Author Topic: I don't believe in God who doesn't feed hunger in this world but give eternal li  (Read 5418 times)

arullpm

  • Guest
சாகோதரா தாங்கள் சொல்வது உன்மைதான்.

ஆனால் நான் ஒன்று அறிந்து கொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்.
பழைய ஏற்பாட்டு் காலம் வரை தேவன் வெளிப்படையாய் தன் காரியங்களை செய்து வந்ததாக பைபிள் கூறுகிறது

ஏன் கிறிஸ்து வந்தபின்னர் அவர்  அதை செய்யாமல் விட்டார்?

மாறாக கிறிஸ்து பிதாவிற்கு ஒப்பான கிரியைகளை செய்தார்.
பினியாளிகளை சுகப்படுத்தினார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார், பசியாய் இருந்தவர்களுக்கு போஷித்தார், அதும் வானந்தரத்தில் செய்யப்பட்டதிற்கு ஒப்பான  அதேபோல வானத்தை பார்த்து ஆசீர்வதித்து அப்பமும் மீனும் அளித்தாரே

ஏன் பிதா அதை செய்யாமல் குமாரன் செய்தார் ?

udaya

  • Guest
@:  பழைய ஏற்பாட்டு் காலம் வரை தேவன் வெளிப்படையாய் தன் காரியங்களை செய்து வந்ததாக பைபிள் கூறுகிறது.
ஏன் கிறிஸ்து வந்தபின்னர் அவர்  அதை செய்யாமல் விட்டார்?

சற்று உற்று கவனித்தால் ,  இயேசு கிறிஸ்துவுக்கு முன்பே , அதாவது பழைய ஏற்பாட்டின் காலத்திலேகூட , பாதிகாலம் தீர்க்கதரிசிகளின் வழியாகவே கிரியைகளை நடப்பித்தார். இயேசு கிறிஸ்துவை கூட ஒரு தீர்க்கதரிசியாகவே செயல்பட அனுமதித்தார் என்று கூறலாம்.

@:    மாறாக கிறிஸ்து பிதாவிற்கு ஒப்பான கிரியைகளை செய்தார்.

மன்னிக்கவும்.... கிறிஸ்து பிதாவிற்கு ஒப்பான கிரியைகளை செய்யவில்லை.

உதாரணமாக , பிதா , வெறுமையிலிருந்து பொருட்களை உண்டாக்கினார். "மன்னாவை" கூறலாம் ....ஆனால் இயேசு கிறிஸ்து பொருட்களை உருவாக்க வேறொரு பொருள் தேவைப்பட்டது. ( தண்ணீர்-திராட்சைரசம் , 5 அப்பம் 2மீன்- ஏராளமான உணவு. ) அவருக்கு அளிக்கப்பட்ட இந்த வறையறை மற்றும் வரம்பினால்தான் பிசாசு , கற்களை அப்பங்களாக மாற்றும்படி கேட்டுக்கொண்டான்.இவ்வாறாக தீர்க்கதரிசி அளவுக்கு அவருக்கு வல்லமை கொடுக்கப்பட்டிருந்தது.

சரி......ஏன் இயேசு கிறிஸ்துவுக்கு முழு வல்லமை
அளிக்கப்படவில்லை ? ......பிதா அதை அவருக்கு தர தயாராக இல்லை.

வேதாகம பகுதியை கவனித்தால்..........

நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
ஏசாயா 42 :8

என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன், என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக்கு குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.
ஏசாயா 48 :11

முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை. ஏசாயா 46 :9

மேற்கண்ட வசனங்கள் , பிதா , தன் மகிமையை (வல்லமையை ) வேறொருவருக்கு அளிக்க தயாராக இல்லை என்பதையும் , அவர் தனக்கு சம்மாக யாரையும் வைக்கவில்லை என்பதையும் தெளிவாக கூறுகிறது.

மேலும்...

