபு புத்தகத்தில் கூறியுள்ளபடி) காரணம்.....

பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் -  3:13 

ஆக தீரு ராஜா சாத்தான் அல்ல , ஒரு மனிதனே .

அடுத்து....

13 ம் வசனம்..........நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன் , என்ற வாக்கியம் , " தீரு ராஜா = சர்ப்பம் =  சாத்தான் "  என்ற கருத்தை ஆதரிப்பதாக நம்புகின்றனர் . அதுவும் பிழையே . காரணம்.....ஏதேன் தோட்டத்தில் , ஆரம்பத்தில் , ஆதாம் ஏவாளைத் தவிர வேறு மனிதர்கள் இருந்ததற்கான முகாந்திரம் எதுவுமில்லை .
ஏதேன் தோட்டம் என்றவுடன் ஆதாம் ஏவாள் பாவத்தை மட்டும் சொல்லிவிட்டு கடந்து போகிறோம் . தேவனாகிய கர்த்தர் மனிதனை அங்கிருந்து துரத்திவிட்ட பிறகும் ஏதேன் தோட்டம் அங்கேதான் இருந்தது என்பதை மறக்கக் கூடாது . ஆதாம் வெளியேறிய பிறகு , தீரு ராஜா அங்கு ஏன் இருந்திருக்கக் கூடாது ?
இருந்தாரா ? ஆம் , இருந்தார்.....ஏதேனைக் காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப் ஆக இருந்தார். கீழ்க்கண்ட வசனத்தை கவனிக்கவும்

எசேக்கியல் - 28:14 நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப், தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன், அக்கினிமயமானகற்களின் நடுவே உலாவினாய்.

சரி.....
ஏதேனைக் காப்பாற்றுகிறதற்காக கர்த்தர் கேருபீன்களை நியமித்தாரா ?  நியமித்ததை கீழ்க்கண்ட வசனம் உறுதி செய்கிறது .

ஆதியாகமம் - 3;24 அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.

இப்படியிருக்க , தீரு ராஜா என்பது  , சாத்தானைக் குறிக்க எந்த முகாந்திரமும் இல்லை . இந்தப்பகுதியில் கூறப்பட்டிருக்கும் , ஞானவான் , பூரண அழகுள்ளவன் போன்ற குணநலன்கள் தீரு ராஜாவுக்கு பொருந்தாது என்று கூற காரணம் எதுவுமில்லை . மேலும் வசனங்கள் கூறுகிறபடி அவர் பாவம் செய்திருக்கக் கூடும் .



@:ஏனெனில் அதில் உள்ள சில வர்ணனைகள் மனிதனுக்கு பொருந்துவதாய் இல்லை.

எந்த வர்ணனைகள் மனிதனுக்கு பொருந்துவதாய் இல்லை என்று கருதுகிறீர்கள் ?

@:He talk with the force behind the king.

He just talk ABOUT the king.
« Last Edit: October 21, 2018, 12:36:47 AM by udaya »

Vickyalpha

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #23 on: October 21, 2018, 03:43:12 AM »
Brother நான் சொல்ல வருவதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

தீருவின் ராஜாவை நான் சாத்தான் என்று சொல்லவில்லை. நான் சொல்ல வருவது என்னவென்றால்
எசேக்கியல் தீருவின் ராஜாவிடம் காரியங்களை சொல்லும்போது , அவர் ராஜாவிடம் மட்டும் பேசாமல், ராஜாவின் உள்ளே இருந்து கிரியை செய்யும் சாத்தானை பார்த்தும் பேசுகிறார்.
உதாரணத்திற்கு இயேசு பேதுருவிடம் "பின்னாக போ சாத்தானே" என்று சொன்னப்பொழுது அவர் பேதுருவிடம் பேசாமல் , அவனுக்குள் இருந்த சாத்தானிடமே பேசினார் என்று புரிந்துகொள்ளலாம். அதே போல் இவர் ராஜாவிடம் பேசும்போது ராஜாவுக்குள் இருக்கும் சாத்தானிடம் சொல்வதுதான் எசேக்கியல் 28 : 12,13,14,15 வசனங்கள்.
இதே போன்ற ஒரு பதம் ஏசாயா 14: 12,13,14,15 வசனங்களில் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பதை காணலாம்.
" நீ அபிஷேகம் பண்ணப்பட்ட கேருப்" என்று எசே 28:14 வசனத்தில் வாசிக்கிறோம். கேருபின்கள் பெரிய இறக்கைகளுடன் கூடிய சிருஷ்டிப்புகள்.
அவைகள் மனிதர்களை குறிப்பதில்லை.
தீருவின் ராஜா ஒரு மனிதன். அவன் இறக்கைகளுடன் கூடிய கேருபின் அல்ல. எனவே இந்த வார்த்தைகள் அவரை பார்த்து சொல்லப்படாமல் அவருக்குள் இருந்து கிரியை செய்த சாத்தானை பார்த்தே சொல்லப்பட்டிருக்கிறது.
இதுவே நான் புரிந்து கொண்ட விளக்கம் brother.

