Author Topic: சாத்தான் என்பவன் யார் ?  (Read 15176 times)

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #30 on: October 22, 2018, 06:25:56 AM »
@:Reply#28

சர்ப்பம் சாத்தானா ? அல்லது சர்ப்பத்திற்குள் சாத்தானா ? உங்கள் கருத்து என்ன ?

@:Reply#29

@:ஆதாம் ஏவாளுக்கு பிறகு ஏதேனுக்கு எந்த மனிதரும் வந்து ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க கூடாது என்றுதான் கடவுள் கெருப்பீன்களையும், சுடரொளி பட்டயத்தையும் பாதுகாவலாக வைத்தார்

அதைத்தான் எசேக்கியல் - 28:14  ல் ..நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப் ......என்று கூறுகிறார்.
மனிதன் எப்படி கேருப் ஆக இருக்கமுடியும் , என்று ஐயப்பட்டால், அது எசேக்கியல் - 28:14 எப்படி உண்மையாக இருககமுடியும் என்று கேட்பதற்கு சமம்.
இதுதான் "பகுத்தறிந்து ஏற்றுக் கொள்வது" என்பது....அதாவது பகுத்தறிவு . இந்த மனப்பான்மையை நான் வரவேற்கிறேன் . ஆனால் இந்த பகுத்தறிவு வேதத்தின் எல்லா பகுதியிலும் apply செய்யப்படவேண்டும் . Selective ஆக apply செய்வதுதான் பிரச்சனை .

@:தீருவின் ராஜா ஒரு மனிதன். அவன் இறக்கைகளுடன் கூடிய கேருபின் அல்ல.

சரி , அப்படியே வைத்துக் கொள்வோம்...

@:எனவே இந்த வார்த்தைகள் அவரை பார்த்து சொல்லப்படாமல் அவருக்குள் இருந்து கிரியை செய்த சாத்தானை பார்த்தே சொல்லப்பட்டிருக்கிறது.

அவருக்குள் இருந்து கிரியை செய்தது , "சாத்தான்தான்" என்ற முடிவுக்கு வர முகாந்திரம் என்ன என்பதுதான் கேள்வி....
தீருவின் ராஜாவை மனிதன் என்று declare செய்துவிட்டு.........." நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப்" என்ற வார்த்தகளை வாசிக்கும் பொழுது , தீர்க்கதரிசியின் வார்த்தைகளில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டாமல் , எதையாவது இடை சொருகி , தீர்க்கதரிசியின் வார்த்தைகளை உண்மைப்படுத்த முயற்சிக்கும் செயல் எத்தகையது ?

நான் உங்களை சொல்லவில்லை . இப்படி சொல்லி வரும் நம் இறையியலாளர்களை சொல்லுகிறேன் .

ஏன்.....கரத்தர் தீருவின் ராஜாவை கேருப் ஆக மாற்றியிருக்க முடிபாதா ? ஒரு வேளை அப்படி மாற்றி அதை தீர்க்கதரிசி வாயிலாக சொல்லியிருந்தாரென்றால் ..?
இந்த கோணத்தில் ஏன் சிந்திக்கக்கூடாது ?

Vickyalpha

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #31 on: October 22, 2018, 07:32:26 AM »
அப்படியும் இருக்கலாம் brother. அல்லது நான் சொன்னபடியும் இருக்கலாம். தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எல்லாம் ஒவ்வொரு யூகங்கள் தான்.
ஒரே ஒரு வேதபுத்தகத்தை வைத்து கிட்டத்தட்ட 1700 வருடங்களாய், பல லட்சக்கணக்கான bible scholors, பிரசங்கிமார்கள், ஒவ்வொரு நூற்றாண்டின், ஒவ்வொரு நாளும், ஒரே வசனத்துக்கு புதிய புதிய அர்த்தங்களை எடுத்து இப்போது வரை பிரசிங்கித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதே புத்தகம் தான், அதே வசனங்கள் தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெளிச்சம். இன்றும் முடிவில்லாமல் தொடர்கிறது.
அதே போல் உங்களுக்கு ஒரு கண்ணோட்டம், எனக்கு ஒரு கண்ணோட்டம்.
எது சரியோ, அது அந்த கடவுளுக்கு தான் தெரியும்.

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #32 on: October 22, 2018, 08:01:16 AM »
@:ஒரே ஒரு வேதபுத்தகத்தை வைத்து கிட்டத்தட்ட 1700 வருடங்களாய், பல லட்சக்கணக்கான bible scholors, பிரசங்கிமார்கள், ஒவ்வொரு நூற்றாண்டின், ஒவ்வொரு நாளும், ஒரே வசனத்துக்கு புதிய புதிய அர்த்தங்களை எடுத்து இப்போது வரை பிரசிங்கித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதே புத்தகம் தான், அதே வசனங்கள் தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெளிச்சம். இன்றும் முடிவில்லாமல் தொடர்கிறது.

Brother ...... இதுதான் கிறிஸ்தவத்தின் உண்மையான பிரச்சனை ..... இப்படி ஆளாளுக்கு தனக்கு தோன்றியதையெல்லாம் சொல்லி , அதுதான் சரியென்று மற்றவர்களை நம்ப வைக்க முயற்சி செய்வதால்தான் நமக்குள் பல பிரிவுகள் , மறறும் உட்பூசல் ஏற்படுகிறது ......... நமக்கு சாத்தான் தேவையில்லை ! ! !

அன்றே , லுாக்கா ஆசிரியருக்கும் இதே சூழ்நிலைதான் ஏற்பட்டிருக்கிறது ......... லூக்கா - 1 ;1 - 4 வசனங்களைப் படித்தால் இது விளங்கும் .

ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்ததாக குறிப்பிடுகிறார் ........ பகுத்தறிவு .

Stephen selvam

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #33 on: October 22, 2018, 08:43:15 AM »
Romans 9 th chapter may help you all I think..

It's no a direct answer but can help a little bit to understand the lord's work.

Vickyalpha

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #34 on: October 22, 2018, 09:40:39 AM »
இதற்கும் roman 9 ம் அதிகாரத்திற்கும் என்ன சம்பந்தம் brother? கொஞ்சம் விளக்கி கூற முடியுமா?

Stephen selvam

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #35 on: October 22, 2018, 10:56:30 AM »
Neengal padithal puriyum endru ninaikkiren...

Vickyalpha

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #36 on: October 22, 2018, 11:18:11 AM »
படித்தும் புரியவில்லை என்றுதான் உங்களிடம் கேட்கிறேன்.
கொஞ்சம் விளக்கி கூற முடியுமா உங்களால்?
« Last Edit: October 22, 2018, 11:20:46 AM by Vickyalpha »

Stephen selvam

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #37 on: October 22, 2018, 04:31:42 PM »
Mannikkavum...

Ennudaya padhil reply # 14 Ku send pannadhu... Reply # tharama poitan....