Author Topic: பாவமன்னிப்பு திட்டம்  (Read 3231 times)

udaya

  • Guest

மனிதன் பாவம் செய்தான்.
கடவுள் தண்டித்தார்.

மனிதன் தொடர்ந்து பாவம் செய்தான்.
கடவுள் தொடர்ந்து தண்டனைகள் கொடுத்தார்.

எனினும் 'பாவநிவாரண பலி' போன்ற தாற்காலிக பாவ விடுதலைத் திட்டங்களையும் ஏற்படுத்தினார்.

ஆனால்...

நிரந்தரமாக நம் பாவங்களை மன்னிக்க எப்பொழுதாவது அவர் நினைத்ததுண்டா ?

ஆம் , அவர் நினைத்ததுண்டு . அதற்காக  'புது உடன்படிக்கை' என்ற  ஒரு திட்டத்தையும் உருவாக்கி அதை தம் தீர்க்கதரிசி மூலம் அறிவிப்பாக வெளியிடவும் செய்தார் .

இந்த "நேரிடையான பாவமன்னிப்பு" திட்டம் எரோமியா 31:31-34 ல் கூறப்பட்டுள்ளது.

எரோமியா 31:31ல் சொல்லப்பட்டிருக்கும் அந்த "நாட்கள்" வந்து போய்விட்டதா ? அல்லது இனிமேல்தான் வரப்போகிறதா ?

அந்த பாவமன்னிப்பு திட்டம்  எப்பொழுதாவது அமலில் இருந்ததா ? அல்லது இருக்கப்போகிறதா ?

பழைய ஏற்பாட்டில் இது அறிவிக்கப்பட்டிருந்தாலும் புதிய ஏற்பாட்டிலும்  வழிமொழியப்பட்டிருக்கிறது. எபிரேயர் 8:8-12.


எனவே எரோமியா 31:31 மற்றும் எபிரேயர் 8:8 ல் சொல்லப்பட்டிருக்கும்  அந்த "நாட்கள்" அல்லது "காலம்" வந்து போய்விட்டதா ? அல்லது இனிமேல்தான் வரப்போகிறதா ?

Any insight ?