Author Topic: மன்னிப்பு:(  (Read 20635 times)

sambible

  • Guest
மன்னிப்பு:(
« on: December 15, 2017, 02:46:30 AM »
நான் இயேசப்பா பிள்ளையா இருந்தும் அதுமட்டும் இல்ல நான் ஒருபாஸ்டர் மகனா இருந்தும் நிறைய அசிங்கமான அருவருக்க தக்க பாவங்கள செஞ்ன் இப்ப மரனத்துக்கு ஏதுவான ஒரு வியாதிக்குள்ளா நான் அகப்பட்டுடன் இயேசப்பா என்ன மன்னிப்பாறா:( எனக்காக ஜெபம் பன்னிக்கொங்க please
« Last Edit: December 20, 2017, 04:22:19 AM by sambible »

Alvins

  • Guest
Re: மன்னிப்பு:(
« Reply #1 on: December 21, 2017, 11:03:45 PM »
உங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Peterkalakad

  • Guest
Re: மன்னிப்பு:(
« Reply #2 on: January 16, 2018, 12:46:54 PM »
Jesus is very great god

Unice

  • Guest
Re: மன்னிப்பு:(
« Reply #3 on: January 18, 2018, 05:31:31 PM »
Neega Bible la
"Kaeta kumaran" story nadichirukingala
Padinga ungaloda yaesappa paesuvanga........

sambible

  • Guest
Re: மன்னிப்பு:(
« Reply #4 on: January 23, 2018, 07:14:09 AM »
தயவு செய்து கிறுஸ்த்துவுக்குள் இரட்சிக்க பட்ட இயேசப்பா பிள்ளைங்க ஒருநாளும் அவருக்கு விரோதமாக பாவம் செஞ்சிடாதிங்க இல்லைனா என்ன போல வேதனைய அநுபவிங்க தயவுசெய்து மனம்திறும்புங்க அதுமட்டும் இல்ல எனக்காக ஒரே ஒரு முறையாவது ஜெபம் பன்னுங்க pls

Vickyalpha

  • Guest
Re: மன்னிப்பு:(
« Reply #5 on: January 23, 2018, 07:36:57 AM »
Brother,
பழையவைகளை மறந்து இன்றிலிருந்து புதியவராய் மாறுங்கள். உங்கள் பாவத்துக்காக உண்மையில் மனம் வருந்துகிறீர்களா?? உண்மையில் ஏசுவின் மடியில் சாய்ந்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா?? இதோ உங்கள் முன்னே கருணையுள்ள இயேசு இருக்கிறார். அவர் உங்களை கண்டிப்பாய் ஏற்றுக்கொள்வார். பழையவைகளை நினைத்து புலம்பாதீர்கள். இன்றிலிருந்து புதிதானோம் என நம்புங்கள். இயேசு உங்களை ரட்சிப்பாராக.

sudhakarunya

  • Guest
Re: மன்னிப்பு:(
« Reply #6 on: January 26, 2018, 07:42:36 PM »
சகோ. எந்த நிலை நீங்க இருந்தாலும் உங்களை வெறுக்காத ஒரே ஒரு இரட்சகர் அவர்.
1யோவான்1:7 பிரகாரமாக சகல பாவத்தையும் அதின் விளைவுகளையும் போக்க வல்லவர்.
நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்.
அவரால் செய்ய முடியாத அதிசயமான காரியம் ஏதும் உண்டோ?
யாக்கோபை போல விடா பிடியாய் சுகம் தரும் வரை கெஞ்சுங்கள்.
வேதத்தை காதலியுங்கள், உங்களுக்கான அனுதின நம்பிக்கை வார்த்தையை பெற்றுக்கொண்டு முன்னேறுங்கள், நடப்பது நடக்கட்டும்.
எல்லாம் நன்மைக்கே! (ரோமர் 8:28)

Joshuva

  • Guest
Re: மன்னிப்பு:(manipu
« Reply #7 on: October 27, 2018, 01:15:54 AM »

Nanum apadithan iruken nan thirumba thirumba pavam seikiren ennaiyum manipara enku solunga en irudhayam kadinama iruku

