General Category > Tamil Bible

மது குடிப்பது சரியா தவறா ?

(1/4) > >>

Sanjeev Sharma:
திராட்சைக்கூழ் = grape juice
திராட்சை ரசம் = wine, சரியா ?

udaya:
@:    மது குடிப்பது சரியா தவறா ?

வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்........ என்றும்

வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம்...... என்றும் , இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.

மது , திராட்சை ரசம் போன்றவை இதில் அடக்கமா என்று விசுவாசிகளிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. அவர்களது கருத்தை இயேசு கிறிஸ்து ஏற்றுக்கொள்வார் .

அவசரப்பட்டு " மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு " போன்ற உலகப்பிரகாரமான விளம்பரங்களில் சிக்கிக்கொள்வதை தவிர்க்க வேண்டும் !

udaya:
திராட்சைப்பழரசத்தை மதுபானமாக கருதமுடியாது. வேதம் அதை மதுபானமாக கருதாத காரணத்தால்தான் அது பரலோக ராஜ்ஜியத்தில்கூட வழங்கப்பட இருக்கிறது !

இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 26 :29

Karthick:
நீதிமொழிகள் 23ம் அதிகாரத்தில் 29ம் வசனம் முதல் வாசித்து பாருங்கள்

udaya:
வாசித்துப் பார்த்தேன்..... உங்களுடைய கருத்து என்ன  சகோ ?

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version