General Category > Tamil Bible

மேரிபாவின் தண்ணீர்/தவறுதலாக பெற்ற தண்டனை

(1/1)

udaya:
மேரிபாவின் தண்ணீர்.  Or தவறுதலாக பெற்ற தண்டனை

மோசே இஸ்ரவேல் மக்களை வனாந்திர பகுதியில் வழிநடத்தி சென்ற போது, அங்கு தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டு , கர்த்தரின் உத்தரவின்படி , கன்மலையை நோக்கி பேசுவதற்கு பதிலாக , கோபத்தில் அதை அடித்து , தண்ணீர் வரவழைத்து , பின்னர் , கர்த்தரிடத்தில் தண்டனையை மோசே பெற்றுக்கொண்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் . மோசே அந்த இடத்திற்கு மேரிபா என்ற பெயரை  சூட்டினார். எண்ணாகமம் 20:7-13

தெரியாத விஷயம் என்னவென்றால் , உண்மையில் கர்த்தர் கன்மலையை அடிக்க சொல்லியிருந்தார் .

யாத்திராகமம் 17 :6 ன்படி.... கர்த்தர் சொன்னது....

அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன். நீ அந்தக் கன்மலையை அடி. அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார். அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.

கர்த்தர் சொல்லியிருந்த இந்த விஷயத்தை , மோசே ஒருவேளை மறந்திருக்க கூடும்...மறக்காமல் இருந்திருந்தால் , கர்த்தரை நினைவு கூறும்படி வேண்டிக்கொண்டு, தண்டனையிலிருந்து தப்பித்து கானானுக்குள் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும்.......poor Moses & Aaron

susan paul:
Bro ... Moses or Aron is not poor. u r poor .......
Because numbers 20 th chapter takes place of kadesh ......
Exodus 17 th chapter taking place of Rephidim ....
Both also not a same place .....
Then how........
God will never do mistakes as a human being we r doing that's all......

udaya:
kadesh , Rephidim எல்லாம் OK தாங்க.....

நிகழ்ச்சி நடந்த்தென்னவோ மேரிபா ங்கற spot ல.

யாத்ராகமத்தில அடிச்சா OK !
எண்ணாகமத்தில அடிச்சா not OK !!!!!!!!

ஆமா .......கன்மலைய அடிச்சதுல கடவுளுக்கு என்னங்க பிரச்சினை ?

udaya:
இஸ்ரவேல் மக்களை மீட்பதற்காக , கர்த்தர் மோசேயை எகிப்துக்கு போகச் சொன்னபோது மோசே கீழ்ப்படியவில்லை.( யாத்திராகமம் 4:13 )
கர்த்தர் கோபமடைந்தார். ( யாத்திராகமம் 4:14 ).
ஆனாலும் தண்டனை கொடுக்கவில்லை. மாறாக , எதையாவது சொல்லி மோசேயை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். ஏனென்றால் அப்பொழுது மோசே கர்த்தருக்கு தேவைப்பட்டார். கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ளாத கர்த்தர் தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். ஒருமுறை மோசவை கொல்வதற்கு கூட முயற்சி செய்தார். (யாத்திராகமம் 4:24). கடைசியில் , மலையை அடித்ததை காரணம் காட்டி கானானுக்குள் செல்ல விடாமல் செய்துவிட்டார்.

ஒருவேளை , மோசே , ஆரோன் போன்ற முதியோர்கள் கானானில் நடைபெறப்போகும் யுத்தத்திற்கு தகுதியற்றவர்கள் என்று கர்த்தர் நினைத்திருக்கலாம். அதனால்தான் யோசுவா போன்ற திடசாலிகளை வைத்துக்கொண்டார்.

வனாந்திர பகுதியில் பயணம் மேற்கொள்ளும்போது தண்ணீர் என்பது அவசியமான தேவை. தண்ணீர் வேண்டும் என்ற வேண்டுகோள் நியாயமான ஒன்று. இதை கேட்டதற்கு கர்த்தர் கோபித்துக்கொண்டார் என்ற விஷயம் ஆச்சரியமான ஒன்று.  தண்ணீருக்கே கோபித்துக்கொண்ட " கோபக்கார கடவுள் " தன் குமாரனை கொடுத்தார் என்ற கூற்று அதைவிட ஆச்சரியமான மற்றொன்று.