பிதாவின் கிரியைகளில் , ஒரு துயரம் கலந்திருக்கும். அதாவது ஒருபுறம் நன்மை ஏற்பட்டாலும் மறுபுறம் துன்பம் கலந்திருக்கும். ஆனால் இயேசுவின் கிரியைகளில் நன்மை மட்டுமே இருக்கும். ( அசுத்த ஆவிகளை பன்றிகளுக்குள் அனுப்பி , அதன் உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நிகழ்வு தவிர ).

தனக்குப் பிறகு வருபவர்கள் , தன்னை விட பெரிய கிரியைகளை செய்வார்கள் என்று இயேசு கிறிஸ்து கூறியிருந்தார். ஆனால் பேதுரு , 2 பேரை கொன்று ஒருவரை உயிரோடெழுப்பி ஒரு ஏழைக்கு உதவியதோடு சரி....பெரிதாக ஒன்றுமில்லை !

இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு பிறகு கூட பிதா கிரியை செய்தார் என்று நினைக்கிறேன் ( சவுல் பவுலாக மாற காரணமாயிருந்த நிகழ்வு )

தற்காலத்தில் , இயேசு கிறிஸ்து கூறியிருந்தபடி , பெரிய அதிசயங்களையும் அற்புதங்களையும் , யாரும் நிகழ்த்தவில்லை என்று உறுதியாக கூறலாம்.

இவ்வாறு கற்பனைக்கெட்டாத கிரியைகள் சிறிது சிறிதாக மாறி தற்சமயம் நாம் காணும் இந்த நிலைக்கு வந்ததை பரிணாம வளர்ச்சியின் விளைவு என்று கூறலாம். ஆகையால்தான் , வேதாகம எழுத்தாளர்கள் , காலப்பரிணாம மாற்றத்திற்கு ஏற்றவாறு அதிசயங்களை நமக்கு தந்திருக்கின்றனர்.  " கறாரான பிதா " " கனிவான இயேசுவாக " பரிணமித்ததும் இதனால்தான். மோசேயின் நியாயபிரமாணம் ,  காலபரிணாமத்தினால் காணாமல் போனதுகூட இதனால்தான் !
« Last Edit: September 13, 2015, 07:27:00 AM by udaya »

arullpm

  • Guest
@:பிதா , வெறுமையிலிருந்து பொருட்களை உண்டாக்கினார்.

பதில்:
மன்னிக்கவும் பிதா வெறுமையில் இருந்து மாத்திரம் உண்டாக்குபவர் அல்ல....
உங்களையும் என்னையும் உருவாக்க அவருக்கும் ஒரு பொருள் தேவைப்பட்டது

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2 :7

தேவன் அற்புதத்தை எதிலிருந்து வேண்டுமானாலும் செய்ய வல்லவராய் இருக்கிறார்.

இயேசு குரானில் ஒரு பறவையை மண்ணினால் செய்து அதற்கு நாசியிலே ஊதும் பொழுது அது
ஜீவாத்மாவானது என்று குறுப்பிடகிறது
குரான் 3:49

சிருஷ்டிப்பு கர்த்தருடையதல்லவா!

ஒரு வேலை அது பறவை நாம் மனிதன் என்று சொலவீகலாயின்

மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும், அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு, இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள், ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே, மிருகத்தைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல, எல்லாம் மாயையே.
20 எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது, எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது. பிரசங்கி 3 :19,20



@:சரி......ஏன் இயேசு கிறிஸ்துவுக்கு முழு வல்லமை
அளிக்கப்படவில்லை ? ......பிதா அதை அவருக்கு தர தயாராக இல்லை.

பதில்:

மன்னிக்கவும்....

சர்வமும் அவருக்கு ஒப்புவிக்கப்பட்டுள்ளது

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மத்தேயு 28 :18

27 சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே. ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.
28 சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
1 கொரிந்தியர் 15 :28

பழைய ஏற்பாடு தீர்கதரிசிகளுக்கு பிதா எதும் சொல்லவில்லை என்றால் வேலையே இல்லை

மாறாக இயேசுவுக்கு ஓய்வெடுக்க நேரமே இல்லை.

