Author Topic: லூக்கா எழுதிய சுவிசேஷம்  (Read 4899 times)

udaya

  • Guest
லூக்கா , தான் எழுதிய நூல், அது எழுதப்பட்ட சூழலை , அதிகாரம் 1:1-4 வரையிலான வசனங்களில் விவரிக்கிறார்.

இதின் சாராம்சம்:

1.ரோம அதிகாரியான தெயோபிலுவுக்கு எழுதுகிறார்.
2. தான் காணாத , ஆனால் கேள்விப்பட்ட சங்கதிகளை பற்றி எழுதுகிறார்.
3. ஆளாளுக்கு சரித்திரம் எழுத முற்பட்டதை கூறுகிறார்.
4. ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்ததாக கூறுகிறார்.
5. தெயோபிலுவுக்கு கூறப்பட்ட விஷயங்கள் உண்மை என்று கூற முற்படுகிறார்.

ஆனால் , பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதியதாக எங்கேயும் கூறவில்லை.
( பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டது என்பது நமது நம்பிக்கை )

எனவே , செவிவழி செய்திகளை மட்டும் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட லூக்கா சுவிசேஷம் , மற்ற சுவிசேஷங்களோடு பல இடங்களில் ஒத்துபோகாமலிருப்பதில் வியப்பில்லை.

உதாரணமாக......

இயேசு பிறந்த பின்னர், நிகழ்ந்ததாக மத்தேயு கூறும் எந்த விஷயத்தையும் லூக்கா கூறவில்லை.
ஏரோதின் கோபத்தினால் அவர் பெற்றோர் எகிப்துக்கு ஓடிப்போனதையொட்டிய நிகழ்வுகளை லூக்கா சரியாக விசாரிக்கவில்லை என்று தெரிகிறது .
( 2 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளை ஏரோது கொன்ற மிகப்பெரிய விஷயத்தை லூக்கா கேள்விபடவில்லை போலிருக்கிறது.)
மாறாக , மத்தேயு கூறும் எந்த பாதிப்புமின்றி , இயேசு வளர்ந்ததை விவரிக்கிறார்.

இதே போன்று பல முறை மற்ற சுவிசேஷங்களிலிருந்து வேறுபடுகிறார். ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்ததாக கூறும் லூக்கா , முக்கியமான தகவல்களை அளிக்காமல் விட்டு விட்டார்.
எனவே , பரிசுத்த ஆவியின் ஏவுதலால் , இதை தான் எழுதியதாக அவர் கூறாமல் விட்டதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.

ஆக , செவிவழி செய்திகளை மட்டும் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட லூக்கா சுவிசேஷத்தில் கூறப்படும் விஷயங்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிப்பது. !!!!!!!


nikhil

  • Guest
Re: லூக்கா எழுதிய சுவிசேஷம்
« Reply #1 on: July 18, 2015, 07:20:46 AM »
என்ன செல்ல வரீங்க சகோ....

udaya

  • Guest
Re: லூக்கா எழுதிய சுவிசேஷம்
« Reply #2 on: July 19, 2015, 07:10:50 AM »
லூக்கா எழுதிய நூல் - இது முழுமையாக மனித முயற்சியில் உருவான ஒன்று. பரிசுத்த ஆவியின் பங்களிப்பு இதில் இல்லை.

Selvamvijayan

  • Guest
Re: லூக்கா எழுதிய சுவிசேஷம்
« Reply #3 on: August 13, 2015, 10:21:31 AM »
சகோதரே: எனக்குள் நீண்ட நாட்களாக உள்ள ஒரு ஐயப்பாட்டை விளக்கவும்..... ஆண்டவர் ஐந்து மற்றும் ஏழு அப்பங்களை ஆயிரக்கணக்கானவர்களுக்கு பகிர்ந்தளித்த பின்பு முறையே பன்னிரண்டு மற்றும் ஏழு கூடைகளில்
மீதமுள்ளவைகளை சேகரிக்கின்றனர். இது பற்றி கருத்துக் கூறவும்.....

udaya

  • Guest
Re: லூக்கா எழுதிய சுவிசேஷம்
« Reply #4 on: August 13, 2015, 11:06:46 PM »
இயேசு கிறிஸ்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு, 2 முறை போஷித்ததாக வேதாகமம் கூறகிறது.

முதலாவதாக...

மத்தேயு 14  , லூக்கா 9 ,  மற்றும் யோவான் 6 ல்
5 அப்பம் + 2 மீன்கள் > 5000 பேர் (12 கூடை மீதம்)

இரண்டாவதாக...

மத்தேயு 15  மற்றும்  மாற்கு 8 ல்...
7அப்பம் + சிறுமீன்கள் > 4000 பேர் (7கூடை மீதம்)

இந்த இரு நிகழ்வுகளையும் , இயேசு கிறிஸ்து தம் சீடர்களிடையே , கேள்வி- பதிலாக உரையாடுவதாக , மாற்கு 8:19,20 களில் கூறப்பட்டுள்ளது.

இரு நிகழ்வுகளாக கூறப்பட்டிருந்தாலும் ,

5 அப்பம் + 2 மீன்கள் > 5000 பேர் (12 கூடை மீதம்)
என்ற நிகழ்வுதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது
« Last Edit: August 16, 2015, 03:08:26 AM by udaya »