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #24 on: October 21, 2018, 01:50:35 PM »
தீரு ராஜாவிடமும் ,
தீரு ராஜாவுக்குள் இருக்கும் சாத்தானிடம் பேசியதாக எடுத்துக் கொள்ள வேண்டும் , என்று கூறுகிறீர்கள். சரி.....

2ம் வசனம் யாருக்கு சொல்லப்பட்டது என்று கூறமுடியுமா ?

ஏசாயா 14 : 12-15 ஐ குறிப்பிட்டருக்கிறீர்கள்.....

நேரடியாக சொல்லப்படும்
வசனங்களை உள் அர்த்தத்துடன் பார்க்க முற்பட்டால் ,
ஏசாயா 14 : 12-15 , இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது என்று கூட கூறலாம்.

இயேசு கிறிஸ்துதான் வானத்திற்கு
ஏறுவேனென்றும் மேகங்கள் மேல் வருவேனென்றும் உன்னதருக்கு ஒப்பாவேனென்றும் கூறினார் .(மத்தேயு 26 :64 )

தன்னை பிதாவுக்கு இணை படுத்தி பேசினார்.(மத்தேயு 28 :18, யோவான் 14 :9 )

ஜாதிகளை ஈனப்படுத்தினார் (மாற்கு 7:25-30).

வானத்தை விட்டு பூமிக்கு வந்தார்.மரித்து பாதாளத்தில் இறங்கினார் .

தன்னை விடிவெள்ளி என்றார்.(வெளிப்படுத்தின விசேஷம் 22 :16)

எனவே எசாயா 14:12-15 இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா ?

நமக்கு போதித்தவர்கள் இது சாத்தானைக் குறிக்கிறது என்று கூறியதால் நாமும் அவ்வாறே வைத்துக் கொண்டோம் . அவ்வளவே.



Vickyalpha

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #25 on: October 21, 2018, 08:07:27 PM »
13 நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன், பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது, நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
எசேக்கியேல் 28:13

"நீ ஏதேனில் இருந்தவன்" ஏதேனில் சாத்தான் இருந்தானே brother.

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #26 on: October 21, 2018, 08:24:49 PM »
சர்ப்பம் இருந்ததாகத்தான் வேதாகமம் கூறுகிறது. அதை சாத்தான் என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் கேட்கிறேன். இருப்பதை அப்படியே ஏன் எடுத்துக் கொள்ள கூடாது.

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

மத்தேயு 5

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #27 on: October 21, 2018, 08:51:49 PM »
நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்.....

என்ற வசனத்திற்கு reply#22 ல் ஒரு interpretationஐ கூறியிருக்கிறேன்.

Vickyalpha

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #28 on: October 21, 2018, 09:23:59 PM »
@reply 26

2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
வெளிப்படுத்தின விசேஷம் 20:2


Vickyalpha

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #29 on: October 21, 2018, 09:35:45 PM »
@reply 27
ஆதாம் ஏவாளுக்கு பிறகு ஏதேனுக்கு எந்த மனிதரும் வந்து ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க கூடாது என்றுதான் கடவுள் கெருப்பீன்களையும், சுடரொளி பட்டயத்தையும் பாதுகாவலாக வைத்தார். அப்படி இருக்கும் போது தீருவின் ராஜா எப்படி ஏதேன் தோட்டத்தில் இருந்திருக்க முடியும்??