Author Topic: அன்னிய பாஷை குறித்து உங்கள் கருத்து  (Read 7479 times)

sherineric

  • Guest
அன்னிய பாஷை ஏற்புடையதா ?
இல்லையா?
ஏற்புடையது என்றால் அதற்க்கு ஆதாரனமான வேத வசனம் யாது?
இல்லை என்றால் காரனம் என்ன?

இந்நாட்களில் பலர் அன்னிய பாஷை உபயோகிக்கிறார்கள்
இவர்கள் உன்மையில் பேசுகிறார்களா? இல்லை நாடகமா?

udaya

  • Guest
@:      அன்னிய பாஷை ஏற்புடையதா ?இல்லையா?

ஏற்புடையதல்ல.

@:      ஏற்புடையது என்றால் அதற்க்கு ஆதாரனமான வேத வசனம் யாது?இல்லை என்றால் காரனம் என்ன?

அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல்,  * அவிசுவாசிகளுக்கு * அடையாளமாயிருக்கிறது. தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 14 :22

@:        இந்நாட்களில் பலர் அன்னிய பாஷை உபயோகிக்கிறார்கள் இவர்கள் உன்மையில் பேசுகிறார்களா? இல்லை நாடகமா?

இரண்டும் இல்லை...வியாபார யுக்தி.....சத்தமான விளம்பரங்கள் சுலபமாக வெற்றியைத்தரும்.

udaya

  • Guest
இந்த கருத்துக்களத்தில் , இது பற்றி , ஏற்கெனவே நடந்த விவாத்த்தின் ஒரு பகுதி இதோ.....

Some people say it is the language of angels , and the person who speak tongues is actually speaking to GOD. But , I find JESUS never spoke like this , to speak to GOD. Neither GOD spoke to man like this.Some people even say one must speak in tongues to get salvation.

St.Paul make a comprehensive argument on this subject in 1 Corinthians 14 .
He make some interesting points in 1 Corinthians 14:22 .Wherefore tongues are for a sign, not to them that believe, but to them that believe not.அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.

Ok.....here is my opinion :
Speaking in tongues is just gibberish , nonsense .Nobody understand the content or the meaning of spoken stuff. That include the person himself /herself , who speaks in tongues . Noboby can decipher it. I don't see any valid point in speaking in tongues . I believe it is an indication , when mind and body is affected by hysteria or something like that .

Selvamvijayan

  • Guest
வீட்டிலிருக்கும் சிறு பிள்ளைகள் குடும்ப செபம் செய்யும் போது தங்களை அறியாமல் ஒரு பாசையில் பேசுகின்றனர். அதற்கு அர்த்தம் புரியவில்லை ஆனால் மனதில் ஒரு Vision தெரிந்ததாகச் சொல்கிறார்கள் அது என்ன?

Selvamvijayan

  • Guest
வீட்டிலிருக்கும் சிறு பிள்ளைகள் குடும்ப செபம் செய்யும் போது தங்களை அறியாமல் ஒரு பாசையில் பேசுகின்றனர். அதற்கு அர்த்தம் புரியவில்லை ஆனால் மனதில் ஒரு Vision தெரிந்ததாகச் சொல்கிறார்கள் அது என்ன?

udaya

  • Guest
அதற்கு பெயர்.  Hallucination........பிரமை.....
கனவு வகையை சார்ந்தது.

Anand Gaspar

  • Guest
இறையியலில் ஆராய்ச்சி செய்வதற்கும்
இறைவனை ஆராய்ச்சி செய்வதற்கும் வித்தியாசம்  உள்ளது

இந்த உலகம் பைத்தியமாய் பார்க்கிற விஷயங்களை நம்புகிற விசுவாசிகளை தான் தேவன் ரட்சித்திருக்கிறார் 1கொரி 1:21

காணாதவைகளில் துணிவாய் நுழைந்து தூஷிக்க வேண்டாம்

என்னை விசுவாசிக்கறவர்கள் நவமான பாஷையை பேசுவார்கள் என்றாரே!!

ஆகவே அந்நிய பாஷை விசுவாசிகளுக்கு அடையாளம் தானே?

இது என்ன புது பாஷை என்று விசுவாசிகளை பார்த்து பிரமிக்கதக்கதாய் அவிசுவாசிகளுக்கு அது அடையாளமாய் இருக்கிறது என்பது தானே சகோதரனே உண்மையான அர்த்தம்?
எனவே
தெளிவாய் அர்த்தம் உங்களுக்கு தெரிந்தும் ஏன் ஆவியானவரின் செயல்பாடுகளை ஏன் மறுதலிக்கறீர்கள் சகோதரனே

udaya

  • Guest
மன்னிக்கவும்.....
அந்நிய பாஷை என்ற பெயரில் , யாருக்கும் புரியாத, பயனற்ற பேச்சு ( உளறல் ) ஏற்புடையதல்ல .

