Author Topic: ஆதாரங்களுடன் பதில் தாருங்கள்  (Read 10969 times)

Nithan

  • Guest
கடவுள் ஆதாம் ஏவாளிடம் என்ன மொழியில் பேசினார்???...ஆதாம் ஏவாளிடம் என்ன மொழியில் சாத்தான் பேசினான்....??சாத்தானும் கடவுளும் என்ன மொழியில் பேசிக் கொண்டனர்?????

Leslie pradeep rajakumar

  • Guest
  ஆதி 11:6 ஒரே மொழி

jeffrinlal

  • Guest
heavenly language 😍

Vickyalpha

  • Guest
எனக்கு தெரிந்தவரை அதுபற்றி பைபிளில் எதுவும் சொல்லப்படவில்லை.

Prabhugoodfriend

  • Guest
  எந்த மொழியில் பேசி இருந்தால் என்ன.... இப்போது நீங்கள் பேசும் மொழியில் கடவுள் பேசுவார்.... அவரோடு பேசி உறவையும் அன்பையும் வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் 😊

Ruban isravel

  • Guest
அவர் வேண்டுமா .பதில் வேண்டுமா

Arun Stark

  • Guest
ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

1 கொரிந்தியர் 14 :2

இவ்வசனத்தின் படி தேவனிடத்தில் பேசியது அந்நியபாஷையாக இருக்கலாம்

Arun Stark

  • Guest
23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

ஆதியாகமம் 2 :23

20 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான். ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.

ஆதியாகமம் 3 :20

இவ்வசனங்களின் படி ஆதமே ஏவாளுக்கு பெயரிட்டான்!!

ஏவாள் என்னும் பெயருக்கு எபிரேய மொழியில் மட்டுமே பொருள் உள்ளது!

எபிரேயத்தில் இதன் பொருள் "வாழ்வு" அல்லது "வாழ்வின் தாய்"

இச்சான்றுகள் எபிரேய மொழியாக இருந்தது இருக்கும் என்பதுக்கு சான்று!!

Reegan Durai C

  • Guest
கர்த்தர் நல்லவர்

நாம் எதை கற்றுகெள்வது அவசியம் என்பதை வேதத்தில் மேகம்போன்ற சாட்சிகளுடன் தேவன் விவரித்துள்ளார்
மறைபெருள்கள் யாவும் தேவனுடையவைகள் என்று வேதம் கூறுகிறது.
யூகங்களுக்கு இடம் கெடுப்பது ஏற்றதாயிராது என்பது என்னுடைய பதில்

கர்த்தர் நல்லவர்

Davidj

  • Guest
God does not need knowledge to understand what others are speaking.
Adam must have spoken universal language pre-programmed by God

mesiadhas

  • Guest
நீங்க பெற்றெடுத்த உங்கள் பிள்ளையிடம் எந்த மொழியில் பேசுவீர்கள்.

யோக்கியன்

  • Guest
தேவன் ஆதாமிடம் பேசினார் அது அவனுக்கு புரிந்தது

Pon Rahavan

  • Guest
ஆராய்ச்சியின் படி தமிழ் தான் பழமையான மொழி எனவே தேவன் ஆதாமுடன் பேசியது தமிழாக கூட இருக்க வாய்ப்பு இருக்கு.....மக்களின் தவறான எண்ணத்தால் மொழிகள் பிரிக்கப்பட்டன....அதனால் தேவன் பேசியது இம்மொழி தான் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது...