General Category > Tamil Bible

குடும்ப ஊழியம்

(1/1)

EstherJudith:
நண்பர்களே,
வேதாகமத்தில் எந்த வசனம் குடும்ப ஊழியத்தை பற்றி கூறுகிறது...

Parames:
தேவை அற்ற கேள்வி கேட்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது

மத்தேயு
யோவான்
படித்து விட்டு ஒரு சில கேள்வி கேட்டு பார் பயனுள்ள வகையில் அமையும் வாழ்க்கை

ammuedi:
ஆதியாகமம்18
19. கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்று ஆபிரகாமைக் குறித்து கர்த்தர் சாட்சி அளிக்கிறார். நாமும் அத்தகைய சாட்சியாய் வாழவேண்டும்.

யோவான் 24
15 ல் .......நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்று கூறியுள்ளார். நாமும் சேவிப்போம்.

1 தீமோத்தேயு 3
4.தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.

5. ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? என பரிசுத்த பவுல் குடும்பத்தின் முக்கியத்துவம் உணர்த்துகிறார். எனவே குடும்பத்தின் முக்கியத்துவம் உணர்ந்துசெயல்பட வேண்டும்.

இதுதான் உண்மையான குடும்ப ஊழியம்.


Navigation

[0] Message Index

Reply

Go to full version