Author Topic: மனிதனை தேவன் உருவாக்கினார் தேவன் எப்படி ħ  (Read 3898 times)

Sanjeev Sharma

  • Guest
மனிதனை தேவன் உருவாக்கினார் தேவன் எப்படி உருவானார் ?
« Last Edit: September 11, 2015, 11:04:54 AM by Sanjeev Sharma »

arullpm

  • Guest
ரொம்ப பொிதாக யோசிக்க வேண்டாம். அதே நேரத்தில் சொல்வதால் குழப்பமடைய வும் வேண்டாம்.
நான் சொந்தமானதை அல்ல பரிசுத்த ஆவியானவர் சாட்சியாய் சொன்னதையே உங்களுக்கு சொல்லகிறேன்.
பிழையிருந்தால் மற்றவர்வர்களை விட சிறியவனாய் என்னிக்கொள்ளபடுவேன்.

உருவாக்கம் என்னும் சொல்லையும் அதன் பொருளையும் சற்றே மறந்து விடுங்கள்
தொடக்கமும் அல்லாது முடிவும்  அல்லாது ஒரு நித்தியம் காணப்படும் அதுவே தேவன்
உருவாக்கம் என்பது அவரிடம் இருந்துதான் துவங்குகிறது அனால் அவருக்கு அது கிடையாது.

Sanjeev Sharma

  • Guest
நன்றி Arullpm

udaya

  • Guest
@:    ரொம்ப பொிதாக யோசிக்க வேண்டாம்.

சரியாக சொன்னீர்கள்...arullpm..
யோசிப்பது , கிறிஸ்தவத்திற்கு ஆகாது !!!!!

அதனால்தான் , யோசனைக்கு தொடர்புடைய * மூளை brain * என்ற பதத்தை வேதகம எழுத்தாளர்கள் இரட்டடிப்பு செய்து விட்டார்கள் ! ( கண்,காது,வாய்,கை,கால்....என்று பல உறுப்புகளக பற்றி வேதாகமம் கூறினாலும் no " மூளை " ) !

எதைச்சொன்னாலும்  குழந்தைகளைப் போல ஏற்றுக்கொள்ள வேண்டும்... சரிங்களா ?
« Last Edit: September 12, 2015, 02:47:36 AM by udaya »

Sanjeev Sharma

  • Guest
ஒரு வேலை தேவன் இந்த விஷயத்தை நம் மூளைக்கு எட்டாத மறைப்பொருலாக வைத்திருப்பாரோ !
« Last Edit: September 12, 2015, 09:59:16 AM by Sanjeev Sharma »

udaya

  • Guest
இது சாத்தியம்தான்.....

ஒருவேளை , பின்னாளில் , தீர்க்கதரிசிகளின் வழியாக வெளிப்படுத்தக்கூடும் .

அல்லது....

அறிவு வளர்ச்சியடைந்து ,  நாமாகவே கண்டுபிடித்துக்கொள்ள  தேவன் நினைத்திருக்கலாம் !

Sanjeev Sharma

  • Guest
நன்றி உதயா

arullpm

  • Guest
9 எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. 1 கொரிந்தியர் 2 :9
10 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். 1 கொரிந்தியர் 2 :10
11 மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷருக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
1 கொரிந்தியர் 2 :11
12 நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
1 கொரிந்தியர் 2 :12

Neither Prophets nor our own knowledge, but only Holy Spirit knows all things about God and All secrets of God. Plz depand on Him alone.

ஆவியானவரே சகலத்தையும் நமக்கு போதிப்பவர்.
நீங்க என்னதா உங்க சொந்த ஞானத்த உபயோகிச்சி சொன்னாலும் நீங்க கற்பன பன்னுற எதுவும் உங்களோட முடிச்சிடும்.

நீங்கள் ஞானம் உள்ளவர்கள் உங்கள் ஞானம் உங்களோடே அழியும்.

என் வழிகள் உங்கள் வழிகள் அல்ல என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல பூமியை பார்க்கிலும் வானம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறதோ அப்படியே என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

ஆவியின் வழி இன்னதென்றும் கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் .நீ அறியாதிருக்கிறதுபோலவே எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.....

சுய முயற்ச்சி விருதா......

arullpm

  • Guest
14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். 1 கொரிந்தியர் 2 :14

Sanjeev Sharma

  • Guest
நன்றி அருல் பி எம்

udaya

  • Guest
@:  ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்.

அந்த வகையான ஜென்ம சுபாவத்தைத்தான்  மனிதனுக்கு தேவனாகிய கர்த்தர் வழங்கியிருக்கிறார்.

@:  அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்.

ஆவிக்குரியவைகளை பைத்தியமாக கருதும் * ஆவியையும் * தந்திருக்கிறார்.

@:  அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். 1 கொரிந்தியர் 2 :14

ஆவிக்குரியவைகளை பைத்தியமாக கருதும்
ஜென்ம சுபாவத்தை தந்து , அதை ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராயாவிடாமல் செய்து,
பிறகு அதையே காரணங்காட்டி , மனிதனை குறை கூறி ,  தண்டிப்பதில என்ன பயன் ?

Sanjeev Sharma

  • Guest
இது சிந்திக்க வேண்டிய விஷயம்

susan paul

  • Guest
For God there is no beginning no end because He is Alpha and Omega....that's all....