Anand Gaspar

  • Guest

உங்களுக்கு அந்நிய பாஷை வரத்தின் சுவை இருக்கிறதா? உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால்
யாருக்கும் புரியாத பேச்சு என்று சொல்லி அவருடய வரத்தை மறுதலிப்பது சாக்குபோக்குதானே தவிர வேறொன்றுமில்லை. அப்படியானால் குணமாக்குகிற வரம் தீர்க்கதரிசன வரம் இவைகளெல்லாமும் நவபாஷை வரத்தோடு சேர்ந்ததுதானே?
மேற்கண்ட இரண்டு வரங்களும் பயனளிப்பவையாதலால் உங்களுக்கு ok என்கிறீர்கள்.
இதையேதான் பவுலும் சொல்கிறார் அந்நிய பாஷை சுய பக்தி விருத்திக்காகவும் மற்ற வரங்கள் சபையின் பக்தி விருத்திக்காக என்று
ஆக உங்களுடைய அங்கீகாரத்தை கொண்டு தேவவரத்தை மட்டு்படுத்தாதீர்கள்

உஙகளுடைய மற்ற கருத்துகளையும் படித்தேன். அதை குறித்து.....
இயேசு கிறிஸ்துவையும் அவருடைய கிரியைகளையும் சந்தேகப்பட வேண்டும் என்று துணிகிறவர்கள் அவர் எதை செய்தாலும் நம்ப மாட்டார்கள்
(அவர்கள் என்னையும் பிதாவையும் கண்டும் பகைத்தும் இருக்கிிறார்கள் யோவான் 15:24)
தானும் நம்பாமல் மற்றவர்களையும் நம்ப விடாமல் செய்வது வேத ஆராய்ச்சியாளரான தாங்கள் செய்யலாாமா
என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் பாக்கியவான் என்று சொல்லியிருக்கிறாரே

இயேசு கிறிஸ்துவை நம்பாமல் சந்தேகபடுவதும், நம்பி விசுவாசிப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம் . ஆனால் இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே உங்களால் ஒப்புக்கொள்ள முடியும்.


susan paul

  • Guest
Praise the Lord to all...
Ya its true.. 
In my personal life I had more experience....I would Like to share for God's glory......
Many years I don't taste the anointing ....but when I come to know its important in our personal life....I started to ask God more....he told that I should wait.....I am keep on asking .....i used to cry like baby to get this presious gift...one day I got that gift ......then I I started to praying  in tongues .....when I am praying in tongues... I could feel in my spirit that I am getting some power from God....


Then one day one grand mother has visited my pastor because she affected by the evil spirit ......he prayed ...some of the evil spirit was gone not fully completed....that she could feel in her body....she was idol worshiper long years ago ...so the evil spirit not going away from her.... That time I am doing some other work ....I thought to take rest...that moment holy spirit of God not allowing me to take rest....I could feel it in my spirit ....that lady still laying down in my pastor home....pastor had a small work so he should go  thats y he went ...after few minutes I went near to the grand mother and put kneel down and prayed only in tongues .....when I prayed,  I prayed with the authority .....20 minutes after I went back because my pastor came back ..... I went to continue my work ....some time later...pastor came to me and  said ....( grand mother told) when u prayed for her she felt 4 evils spirit has left and went away from her....
Really I felt IS IT THROUGH ME?  Then I realise God can do ....through me....

Like this more experience I had in my life...so I believe....every one need the Holy Spirit of God.... With the sign of speaking in tongues ....

udaya

  • Guest
@:    reply#8

பரிசுத்த வேதாகமம் ,  நீண்ட கால அளவில் , பலர் எழுதிய நூல் தொகுப்பு .
கால மாறுதல்களாலும் , எழுதிய பலரும் தங்கள் சொந்த கருத்துக்களையும் இடை சொருகிக்கொண்டதாலும் , வேதாகமம் " சீர்மிகு " அந்தஸ்தை இழந்து நிற்கிறது.
மேலும் , வேதாகமத்தில் எந்தெந்த புத்தகங்கள் மற்றும் பகுதிகள் இடம் பெறவேண்டும் என்பதை * மனிதர்கள்தான் * தீர்மானித்தார்கள் , என்ற உண்மையையும் கருத்தில் கொள்வோமானால் , இதில்  எந்த அளவு  மனித சிந்தனை மற்றும் விருப்பம்  முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிய இயலும்.
ஆகவே ,  *அறிவுடைமையின் * அடிப்படையில் வேதகம கருத்துக்களை சீர்தூக்கி சிந்தித்து  பின்பற்றுவது சாலச்சிறந்த்து என்பது என் கருத்து. ஆனால் , யாரும் சிந்தித்து செயல்பட்டுவிடக்கூடாது என்பதில் , வேதாகம எழுத்தாளர்கள் தெளிவாக உள்ளனர்.

