Author Topic: சிலை வழிபாட்டின் வேர்......  (Read 3066 times)

udaya

  • Guest
சிலை வழிபாட்டின் வேர்......
« on: September 19, 2015, 02:49:18 PM »
யாக்கோபு , ஏசாவுக்கு பயந்து தன் மாமன் வீட்டிற்கு ஓடிப்போகும் வழியில் , வனாந்திரத்தில் லூஸ் என்ற பகுதியில் படுத்து உறங்கிய கதை அனைவருக்கும் தெரியும்...
இரவில் அவன் சொப்பனத்தில் கர்த்தர் தரிசனமாகி
அவனை ஆசீர்வதித்தார்...
காலையில் எழுந்த யாக்கோபு , இந்த இடம் தேவனுடைய வீடு , வானத்தின் வாசல் என்று சொல்லி , அந்த இடத்திற்கு பெத்தேல் என்று பெயரிட்டதும் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும்.
அதிகமாக கவனிக்கப்படாத ஒரு காரியம் அவனுடைய செயல் .
யாக்கோபு இரவில் தன் தலைக்கு வைத்திருந்த கல்லை நட்டு அதற்கு எண்ணெய் வார்த்து கர்த்தருடன்  பொருத்தனை செய்து கொண்டான்.

அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து,
என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்.
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும். தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான். ஆதியாகமம் 28 :20,21,22

சரி.....கல்லுக்கு எதற்கு எண்ணெய் வார்த்தான் ?

வனாந்திரத்தில் பல கற்கள் ஒரே மாதிரியாக இருக்கும் ...பொருத்தனைக்கல் எது என்று அடையாளம் கண்டு கொள்ள உதவும் செயல்தான் அது !

யாக்கோபு நலமுடன் திரும்பி வந்து அந்த கல்லை அடையாளம் கண்டு கொண்டு , ஏற்கனவே தான் செய்த பொருத்தனையின்படி , அங்கே பலிபீடம் கட்டி தேவனை பணிந்துகொண்டான்....

மேலும் ஆதியாகமம் 31 , யாக்கோபு ஒரு கல்லை  நட்டு தன் மாமனுக்கும் தனக்குமிடையே சாட்சியை உருவாக்கியதைப்பற்றி கூறுகிறது.

யோசுவாவும் கல்லை நட்டி சாட்சியை உருவாக்கியதைப்பற்றி,  யோசுவா 24:26,27 தெரிவிக்கிறது.

சாமுவேல் ஒருபடி மேலே சென்று , ஒரு கல்லை நட்டு அதற்கு எபெனேசர் என்று பெயரிட்டான்.
1 சாமுவேல் 7:12

ஆக , கல்லை நட்டி , கர்த்தரை சாட்சிக்கு அழைத்து    காரியம் செய்வது அன்று  சாதாரணமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

பிறகு அந்த கற்களில் சித்திரம்தீட்டும் பழக்கம் ஏற்பட்டது.
லேவியராகமம் 26:1

பின்னாளில் இது கற்சிலை வழிபாடாக உருவெடுத்தது...உலகின் பல பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது . இயற்கையை கடவுளர்களாக வணங்கிய  இந்தியாவுக்கு , ஆரியர்களின் வழியாக இப்பழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

யாக்கோபுவின் ஒலிவ எண்ணெய் வார்க்க்கும் பழக்கம் , இங்கு நெய்வார்க்கும் பழக்கமாக மாறியது ! யாக்கோபு பொருத்தனை கல்லை தேவனுக்கு வீடாக்கியதைப்போல , இங்கும் கல்லை கோயிலாக்கினார்கள் !

வேதாகமம் வரலாற்றுடன் தொடர்புடையது என்று நாம் கருதுவோமானால்..............

இந்து சமய வழிபாட்டு முறையின் ஆணிவேர்
யாக்கோபு.....அதாவது .... இ ஸ் ர வே ல் ! ! !

என்று முடிவு செய்வதில் எந்த பிழையும் இல்லை !

susan paul

  • Guest
Re: சிலை வழிபாட்டின் வேர்......
« Reply #1 on: September 20, 2015, 04:48:04 AM »
Praise the Lord....
Even Abraham forefathers also idol worshipers....so its start before Abraham periods.....

Here Jacob said in Gene 28: 17 " how awesome is this place ! This is none other than the house of God.....  He did not say this stone is God rather he said this is house of God.... Where God is dwelling .....

What Jacob did is not wrong, because he like to honour the God through pouring the oil on that stone  thats all.... Later on people were misunderstood the stone is God...

Actually Jacob had no hope about his future ....but after the dream he gets happy ...so he wants to honour the God who made him to be happy....

In Jacob sight its only memory ....( its not God) but later on people were misunderstood.....

udaya

  • Guest
Re: சிலை வழிபாட்டின் வேர்......
« Reply #2 on: September 20, 2015, 06:58:55 AM »
@:.... Later on people were misunderstood the stone is God...

முற்றிலும் சரிதான்.

கல்லைக் கண்டேன்... கடவுளைக் கண்டேன்..
என்று ஆரம்பித்து...
கல்லிலே கடவுளைக் கண்டேன்..
என்று மறுவி.....
கடைசியில் கல்லே கடவுளானது !

susan paul

  • Guest
Re: சிலை வழிபாட்டின் வேர்......
« Reply #3 on: September 20, 2015, 10:11:27 AM »
Yes bro....ask like this question more....