Author Topic: பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன்  (Read 4733 times)

udaya

  • Guest
யோவான் 14:16 , 14:26 , 15:26 , 16:7....
இந்த வசனங்களைப் படிக்கும்போது ஏற்படுகின்ற ஒரு எண்ணம் , பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இங்கு இருக்கவில்லை என்று தெரிகிறது.

குறிப்பாக யோவான் 16:7 , இயேசு கிறிஸ்து பரமேறினால்தான் தேற்றரவாளன் வருவார் என்று கூறுகிறது. !
ஆனால்.... லூக்கா 3:22  , ( இயேசு கிறிஸ்து பரமேறாமலேயே ) பரிசுத்த ஆவியானவர் வந்ததாக
கூறுகிறது !

அப்படியானால்...

மேலே உள்ள 4 வசனங்களிலும் கூறப்பட்டுள்ள "தேற்றரவாளன்கள்" யார் ?

சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் = பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் ?

இது சரியென்றால்......

யோவான் 16:7 ம். லூக்கா 3:22  ம் ஏன் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது ?

arullpm

  • Guest
Supppppper !!!!!

மற்றவர்களுக்கு இன்னும் அருளப்பவில்லை, லிஸ்ட்டில் இயேசு கிறிஸ்த்துவையும் சேர்த்து குழப்பிக்கொண்டீர்கள்.

ஏசாயா 11:2,  யோவான் 4:34... பார்க்கவும்.

பரிசுத்த ஆவி கிறிஸ்துவுக்கே அருளப்படவில்லையென்றால், ஏசாயா 11:2 தீர்க்கதரிசனம் நிறைவேருவதெப்படி, அவர் மற்றவர்களை சொஸ்தமாக்கும் தீர்க்கதரிசனம் நிரைவேருவதெப்படி?.

அவர் மூலமாய் மற்றவர்களுக்கே தவிர அவருக்கும் சேர்த்து அல்ல.


Sorry, invalid question....

udaya

  • Guest
@:  மற்றவர்களுக்கு இன்னும் அருளப்பவில்லை, லிஸ்ட்டில் இயேசு கிறிஸ்த்துவையும் சேர்த்து குழப்பிக்கொண்டீர்கள்.

அருளப்படவில்லை list ? . ......
இது உங்கள் சொந்த லிஸ்ட்டா ?

சரி.......இயேசு கிறிஸ்துவை விட்டு விடுவோம்...
நீங்கள் சொல்லும் அந்த லிஸ்டில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் ?

@:  ஏசாயா 11:2,  யோவான் 4:34... பார்க்கவும்.

பார்த்தேன் ..... முரண்பாடு என்னவோ அப்படியே பத்திரமாக இருக்கிறது !

@:  பரிசுத்த ஆவி கிறிஸ்துவுக்கே அருளப்படவில்லையென்றால், ஏசாயா 11:2 தீர்க்கதரிசனம் நிறைவேருவதெப்படி, அவர் மற்றவர்களை சொஸ்தமாக்கும் தீர்க்கதரிசனம் நிரைவேருவதெப்படி?.

எனக்கு எப்படி தெரியும் சாமி.....? நான் KJV பைபிள் படித்துப் பார்க்கும் பழக்கமுள்ளவன் .....

@:  அவர் மூலமாய் மற்றவர்களுக்கே தவிர அவருக்கும் சேர்த்து அல்ல.

ஆக ,  முரண்பாடு நீங்கிவிட்டது .....?  மகிழ்ச்சி !

@:  Sorry, invalid question....

THANK YOU .......VALID ANSWER


101 bible contradiction ஐயும் இதே போல solve செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் .
______________________

susan paul

  • Guest
Bro...udaya ..
Luke 3:22" and the Holy Spirit descended on him in bodily from like a dove.  .." This insident taken place for JOHN THE BAPTIST.  To show that he is the one who will Baptise with the Holy Spirit .....
U can read it in John 1:33


John 16:7 ".... Unless I go away, the counsellor will not come to u...."
Y?????
Because Jesus already thought in this earth everything what is necessary for human being ..... Now nothing is to share and don't like to repeat the same..... 

Work of the counsellor is john 14:26".....will remind u of everything I have said to u....."
U can see it in john 16:8-11


Luke 15:26" when the counsellor comes, whom I WILL SEND to u from the father, the spirit of truth who goes OUT FROM THE FATHER , ....its shows three also same but the work is different....