எனவேதான்.........

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.

போன்ற வார்த்தைகளினால் , அறிவுடைமை வளர்ந்துவிடாமல் பாதுகாத்தனர்.
அப்போஸ்தலனாகிய பவுல் , மக்களை கட்டுக்குள் கொண்டுவர எடுத்த நடவடிக்கைகளை , தொடர்ந்து வந்த மதத்தலைவர்களும் எடுத்து ,  இந்நாள் வரை மதத்தையும் தங்களையும் காப்பாற்றிக்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும்....

வேதாகமத்தை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே சிறிது சிறிதாக அரும்பி வருகிறது. இது காலத்தின் கட்டாயம்.

" பூமியின் அஸ்திபாரம் ! " ,
" மலை மேல் ஏறி பூமியின் சகல ராஜ்ஜியங்களையும் காண்பித்தல் " ,
" உலகின் அனைத்து விலங்குகளையும் ஒரு படகில் ஏற்றி மாதக்கணக்கில் நீரில் பயணம் செய்தல் " .....இன்னும் எண்ணற்ற காரியங்களை மக்கள் பொருட்படுத்துவதில்லை.

அந்நிய பாஷை.....இதில் ஒன்று.

Nobody can understand it , translate it , decipher it , decode /encode it , write it , read it , repeat it - atleast once............not even the person who spoke it.

அந்நிய பாஷை என்பது " வரம் " என்றுவேறு கூறுகிறீர்கள் !!..........இருக்கட்டும் ..... தங்களுக்கு இவ்வாறு கருத்துக்கூற அனத்து உரிமையும் உண்டு.ஆனால் , அதை மற்றவர்கள் மீது திணிப்பது, தவிர்க்கப்படவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

என்னைப்பொருத்தவரை , என் கருத்துக்களை , இக்கருத்துக்களத்தில் சமர்ப்பிக்கிறேன். யாரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை .  எதிர் கருத்து கூறவும் எந்த தடையும் இல்லை.

நானும் , மற்றவர்களை விமர்சிப்பதில்லை.... மாறாக அவர்களின் கருத்துக்களை மட்டும் விமர்சிக்க விரும்புகிறேன்.

தங்களின் மேலான ஒத்துழைப்புக்கு நன்றி.


வழிப்போக்கன&#3

  • Guest
இப்பொழுது சபையில்  பேசுவது அந்நியபாஷையே இல்லை...

1 கொரி 14 .27 , 28
யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால் , அது இரண்டுபேர் மட்டில் , அல்லது மிஞ்சினால் மூன்று பேர் மட்டில் அடங்கவும் , அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும் , ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும் .

அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால் , சபையிலே பேசாமல் , தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன் .

தற்போது எத்தனை சபைகளில் அர்த்தஞ்  சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள் ...
அப்படியே இது தான் அர்த்தம் என்று சொல்வர்கள் எனில் அதை எதை அடிப்படையில் விசுவாசிப்பது .

udaya

  • Guest
" எத்தனை சபையில் ".....என்று கேட்டிருக்கிறீர்கள்.
"  எந்த சபையில் " .... என்றுகூட கேட்கலாம் !

அர்த்தம் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்....
தாங்கள் பேசியதை மீண்டும் ஒருமுறை சரியாக அதே போன்று பேசிக்காட்டினாலே போதும்.

அந்நிய பாஷையை எழுத்து வடிவில் எழுதமுடியுமா என்று சரியாக தெரியவில்லை.

john

  • Guest
இன்றைய சபைகளில் அந்நிய பாஷை என்ற பெயரில் பேசப்படும் அனைத்தும் போலியே! 

udaya

  • Guest
அந்நிய பாஷையில் , போலி / அசல் என்று ஏதாவது இருக்கிறதா ?

அந்நிய பாஷையே போலிதான் ( ஏமாற்று வேலைதான் )