Author Topic: ஏலி! ஏலி! லாமா சபக்தானி  (Read 4000 times)

udaya

  • Guest
ஏலி! ஏலி! லாமா சபக்தானி
« on: October 18, 2015, 05:52:32 AM »
ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மத்தேயு 27 :46

ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ!லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்: அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மாற்கு 15 :34

ஆமாம்......பிதா , குமாரனை ஏன் கைவிட்டார் ?

இயேசு கிறிஸ்து பாடுகளை அனுபவிப்பதற்காக ?

பாடுகளை அனுபவிப்பதற்காக , பிதா , யோபுவை  தாற்காலிகமாக கைவிட்டதைப்போன்றுதான் இதுவுமா ?

வேறு ஏதாவது விளக்கம் உண்டா ?


முக்கியமான கேள்வி ....

நாமும் பாடுகளை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக , பிதா , இதேபோன்று நம்மையும் அவ்வப்போது கைவிட்டு பிறகு கைதூக்கி விடுகிறாரா ?