Author Topic: பலி செலுத்துதல்  (Read 3504 times)

udaya

  • Guest
பலி செலுத்துதல்
« on: October 11, 2015, 03:21:10 AM »
மிருகங்களின் சடலங்கள் பலிபீடத்தில் எரியும்போது எழும் smell , கர்த்தரைப் பொருத்தவரை " சுகந்த வாசனை"யாகும் !

ஆபேல் முதற்கொண்டு இயேசு கிறிஸ்துவின் காலம் வரை இது கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

இயேசு கிறிஸ்துவுக்காக கூட அவருடைய பெற்றோர் பலி செலுத்தினர். (லூக்கா 2:24 )

அவ்வளவு ஏன்......இயேசு கிறிஸ்து கூட பலிசெலுத்த சொன்னார் .( லூக்கா 5 :14 )

இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயங்கள்தான் !
தெரியாத விஷயம் என்னவென்றால்.......

1.  பிதாவுக்கு பிடித்த இந்த செயல்பாட்டை நிறுத்தச் சொன்னது யார் ?
2.  இன்றைய நாட்களில் , மிருகங்கள் அல்லது பறவைகளை பலி கொடுத்தால் பாவமன்னிப்பு கிடைக்குமா ? கிடைக்காதா ?
( இயேசு கிறிஸ்து-சிலுவை மரணம்- ஜீவாதார பலி ஆகியவைகளை விடுத்து)

arullpm

  • Guest
Re: பலி செலுத்துதல்
« Reply #1 on: October 11, 2015, 06:13:14 AM »
கிடைக்காது......

arullpm

  • Guest
Re: பலி செலுத்துதல்
« Reply #2 on: October 11, 2015, 06:25:15 AM »
உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப்பிரியமில்லை.  நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?  இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்.
ஏசாயா 1:11-13

எல்லாவற்றிற்க்கும் சேர்த்து தனக்கு உகந்த ஒரே பலியாக தன் குமாரனை கொடுத்தார்.

arullpm

  • Guest
Re: பலி செலுத்துதல்
« Reply #3 on: October 11, 2015, 06:40:21 AM »
சகோதரா மனமிருந்தால் எபிரேயர் 9, 10 முழுவதையும் படித்துவிட்டு இந்த கேள்வியை தொடரும்படி கேட்கிறேன். குறிப்பிட்ட வசனம் மட்டும் எடுத்துக்காட்ட எனக்கு மனதில்லை.

udaya

  • Guest
Re: பலி செலுத்துதல்
« Reply #4 on: October 11, 2015, 10:53:42 AM »
1 வது கேள்விக்கு பதில் ஏதாகிலும் உள்ளதா ?

@:    எல்லாவற்றிற்க்கும் சேர்த்து தனக்கு உகந்த ஒரே பலியாக தன் குமாரனை கொடுத்தார்.

பலி கொடுக்கும் உயிரினங்களின் list ல் மனிதன் இல்லை. எனவே இந்த பலி அங்கீகாரத்திற்கு தகுதியற்றது !

__________________________

பழைய ஏற்பாட்டை மற்றும் புதிய ஏற்பாட்டை modify செய்ய வேண்டிய  சூழலில் பவுல் இருந்தது வெளிப்படையாக தெரிகிறது .

இயேசு கிறிஸ்துவுக்கு பிறகு , மக்கள் பல காரியங்களைப் பற்றி முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர் . இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்ற இயேவின் வார்த்தைகளைக் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். சொன்னபடி இயேசு கிறிஸ்து திரும்பி வராததால் ,  இயேசு கிறிஸ்து மார்க்கத்தை தழுவினவர்கள் , பழைய, தங்கள் தங்கள் மார்க்கத்திற்கு செல்ல எத்தனித்தனர் .

இதை விரும்பாத பவுல் , பல மாறுதல்களை செய்ய ஆரம்பித்தார் ! அதற்காக பல சட்டங்களை வசதிக்கு ஏற்ப வளைத்து , தான் உருவாக்கிய மார்க்கத்தை  கட்டி காப்பாற்ற முயற்சி செய்தார். கடிதங்கள் பல எழுதி "ஆடுகளை " காத்தார் .

சுயமாக தன்னை "அப்போஸ்தலன்" என்று பிரகடனப்படுத்தியும் கொண்டார் .

மார்கத்தை காப்பாற்ற எழுதிய கடிதங்களை , பைபிளில் சேர்த்துக்கொண்டது    துரதிஷ்டவசமானது.

