Author Topic: மனிதன் மரித்த பிறகு?  (Read 5119 times)

KKK

  • Guest
மனிதன் மரித்த பிறகு?
« on: January 28, 2018, 04:50:59 AM »
மனிதன் மரித்த பிறகு என்ன ஆகிறான்?
ஆவியாக சுற்றுலாவாக?

Vickyalpha

  • Guest
Re: மனிதன் மரித்த பிறகு?
« Reply #1 on: January 28, 2018, 07:18:21 AM »
மனிதன் இறந்த பிறகு ஆவியாக, பேயாக சுற்றுவதில்லை. மனிதன் இறந்த பிறகு ஆண்டவரின் நியாயத்தீர்ப்பு வரும்வரை அவன் எதுவும் செய்வதில்லை. அவன் நித்திரையடைந்திருக்கிறான்.

KKK

  • Guest
Re: மனிதன் மரித்த பிறகு?
« Reply #2 on: January 28, 2018, 10:19:01 PM »
ஆதாரம்...?

Vickyalpha

  • Guest
Re: மனிதன் மரித்த பிறகு?
« Reply #3 on: January 28, 2018, 11:41:44 PM »
மரித்தவர்களை நித்திரையடைந்தவர்களுடன் ஒப்பிடுவதை சிந்திக்கவும். நித்திரையடைந்தவர்கள் எதுவும் செய்வதில்லை.
5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள், இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
பிரசங்கி 9:5

6 அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று, சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.
பிரசங்கி 9:6


5 மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
வெளிப்படுத்தின விசேஷம் 20:5

12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன், அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 20:12

13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது, மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 20:13


நியாயத்தீர்ப்பு நாளில் தான் இறந்தவர்கள் உயிப்பிக்கப்பட்டு தேவனுக்கு முன்பாக நிற்பார்கள்
« Last Edit: January 28, 2018, 11:48:25 PM by Vickyalpha »