Vickyalpha

  • Guest
Re: மன்னிப்பு:(
« Reply #8 on: October 27, 2018, 02:46:51 AM »
@reply 7

Brother. உங்கள் நிலைமை எனக்கு புரிகிறது. நீங்கள் எந்த பாவத்தை பற்றி பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் நானும் உங்கள் நிலைமையில் இருந்திருக்கிறேன். நான் பல வருடங்களாக, கிட்ட தட்ட 10 வருடங்களாக (இப்போது எனக்கு வயது 25) ஒரு பாவத்தில் அகப்பட்டிருந்தேன். நான் சிறுவயதில் இருந்தே church கு போய், bible படித்துதான் வளர்ந்தேன். ஆனாலும் நான் பள்ளிப்பருவத்தில் ஆரம்பித்த அந்த பாவ செயல் என்னை இறுக பற்றி கொண்டது. நான் எத்ததனையோ முறை அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்திருக்கிறேன். ஆனாலும் மறுபடி மறுபடி மீண்டுமாய் அதையே மீண்டும் செய்வேன். கடவுளிடம் எத்தனையோ முறை ஜெபித்திருக்கிறேன். ஆனாலும் நெடுங்காலம் என்னால் அதில் இருந்து விலகி இருக்க முடிந்ததில்லை. அந்த பாவத்தை செய்துவிட்டு மீண்டும் ஜெபம் செய்ய வரும்போது அல்லது சபைக்குள் செல்லும்போது நான் மிகவும் வருத்தப்பட்டவனாய், வீழ்ச்சியடைந்தவனாய், இருதயத்தில் மிகவும் வருத்தப்பட்டு , என் இயலாமையை நினைத்து மிகவும் நொந்துபோயிருக்கிறேன்.
இணையத்தில் இதில் இருந்து விடுபட வழிகளை தேடி, அதை செயல்படுத்தி, எவ்வளவோ plan போட்டு நடந்துகொள்ள முயற்சி செய்தாலும், சூழ்நிலை வரும்போது மீண்டும் அதே பாவத்தில் வீழ்ந்திருக்கிறேன்.
இப்படியே பல வருடங்கள் ஓடி விட்டன.
ஆனாலும் தேவனுடைய கிருபையால் இந்த பாவத்தில் இருந்து நான் விடுபட்டேன். எப்படி அது எனக்கு சாத்தியமாயிற்று என்று பகிர்கிறேன். ஒருவேளை உங்களுக்கு பிரயோஜனப்படலாம்.
1. முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாம் என்னதான் plan பண்ணி, control அஹ் இருந்தாலும் , சூழ்நிலை வரும்போது நாம் மீண்டும் அதிலே விழுவோம். இது நம்மால், நம் சுய பெலத்தால் சாத்தியப்படக்கூடிய காரியமல்ல. ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் தேவனிடத்தில் இதை சமாளிப்பதற்கான வல்லமைக்காக ஜெபிக்க வேண்டும்.
2. உபவாசம் - எனக்கு மிகவும் பிரயோஜனமும் இருந்த காரியம் இது. உங்கள் சரீரத்தை ஒடுக்கி கீழ்ப்படுத்துங்கள். முதலில் ஒரு நாள் முழுதும் உபவாசம் இருங்கள். பிறகு இரண்டு நாள். அது பழகிய பிறகு 3 நாள். 3 நாள் உபவாசம் அடிக்கடி இருக்க வேண்டும். இது பழகிவிட்டால், நாம் வீழ்த்தப்படுகிற சூழ்நிலைகள் வரும்போது, நம் உடலையும் மனதையும் மிகவும் எளிமையாக நம்மால் control செய்ய முடியும். முன்பை விட பலமாய் நாம் இருப்பதை நாம் உணர முடியும்.
3. நேரம் கிடைக்கும் போது கர்த்தருக்குள் பிரயோஜனமாக ஏதாவது செய்யுங்கள். இது நம் கவனத்தை வேறு பக்கம் திருப்ப உதவும் . நான் செய்தவை சிறிய செயல்களாயினும் அவை என் நேரத்தையும், என் மனதையும் ஒருமுக படுத்த உதவின.
4. நம்மை பொறுத்தவரை நம்மை பாவத்தில் விழ வைக்கும் input source இரண்டே இரண்டு தான். ஒன்று கண், இன்னொன்று காது. இந்த இரண்டிலும் என்ன input கொடுக்கிறீர்கள் என்று ஆராய்ந்து பாருங்கள். கவனமாக இருங்கள்.  இவற்றின் மூலமாகவே இச்சையானது உள்ளே நுழைந்து பின்னர் பாவத்தை பிறப்பிக்கும். எனவே இது இரண்டின் வழியாக எதை பார்க்கிறோம், எதை கேட்கிறோம் என்று கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்தி விட்டாலே நாம் பாவத்தை ஜெயித்து விடலாம்.
இறுதியாக,
கடவுள் நம்மை நேசிக்கவே செய்கிறார். மனம் தளராதீர்கள். உங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை நீங்கள் மனந்திரும்பி சரிப்பட்டு விட மாட்டீர்களா என அவர் ஆவலோடு எதிர் பார்த்திருக்கிறார்.
இயேசு ஒருவரை தவிர எந்த மனிதனும் பாவம் இல்லாதவனாய் இல்லை. பூரணத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் முன்னேறுவதே கிறிஸ்த்தவம்.

Joshuva

  • Guest
Re: மன்னிப்பு:(
« Reply #9 on: October 28, 2018, 06:32:40 AM »
Thanks brother karthar indru ardhanaiyul enku viduthalai koduthar

Lazar

  • Guest
Re: மன்னிப்பு:(
« Reply #10 on: February 23, 2021, 11:05:43 AM »
பாவ மன்னிப்பு , அறிக்கை  செய்வது எப்படி ????