@:வேதாகம பகுதியை கவனித்தால்..........

நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். 
ஏசாயா 42 :8 

என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன், என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக்கு குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன். 
ஏசாயா 48 :11 

முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை. ஏசாயா 46 :9 

மேற்கண்ட வசனங்கள் , பிதா , தன் மகிமையை (வல்லமையை ) வேறொருவருக்கு அளிக்க தயாராக இல்லை என்பதையும் , அவர் தனக்கு சம்மாக யாரையும் வைக்கவில்லை என்பதையும் தெளிவாக கூறுகிறது.

பதில்:
மிகவும் சரிதான்...

ஆனால்  நீங்கள் கூறும் "நாம் மனுசனை நமது சாயலாக என்பதை" தேவ துாதர்களுக்கு தான் சொன்னதாக கூறி தேவ துாதர்களை தனக்கு நிகராக வைத்தார் என்பதை நான் ஏற்றுக் கொள்வது தான் எப்படி என்பதை சொல்லுங்களேன்!!

தம்முடைய சாயல் எனப்படும்போது தேவதுாதர்கள் வெறும் ஆவிகள் தானே.

நாமோ மாம்சமும், ஆத்மாவும் , ஆவியுமானவர்கள் பிறகு எப்படி அவர்கள் சாயலாய் நாம் இருப்போம்?.

மாறாக நாம் கிறிஸ்து(மாம்சம்) மற்றும் ஆவினவருடைய சாயல்(தேவ துாதர்கள் சாயல் இல்ல பாஸ்)  தேவன் கூட சில இடங்களில் தன்னுடைய ஆத்மாவை பற்றி பேசுகிறார்.
கனக்கு சரியா..!!!

இன்னும் கேலுங்கள்..

9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14 :9
மேலும்...10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
யோவான் 14 :10 (இது ஒரு வசனம்தா இதுமாரி இயேசு பிதாக்கு நிகரா தன்ன சொல்ர நிரயா வசனம் இருக்கு ஏன் சீசர்கள் கூட நிரயா வசனத்தில பிதாக்கு நிகரா இயேசுவ சொல்லிருக்காங்க)

3 ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 1 கொரிந்தியர் 12 :3

நீங்க ஆவியானவர நம்புரீங்களானே எனக்கு தெரியல....

(இயேசுவ நோக்கி பாருங்க பாஸ் ஆணடவர் பேசுவாரு கொடுத்த வழிய விட்டுட்டு வேர எங்கயோ தேடுரீங்க அதா உங்களுக்கு பதில் இன்னும் வரல)

@:பிதாவின் கிரியைகளில் , ஒரு துயரம் கலந்திருக்கும். அதாவது ஒருபுறம் நன்மை ஏற்பட்டாலும் மறுபுறம் துன்பம் கலந்திருக்கும். ஆனால் இயேசுவின் கிரியைகளில் நன்மை மட்டுமே இருக்கும். ( அசுத்த ஆவிகளை பன்றிகளுக்குள் அனுப்பி , அதன் உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நிகழ்வு தவிர ).

பதில்:
இதும் சரிதா சகோதரா சகல அதிகாரம் அவருக்கு கொடுக்க பட்டிருக்கே..
( மனுசன காக்க வந்ததால இவரு பன்றிகளை மட்டுமே காலி பன்னாறு. அதே பழைய ஏற்பாட்டு கர்த்தரா அவர் வந்துருந்தா உரிமையாளர்களுக்கும் சேர்த்து ஐயோ!!!)

@:தனக்குப் பிறகு வருபவர்கள் , தன்னை விட பெரிய கிரியைகளை செய்வார்கள் என்று இயேசு கிறிஸ்து கூறியிருந்தார். ஆனால் பேதுரு , 2 பேரை கொன்று ஒருவரை உயிரோடெழுப்பி ஒரு ஏழைக்கு உதவியதோடு சரி....பெரிதாக ஒன்றுமில்லை !