But I don't like to argue under the topic of Trinity....

udaya

  • Guest
Sis.SusanPaul.

Though bible speaks unclearly in some places , many verses speaks cleary. The problem  arises when we  take one verse and applying it on the another to make our own point . This is the common methodology adopted in Christianity .

I wonder , whether I am eligible to do this verse manipulation !

Then comes the interpretation. I also wonder whose interpretation is correct and shall be taken  for discussion !

I just ask one question.

Who is that  தேற்றரவாளன் mentioned in
john 16: 7 ? Is he the HolySprit or not ?

Luke  3 :22 does not matter now !

susan paul

  • Guest
He is the H.S

udaya

  • Guest
OK fine . I try to resolve myself ,  the alleged "contradiction" , posed by me ! Please say your opinion .

பரிசுத்த ஆவியானவர் , இயேசு கிறிஸ்து பரமேறிச் செல்லும் வரை , பரமண்டலத்திலிருந்து இவ்வுலகத்திற்கு  அவ்வப்போது இறங்குபவராக இருந்தார் .
- பிதாவின் கட்டளையை ஏற்பவராகவும் ( ஏசாயா 63:18 ) , 
- இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றுவதற்கு காரணராயும் ( மத்தேயு 1:18 )
- தீர்க்கதரிசன ஆவியாகவும்  ( லூக்கா 1:67  )
- வாயின் வார்த்தைகளாகவும் ( லூக்கா 12:12 ,  மாற்கு 13:11 ), 
- இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெறும்பொழுது பிதாவின் அங்கீகார தூதராகவும் (லூக்கா 3:22 ) செயல்பட்டு வந்தார் .
ஆனால் இவைகள் எல்லாம் ,  பிதாவின் சித்தத்திற்கு  ஏற்ப அவ்வப்போது நிகழ்ந்தவைகள் !

ஆனால்....

இயேசு கிறிஸ்து ,  பரமேறுவதற்கு முன்னதாக ,
தான் விட்டுச்செல்லும் இடத்தை
* நிரந்தரமாக நிரப்ப * அதாவது என்றென்றைக்கும் நம்முடன் இருக்கும்படியாக ( யோவான் 14:16 ) பரிசுத்த ஆவியை நிலைபெறச் செய்ய வேண்டும் , என்று விரும்பியிருக்கக்கூடும் .

மேலும் , அவருடைய போதனைகள தொடர்ந்து செய்யவும் ( யோவான் 14:26 ) , அவர் இந்த உலகத்தில் வந்து போனதிற்கு சாட்சியாக இருக்கவும் ( யோவான் 15:26 )  எண்ணங்கொண்டு ,
பரிசுத்த ஆவியானவர் நிரந்தரமாக இங்கே தங்கியிருக்க வேண்டியதன் அவசியத்தை உணந்தவராக பேசிய வசனங்கள்
யோவான் 14:16 , 14:26 , 15:26 , 16:7  பதிவு செய்யப்பட்டுள்ளது.

யோவான் 16: 7 , வசனத்தை இயேசு கிறிஸ்து பேசும்போது , பரிசுத்த ஆவியானவர் நிரந்தரமாக இங்கே தங்கியிருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் உணர்த்துவதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே ...

இயேசு கிறிஸ்து பரமேறி செல்லும்வரை ,  பரிசுத்த ஆவியானவர் , ஒரு விருந்தாளி !
பரமேறி சென்றபின் , பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஒரு உடனாளி !

வசனங்கள் இதைத்தான் பிரதிபலிக்கின்றன !

ஆக முரண்பாடு எதுவுமில்லை. Q E D.

( உங்கள் கருத்துக்கள் எதுவுமிருப்பின் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்... நன்றி )

udaya

  • Guest
@Reply#7:

கடவுளின் ஆவி ?

"பரிசுத்த ஆவியானவர் " என்று கூறப்பட்டுள்ளதை பா்க்கும் பொழுது , அவர் ஒரு" நபர் " என்ற எண்ணம் ஏற்படுகிறது.

வேதாகமத்தில் ,பெரும்பாலும் எல்லோரையும் " அவன் , இவன் " என்று ஏக வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசுத்த ஆவிக்கு மட்டும்தான் " அவர் " என்ற மரியாதை !

மேலும் ," கடவுளின் ஆவி" ஒரு பெண்ணை கர்ப்பவதி ஆக்க முடியுமா ?  மத்தேயு 1:18