கையில் பழைய ஏற்பாட்டை வைத்துக்கொண்டு , மக்கள் மனநிலைக்கேற்ப புதிய ஏற்பாட்டை எழுதுவது சுலபம் . ( மத்தேயு இதில் எக்ஸ்பர்ட் )

கையில் பழைய, புதிய ஏற்பாட்டை வைத்துக்கொண்டு , மக்கள் மனநிலைக்கேற்ப கடிதங்களை எழுதுவது இன்னும்  சுலபம்.



அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.
எபிரேயர் 10 :4

பவுலின் நிலையில் யார் இருந்தாலும் மேற்கண்டவாறுதான் எழுதுவார்கள்.

சரித்திரத்தின் மீதும் தங்கள் கடைக்கண் பார்வையை சிறிதேனும் காட்டுங்கள் !
முடிந்தால் Mc Arthur's research bible ஐ வாங்கி படிக்கவும் .



arullpm

  • Guest
Re: பலி செலுத்துதல்
« Reply #5 on: October 11, 2015, 12:40:35 PM »
நன்றாக கதை எழுதுகிறீர்கள். நீங்கள் சொன்னதை உண்மை என்று நிரூபிக்க.


உங்களுக்கான நேரடியான பதிலும் பழைய ஏற்பட்டிலேயே உள்ளது.


அந்த அறுபத்திரண்டுவாரங்களுக்குப் பின்பு

"மேசியா சங்கரிக்கப்படுவார்;"

ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. 

"அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்;"
தானியேல் 9:26-27
« Last Edit: October 11, 2015, 01:27:34 PM by arullpm »

arullpm

  • Guest
Re: பலி செலுத்துதல்
« Reply #6 on: October 11, 2015, 12:56:45 PM »
மன்னிக்கவும் நான் கண்னைக் கட்டிக்கொண்டு கன்மூடித்தனமாக எதையும் விசுவாசிக்கவில்லை. எனக்குள் சகலத்தையும் சிருஷ்டித்த தேவத்துவத்தின் ஆவியானவர் இருக்கிறார். அவர் உண்மையும் சத்தியமுமானவர். எந்த மனிதனும் தேவனுக்கு மேற்ப்பட்டவன் அல்ல. 10 வருடம், 20 வருடம் கூட ஆராய்ச்சி செய்திருக்கட்டும். கவலையே இல்லை. யார் என்ன வேண்டுமானலும் கைக்கு வந்ததை வரலாற்று ஆராய்ச்சி என்ற பெயரில் கிறுக்கலாம். ஆனால் எல்லாமே ஆவியானவரிடத்தில் இருந்து வந்ததாகாது அவருடைய ஆவியே என்னில் வாசமாய் இருக்கும்போது வெளியில் தேடவேண்டிய அவசியம் எனக்கில்லை.

உங்கள் கருத்துப்படி புதிய ஏற்பாடு பொய் என்கிறீர்கள். எனக்குள் இருக்கும் ஆவியானவர் அதை ஜீவனுள்ளதாக காண்பிக்கிறார். வெளிப்படையாக உங்கள் கருத்தை சொல்லியதற்க்கு நன்றி.

தாங்கள் பரிந்துரைத்த பைபிள் என்று சொன்னீர்களே அதற்கும் நன்றி.
« Last Edit: October 11, 2015, 01:13:54 PM by arullpm »

udaya

  • Guest
Re: பலி செலுத்துதல்
« Reply #7 on: October 11, 2015, 01:27:36 PM »
FYI .....

Mc Arthur study bible ஒரு விசுவாசியால் எழுதப்பட்டது .

arullpm

  • Guest
Re: பலி செலுத்துதல்
« Reply #8 on: October 11, 2015, 01:31:12 PM »
இருக்கட்டும் இருந்தாலும் நன்றி.

arullpm

  • Guest
Re: பலி செலுத்துதல்
« Reply #9 on: October 11, 2015, 03:03:57 PM »
MacArthur Study Bible. கழுவி கழுவி ஊத்துராங்க அந்த புத்தகம் பேரைச்சொன்னாலே.... 

நீங்க சொன்ன புத்தகம் உங்களை மாறியே கொழப்ப வியாதியாம். அத படிச்சிட்டுதா இப்படி குழம்பிபோயிருக்கிங்களோ என்னவோ......

udaya

  • Guest
Re: பலி செலுத்துதல்
« Reply #10 on: October 11, 2015, 10:55:39 PM »
குழப்பமே ! உன் பெயர்தான் பைபிளோ !?

susan paul

  • Guest
Re: பலி செலுத்துதல்
« Reply #11 on: October 12, 2015, 02:49:07 AM »
Hello bro don't say like this....