பதில்

பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமா எதுபன்னாலும் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்க படாது பாஸ்
அவங்க இரண்டு பேரும் பேசுனது அவருக்கு விரோதமா தான்
3 பேதுரு அவனை நோக்கி; அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? அப்போஸ்தலர் 5 :3
9 பேதுரு அவளை நோக்கி; கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்களும் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டு போவார்கள் என்றான். அப்போஸ்தலர் 5 :9

அற்புதங்கள்:
6 அப்பொழுது பேதுரு; வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை. என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி, அப்போஸ்தலர் 3 :6
7 வலதுகையினால் அவனைப் பிடித்துத்தூக்கிவிட்டான். உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது. அப்போஸ்தலர் 3 :7

12 அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலோமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள். அப்போஸ்தலர் 5 :12 ( அநேக என்பதற்க்கு அற்த்தம் உங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன் )

15 பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின் மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
அப்போஸ்தலர் 5 :15
16 சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள். அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். அப்போஸ்தலர் 5 :16
(இயேசு கிறிஸ்துக்கி்ட்டயாவது துணிய தொட்டதால அந்த ஸ்திரி குணமாக்கப்பட்ட
பேதுரு நிழல் பட்டதுக்கே சுகமானங்க நீங்க கேட்டதுக்கு பதில் போதுமா இல்லனா)

8 ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
அப்போஸ்தலர் 6 :8

13 அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப் பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான். அப்போஸ்தலர் 8 :13

17 அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து; சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். அப்போஸ்தலர் 9 :17

40 பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி; தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். அப்போஸ்தலர் 9 :40

அப்பறம் பவுல் பர்னபானு இன்னும் பெரிய லிஸ்டே இருக்கு.
நீங்க எத வச்சி பேதுரு மட்டும் அதும் அவர் பன்ன அற்புதத்தையம் உங்களுக்கு தகுந்தமாரி சுருக்கினீங்கனு தெரில....?
இது முழு பூசனிக்காய சோத்துல மறைக்கராரி இருக்கு...


@:இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு பிறகு கூட பிதா கிரியை செய்தார் என்று நினைக்கிறேன் ( சவுல் பவுலாக மாற காரணமாயிருந்த நிகழ்வு )

பதில்:

அட அங்க பேசுன கர்த்தர் யாருனு பாருங்க சகோ

5 அதற்கு அவன்; ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்; நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
அப்போஸ்தலர் 9 :5

தற்காலத்தில், இயேசு கிறிஸ்து கூறியிருந்தபடி , பெரிய அதிசயங்களையும் அற்புதங்களையும் , யாரும் நிகழ்த்தவில்லை என்று உறுதியாக கூறலாம்.

பதில்:
(விசுவாசம் வேணும் பாஸ் இப்பயும் மூலை முடுக்குல நடந்துடுதா இருக்கு உங்களுக்குதா தெரியல )
அற்புதம் பெருசா நடக்கனும் னு அவசியம் இல்ல
என்னோட வாழ்க்கைல நிரையா நடந்துருக்கு அதனால நான் உறுதியா நிக்கிறேன் விசுவாசிக்கிறேன். இதோ நான் கன்னார அற்புதம் பார்த்துருக்கேன் அதுக்கு ஆவியானவர் சாட்சி என் கூட இருக்குற சகோதர நண்பர்கள் சாட்சி

உங்க வாழ்க்கைல நடக்கலனா அது உங்க விசுவாச குறைவு l.
விசுவாசம் இல்லாம ஒரு நன்மையும் கர்த்தர் கிட்ட பெற முடியாது சகோ.

பெரிய பெரிய அற்புதம் இன்னும் நடக்குது உங்களுக்கு தெரியலன்றதுக்காக எல்லாருக்கும் தெரியலனு நினைக்க வேண்டாம்..

@:இவ்வாறு கற்பனைக்கெட்டாத கிரியைகள் சிறிது சிறிதாக மாறி தற்சமயம் நாம் காணும் இந்த நிலைக்கு வந்ததை பரிணாம வளர்ச்சியின் விளைவு என்று கூறலாம். ஆகையால்தான் , வேதாகம எழுத்தாளர்கள் , காலப்பரிணாம மாற்றத்திற்கு ஏற்றவாறு அதிசயங்களை நமக்கு தந்திருக்கின்றனர்.  " கறாரான பிதா " " கனிவான இயேசுவாக " பரிணமித்ததும் இதனால்தான். மோசேயின் நியாயபிரமாணம் ,  காலபரிணாமத்தினால் காணாமல் போனதுகூட இதனால்தான் !

பதில்:
சரிதான் பாஸ் ஆனா இது நியாயபிரமாணதோட காலம் இல்ல ஆவிக்குரிய உடன்படிக்க காலம்.
முதல ஆவிக்குரிய உடன்படிகனா என்னனு  கத்துக்கங்க...

6 புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது. 2 கொரிந்தியர் 3 :6
7 எழுத்துகளினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. 2 கொரிந்தியர் 3 :7
8 ஒழிந்துபோகிற மகிமையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?
2 கொரிந்தியர் 3 :6-8


அப்பறம் எபிரேயர் அதிகாரம் முழுசா ஆவிக்குரிய உடன்படிக்கைய தெளிவா சொல்லுது அத படிங்க..

பிற்காலத்தில் வேத புறட்டார்கள் வருவார்கள் எங்களுக்கு சொல்லிருக்காங்க பாஸ் வேர எதாவது டிரை பன்னுங்க.....

If you really don't understand, I will pray for u to be touched. But otherwise lord will meet u.

udaya

  • Guest
@:  பிதா வெறுமையில் இருந்து மாத்திரம் உண்டாக்குபவர் அல்ல....உங்களையும் என்னையும் உருவாக்க அவருக்கும் ஒரு பொருள் தேவைப்பட்டது

காலை வாரிட்டீங்களே பாஸ் !" பிதா ,  இயேசுவைவிட ....ஒரு லெவல் மேலே " அப்படிங்கற எண்ணத்தில் மண்ணை போட்டுட்டீங்களே ! .....இயேசுவின் வல்லமையை ஒருபடி உயர்த்திக் காண்பிக்க ஏதாவது வசனம் கிடைக்குமா என்று பார்ப்பதை விட்டுவிட்டு பிதாவின் வல்லமையை ஒருபடி குறச்சு காட்டி கவுத்திட்டீங்களே சகோ.....

சரி இப்படி வைத்துக்கொள்ளலாம்.........பூமி , சூரியன் , சந்திரன் , கோள்கள் , நட்சத்திரங்கள், comets , dwarf , neutron star , black hole , galaxies , cosmic dust , constellations ,  nebulae , supernova.  மற்றும்  பிரபஞ்சத்திலுள்ள அனைத்து astronomical bodies....... போன்ற *சின்ன சின்ன விஷயங்களை * வார்த்தையினால் படைத்தார் !.............யானை , பூனை ,குதிரை , கழுதை , ஒட்டகம் , புறா,  மைனா .....போன்ற கோடிக்கணக்கான * மிகப்பெரிய * ஜீவன்களை படைப்பதற்கு கோடிக்கணக்கான பிடிமண் தேவைப்பட்டது !
சரிங்களா பாஸ் ?

@:  இயேசு குரானில் ஒரு பறவையை மண்ணினால் செய்து அதற்கு நாசியிலே ஊதும் பொழுது அதுஜீவாத்மாவானது என்று குறுப்பிடகிறதுகுரான் 3:49

ஆனால் பைபிள் குழம்புகிறது ...குழப்புகிறது....
ஐலத்திலிருந்து பறவைகள் ஆதி 1:20
மண்ணிலிருந்து பறவைகள் ஆதி 2:19
என்று கூறி குழப்புகிறது !

ஒருவேளை...புனித குரான் உண்மையை சொல்லுகிறதோ !?!?!

@:  சிருஷ்டிப்பு கர்த்தருடையதல்லவா!ஒரு வேலை அது பறவை நாம் மனிதன் என்று சொலவீகலாயின்மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும், அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு, இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள், ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே, மிருகத்தைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல,

ஆக...* .தேவ சாயலில் *  உருவான மனிதன் , மற்ற ஜீவன்களைக் காட்டிலும் விஷேஷித்தமானவன் அல்ல என்று நிரூபித்து விட்டீர்கள் ! ! ! !
நீங்கள் சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது சகோ.....
நோவா கதையில் , பாவம் செய்த மனிதன், பாவம் செய்த மிருகம் என்ற பாகுபாடு இன்றி  , கர்த்தர் அனைவரையும் நீரில் ஆழ்த்தி கொலை செய்தார் !
மனிதன் = மிருகம் !

« Last Edit: September 16, 2015, 07:36:37 AM by udaya »

udaya

  • Guest
@:  எல்லாம் மாயையே.
பரலோகம் மாயையா ?

@:  எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது, எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

உடல், உயிர், ஆத்துமா (?)எல்லாமே மண்ணுக்கு திரும்புகிறதா ?

@:  சர்வமும் அவருக்கு ஒப்புவிக்கப்பட்டுள்ளதுஅப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.மத்தேயு 28 :1827

இயேசு கிறிஸ்து தான் அவ்வாறு சொல்லிக் கொண்டார் . பிதா அதை கொடுக்க மறுத்துவிட்டார்.

@:  பழைய ஏற்பாடு தீர்கதரிசிகளுக்கு பிதா எதும் சொல்லவில்லை என்றால் வேலையே இல்லை

ஓ...வேலையில்லா திண்டாட்டத்தை தவிர்த்து விட்டார் !

@:  மாறாக இயேசுவுக்கு ஓய்வெடுக்க நேரமே இல்லை.

ஓய்வெடுக்க இயேசு கிறிஸ்து வரவில்லை bro...




@:  பதில்:மிகவும் சரிதான்...ஆனால்  நீங்கள் கூறும் "நாம் மனுசனை நமது சாயலாக என்பதை" தேவ துாதர்களுக்கு தான் சொன்னதாக கூறி தேவ துாதர்களை தனக்கு நிகராக வைத்தார் என்பதை நான் ஏற்றுக் கொள்வது தான் எப்படி என்பதை சொல்லுங்களேன்!!

ஏதோ சொல்ல வர்ரீங்க பாஸ்.....தமிழ் typing ஒத்துழைக்க வில்லை என்று மட்டும் தெரிகிறது...
சிரமம் பாராமல் மீண்டும் ஒருமுறை எளிமைப்படுத்தி கொடுக்கவும் ...நன்றி

@:    நாமோ மாம்சமும், ஆத்மாவும் , ஆவியுமானவர்கள்

மாம்சம்.....ஓகே
ஆவி...மாம்சத்தை இயக்கும் ஒரு சக்தி.... ஓகேவா?
ஆனா...ஆத்மா ?.........கற்பனையான ஒன்று.

@:      பிறகு எப்படி அவர்கள் சாயலாய் நாம் இருப்போம்?.

இருக்க மாட்டோம் !

@:    மாறாக நாம் கிறிஸ்து(மாம்சம்) மற்றும் ஆவினவருடைய சாயல்(தேவ துாதர்கள் சாயல் இல்ல பாஸ்) 

OK OK ......ஆவினவருடைய சாயல் என்றால் என்ன ?.....தேவ துாதர்கள் சாயல் என்றால் என்ன ?

@:  தேவன் கூட சில இடங்களில் தன்னுடைய ஆத்மாவை பற்றி பேசுகிறார்.

எங்கே என்று சொல்லுங்க ji

@:  கனக்கு சரியா.

சற்று பிழையாக இருக்கிறது.....


udaya

  • Guest
@:    இன்னும் கேலுங்கள்..