எப்படியிருந்தாலும் , தண்ணீர் கேட்டவர்கள் கானானுக்கு உள்ளே.....
தண்ணீர் வாங்கி கொடுத்தவர்கள் கானானுக்கு வெளியே......

udaya:
தண்ணீர் கணக்கு :

யாத்திராகமம் 12 ன்படி..

எகிப்தை விட்டு புறப்பட்ட
இஸ்ரவேல் புருஷர்கள்.      =  6,00,000 பேர்
.....................பிள்ளைகள்.    =  3,00,000 ( மதிப்பீடு )
..................... பெண்கள்.        =  5,00,000 ( மதிப்பீடு )
பல ஜாதியான ஜனங்கள.    =  1,00,000 ( சுமார் )
                                                ________________________
ஆக மொத்தம்.                        =  15,00,000 பேர்.


இவர்கள் 15 பேர் கொண்ட (குழு )அகல வரிசையாக தண்ணீர் குடிப்பதாக வைத்துக்கொண்டால் , 1 மீட்டர் , வரிசைகளுக்கு இடையே இடைவெளி விட்டு நின்றால் , நீள் வரிசையின் நீளம் 100 கிலோமீட்டர்.( அடேங்கப்பா !!!!!! )

ஒரு குழு ஒருமுறை தண்ணீர் குடிப்பதற்கு 2 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் , கடைசி குழு 138 நாட்கள் கழித்துத்தான் குடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்.!!!!!!
வழிப்பயணத்திற்கும் சிறிதளவு தண்ணீரை எடுத்து செல்வதாக இருந்தால் 347 நாட்கள் ஆகும்.!!!!!!!!
கால்நடைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதாக இருந்தால் இன்னும் அதிகம். 50 பேர் கொண்ட குழுவாக குடித்திருந்தால்கூட 104 நாட்கள் கணக்காகிறது.

15  லட்சம் மக்களின் தினசரி குடிநீர் தேவை ஏறக்குறைய 7500000லிட்டர்கள். இதை எடுத்துச் செல்ல 750 tanker lorryகள் , அல்லது அதற்கு ஈடான கொள்ளளவு கொண்ட கால்நடை வாகனங்கள் தேவைப்படும். இது ஒரு நாளுக்குறிய தேவை.  1 வருட தேவை........நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். பயண காலமாகிய 40 வருடங்களில் பாலைவனத்தில் எத்தனை நீர் ஆதாரங்களை  அவர்கள் சந்தித்திருக்கக்கூடும் ? 3....அல்லது 4 ?

கணக்கு மிகவும் எகிறி செல்வதால் , குளித்தல் ,துவைத்தல் , டாய்லெட் உபயோகம் இவைகளை சேர்த்துக் கொள்ளவில்லை.!!!!!

மற்ற மதிப்பீடுகள் : ( தோராயமாக )

மோசே மக்களிடம் பேசவேண்டுமானால் , 370 ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும்.  Circlic segment  வடிவில் அவர்களை நிற்க வைத்தால்கூட கடைசி வரிசை  , மோசே நிற்கும் இடத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். அவர்களிடம் கர்த்தரின் உத்தரவுகளை எடுத்துச் சொல்ல 3 மில்லியன் வாட்ஸ் ஆடியோ பவர் தேவைப்படும்.பயணிகள் ஒரு இடத்தை கடக்க 8 நாட்கள் ஆகும். அதாவது முதல்வரிசைக்கும் கடைசி வரிசைக்கும் இடையே 1 வார இடைவெளி !!!!!!!!!

வனாந்திர யாத்திரையும் சற்று மிகைப்படுத்தப்பட்டது போல காட்சியளிக்கிறது.

Navigation

[0] Message Index

Reply

Go to full version