Author Topic: நம்பிக்கை!  (Read 6326 times)

love_all

  • Guest
நம்பிக்கை!
« on: November 18, 2016, 12:18:29 PM »
பொதுவான நம்பிக்கை. இதற்கு அறிவியல் காரணங்கள் ஏதேனும் உள்ளதா?

love_all

  • Guest
Re: நம்பிக்கை!
« Reply #1 on: November 22, 2016, 11:27:07 AM »
எனக்கு தெரிந்த இயற்பியல் பட்டதாரி நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் என்னிடம் இவ்வாறு சொன்னார். இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்க முக்கியமான காரணம் Electromagnetic field என்கிற மின்காந்தப்புலம் தான். மேலும் அனைத்து உயிர்களின் மூளையில் ஏற்படும் எண்ணங்களுக்கும் அவை முக்கியமான காரணம் என்றார். நாம் வைத்திருக்கும் நம்பிக்கை யார் மீது இருந்தாலும் அதை எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பது முக்கியம். ஏனென்றால் மின்காந்த அலைகள் Radio frequency போல ஒருங்கிணைக்க முடிந்த ஒன்று. நம்பிக்கை மதங்களுக்கு அப்பாற்பட்டது. நம்பிக்கையை முழுமையாக வையுங்கள். உங்களால் உண்மையாக உணரப்பட்ட, பார்க்க முடிந்தவைகள் மீது.

udaya

  • Guest
Re: நம்பிக்கை!
« Reply #2 on: November 23, 2016, 12:36:03 PM »
மின்காந்தப் புலம் என்பதை விட " இன்னமும் அறியப்படாத ஒரு புலம் " என்று கூறுவீர்களானால், இதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.
இதன் காரணமாகத்தான், பல் வேறு சமயத்தினரும் தங்களது கடவுளின் மேல் தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான் தங்களை காப்பாற்றி வருவதாகக் கூறி வருகின்றனர். சொல்லப்போனால் , மதங்களின் ஒரேநோக்கம் அளவற்ற நம்பிக்கையை உருவாக்கி அதை வளர்ப்பதுதான்.

udaya

  • Guest
Re: நம்பிக்கை!
« Reply #3 on: November 24, 2016, 04:48:19 AM »
நம்பிக்கை என்பது ஒரு நல்ல விஷயம்.எல்லா சமயங்களும் இதை தங்களுக்கு சாதகமாக  வளர்க்க முற்படுகின்றன. சொல்லப்போனால் சமயங்களின் அடிப்படையே நம்பிக்கைதான்.

ஆனால் , அளவற்ற , எல்லையற்ற  நம்பிக்கை , அதாவது ' விசுவாசத்தை 'மேலோங்க செய்வது கிறித்தவத்தின் முதன்மையான செயல்பாடாக இருக்கிறது.

பெரிய மீனின் வயிற்றில் யோனா மூன்று நாள் இருந்தான் என்றிருப்பதற்கு பதிலாக , யோனாவின் வயிற்றில் பெரிய மீன் 3 நாள் தங்கியிருந்தது என்று எழுதியிருந்திருக்குமேயானால் கூட அதை விசுவாசிகள் எளிதாக நம்பியிருப்பார்கள். அந்தளவிற்கு விசுவாசம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கண்மூடித்தனமான நம்பிக்கை முன்னேற்றத்தை முடக்கும். சிந்தனையுடன்கூடிய நம்பிக்கை நன்மை பயக்கும்.

இது அறிவியலுக்கும் பொருந்தும்.


arulksn

  • Guest
Re: நம்பிக்கை!
« Reply #4 on: November 24, 2016, 04:06:16 PM »
// கண்மூடித்தனமான நம்பிக்கை முன்னேற்றத்தை முடக்கும். சிந்தனையுடன்கூடிய நம்பிக்கை நன்மை பயக்கும்.//
I like this statement. It is 100% true.

love_all

  • Guest
Re: நம்பிக்கை!
« Reply #5 on: December 30, 2016, 04:13:26 AM »
மதவாதிகளின் ஆயுதமே மக்களின் கண்மூடித்தனமான மத நம்பிக்கைகள் தானே. பணம், பொருள் வாங்கி தான் கடவுள் ஆசிர்வாதம் தருவாரா? பதவி, பணம், பொருள் சாராமல் மதங்கள் வளர்க்கப்படுமா? இதை நம்ப வைக்க காணிக்கை பற்றி சம்பிரதாயக் கதைகள் வேறு. நம்பிக்கை நல்லதாக இருப்பின் அதில் உறுதி இருந்தால் போதும்.