கேட்கிறேன்...

@:  அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14 :9மேலும்...10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.யோவான் 14 :10

கூடவே இருந்த பிலிப்புவுக்கே *  டவுட் * வந்திருச்சு பாருங்க....

@:    (இது ஒரு வசனம்தா இதுமாரி இயேசு பிதாக்கு நிகரா தன்ன சொல்ர நிரயா வசனம் இருக்கு

இந்தமாதிரி , இயேசு கிறிஸ்து பிதாவுக்கு நிகராக தன்னை உயர்த்தியதால் தான் கடைசி நேரத்தில்,  பிதா, இயேசுவை கைவிட்டுவிட்டார் என்று நினைக்கிறேன் ...

@:  ஏன் சீசர்கள் கூட நிரயா வசனத்தில பிதாக்கு நிகரா இயேசுவ சொல்லிருக்காங்க)

சொல்லத்தான செய்வாங்க....இதெல்லாம் ஒரு பாய்ன்ட்டா சகோ ?

@:    ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 1 கொரிந்தியர் 12 :3

பவுலடியார்க்கு பணிவான ஆமோதிப்பு...!



udaya

  • Guest
@:  நீங்க ஆவியானவர நம்புரீங்களானே எனக்கு தெரியல....

36000 கிறித்தவ பிரிவுகளில் எந்த பிரிவினர் கூறும் ஆவியானவர் சகோ ?

@:  (இயேசுவ நோக்கி பாருங்க பாஸ்

பார்க்கிறேன் பாஸ்..

@:    ஆணடவர் பேசுவாரு

ரொம்ப நல்லது பாஸ்...

@:  கொடுத்த வழிய விட்டுட்டு வேர எங்கயோ தேடுரீங்க அதா உங்களுக்கு பதில் இன்னும் வரல)

கொடுத்த வழி ...... குழப்பமான வழி.....

@:  ( மனுசன காக்க வந்ததால இவரு பன்றிகளை மட்டுமே காலி பன்னாறு. அதே பழைய ஏற்பாட்டு கர்த்தரா அவர் வந்துருந்தா உரிமையாளர்களுக்கும் சேர்த்து ஐயோ!!!)

சரியா சொன்னீங்க....
மாடு பிரச்சினை பண்ணினா மாட்டுக்காரனை கொல்லனும்னு சொன்னவராச்சே ! ! !

@:  பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமா எதுபன்னாலும் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்க படாது பாஸ்

பயமுறுத்தாதீங்க பாஸ்...

@:  (இயேசு கிறிஸ்துக்கி்ட்டயாவது துணிய தொட்டதால அந்த ஸ்திரி குணமாக்கப்பட்டபேதுரு நிழல் பட்டதுக்கே சுகமானங்க நீங்க கேட்டதுக்கு பதில் போதுமா இல்லனா)

இந்த இரண்டுமே இல்லாம , மருத்துவ முறையில்
வியாதிகள் சுகமாகுது.
பேதுரு நிழல் பட்டு , அன்று எந்தெந்த வியாதிகள் சுகமானதோ....அந்த வியாதிகள் , இன்றைய மருத்துவத்தில் சர்வ சாதாரணமாக குணமாகிறது.

@:  பவுல் பர்னபானு இன்னும் பெரிய லிஸ்டே இருக்கு.

லிஸ்ட் மட்டுந்தான் இருக்கு

@:  நீங்க எத வச்சி பேதுரு மட்டும் அதும் அவர் பன்ன அற்புதத்தையம் உங்களுக்கு தகுந்தமாரி சுருக்கினீங்கனு தெரில....?

பெரிசா ஒன்னுமில்லனுதான் சொன்னேன்.
அதையெல்லாம்  அற்புதம் என்று வைத்துக்கொண்டால் , இன்று இருக்கும் ஆஸ்பத்திரிகளை அற்புத உலகங்கள் என்றும்  டாக்டர்களை கடவுள்கள் என்றும் கூறவேண்டி வரும் .


udaya

  • Guest
@:  அட அங்க பேசுன கர்த்தர் யாருனு பாருங்க சகோ5 அதற்கு அவன்; ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்; நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.அப்போஸ்தலர் 9 :5

இயேசு , பிதாவினிடத்தில் சென்றவுடன், பிதாவைப்போலவே , மனிதர்களை தண்டித்து , நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து விட்டார் !

@:  (விசுவாசம் வேணும் பாஸ் இப்பயும் மூலை முடுக்குல நடந்துடுதா இருக்கு உங்களுக்குதா தெரியல )

மூலை முடுக்கில் நடந்தா எப்படி தெரியும்  ?

@:    அற்புதம் பெருசா நடக்கனும் னு அவசியம் இல்லஎன்னோட வாழ்க்கைல நிரையா நடந்துருக்கு அதனால நான் உறுதியா நிக்கிறேன் விசுவாசிக்கிறேன். இதோ நான் கன்னார அற்புதம் பார்த்துருக்கேன்

தலை வணங்கி , தங்களின் அனுபவங்களுக்கு மதிப்பளித்து வாழ்த்துகிறேன்..

@:    உங்க வாழ்க்கைல நடக்கலனா அது உங்க விசுவாச குறைவு .

என் வாழ்க்கையில் நடக்கவில்லை என்று நான் கவலைப்பட்டதில்லை , எதிர்பார்க்கவுமில்லை....
« Last Edit: September 16, 2015, 07:44:12 AM by udaya »

udaya

  • Guest
@:    விசுவாசம் இல்லாம ஒரு நன்மையும் கர்த்தர் கிட்ட பெற முடியாது

வேறுபடுகிறேன் நண்பா !

பெதஸ்தா குள வியாதியஸ்தனை , இயேசு தானாக வலிய சென்று , சுகமாக விரும்புகிறாயா ? என்று கேட்டும் , அவன்,  குளத்தின் மேல்தான் தனது நம்பிக்கையை வைத்திருந்தான். இயேசு கிறிஸ்துவை நம்பாமல் குளத்தில் இறங்குவதற்கு வழியை யோசித்துக்கொண்டிருந்தான்.. ஆனாலும் இயேசு கிறிஸ்து அவனுக்கு சுகமளித்தார்.

விசுவாசம் இல்லாவிட்டாலும் நன்மை ! ! !

@:    சகோ.பெரிய பெரிய அற்புதம் இன்னும் நடக்குது உங்களுக்கு தெரியலன்றதுக்காக எல்லாருக்கும் தெரியலனு நினைக்க வேண்டாம்..

நினைக்கவில்லை சகோ....

@:  இது நியாயபிரமாணதோட காலம் இல்ல ஆவிக்குரிய உடன்படிக்க காலம்.முதல ஆவிக்குரிய உடன்படிகனா என்னனு  கத்துக்கங்க...

ஆவிக்குரிய உடன்படிக்கை ?........

இது புதுசா ? அல்லது பெயர்மாற்றமா ?

@:    அப்பறம் எபிரேயர் அதிகாரம் முழுசா ஆவிக்குரிய உடன்படிக்கைய தெளிவா சொல்லுது அத படிங்க.

என்னை புத்தக புழுவாக்க முடிவு பண்ணீட்டீங்க ...
சரி.....

@:  பிற்காலத்தில் வேத புறட்டார்கள் வருவார்கள் எங்களுக்கு சொல்லிருக்காங்க பாஸ் வேர எதாவது டிரை பன்னுங்க....

கர்த்தரின் பெயரை உபயோகித்து தங்களது நாவின் வார்த்தைகளை ,  கர்த்தரின் வார்த்தை களாக கூறுபவர்களைக்குறித்தும் எங்களுக்கு சொல்லியிருக்காங்க ....

@:    If you really don't understand, I will pray for u to be touched. But otherwise lord will meet u.

I will let you know if and when this happens. Thank you for your valuable views.
« Last Edit: September 16, 2015, 07:46:30 AM by udaya »