Author Topic: பாவத்தினால் இரட்சிப்பை இழக்க முடியுமா?  (Read 4308 times)

lakshman

  • Guest
reposting(புதிதாக  இணைந்தவர்களுக்காக)

*தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.* -பகுதி1

-லக்ஷ்மன்8144116495


1) *கேள்வி:*
விசுவாசி நித்தியஜீவனை இழக்க முடியுமா??

பதில்: இக்கேள்விக்கான பதிலை கொடுப்பதற்கு முன் இக்கேள்வியை சற்று தெளிவு படுத்த வேண்டும்.

ஆதாவது : _ஒரு விசுவாசி பாவம் செய்த பின் தேவனால் உணர்த்தப்பட்டப்பின்னும் மனந்திரும்பாமல் தேவனை அசட்டை செய்து தேவனுடைய  இரக்கங்களின் ஐசுவரியத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல் தேவனை மறுதலித்தப்பானானால் அவனிடத்தில்  அவனுடைய நித்தியஜீவன் நிலைத்திருக்குமா??_  என்று கேட்கும்போது
தான் ஒரு _விசுவாசி இரட்சிப்பை இழக்க முடியுமா_ என்ற கேள்வியின் சாரம்சம் புரியும்...

ஏனென்றால் விசுவாசித்துக்கொண்டிருக்கிறவன்...
அவனுடைய  " *விசுவாசத்தைக் கொண்டு* " தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிறான் என்று 1பே1:5ல் வாசிக்கிறோம்...
எனவே
விசுவாசியிருக்கிறவனுடை நித்தியஜீவன்  அவனிடத்தில் நிலைத்திருக்கும்.. இரட்சிப்பின் நம்பிக்கையோடே வாழுவான்...

ஆனால் பாவங்கள் செய்து மனந்திரும்பாது பரலோகத்தை சுதந்தரித்துவிடலாம் என்ற நம்பிக்கை வேதத்திற்கு முற்றிலும் முரணான நம்பிக்கை...

*எபேசியர் 5:5-6*
[5]விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது *தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று **அறிந்திருக்கிறீர்களே**.*
[6]இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், *ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;*.
இது தான் சத்தியம்..


2 *கேள்வி) பாவம் செய்த நொடியே இரட்சிப்பு இழக்கப்படுமா??*

பதில்:
எந்த நொடியில் நாம் நித்தியஜீவனை  இழப்போம் என்று வேதம் கூறுவில்லை...
எத்தனாவது பாவம் செய்த பின் நம் இரட்சிப்பை இழப்போம் என்றும் வேதம் கணக்கிட்டு கூறவில்லை...

*_ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று எச்சரிக்கை அவசியம்_*

எனவே இரட்சிக்கப்பட்ட  ஒருவன்
எத்தனை பாவம் செய்தாலும்  என்ன பாவம் செய்தாலும் அவனிடத்தில்  நித்தியஜீவன் நிலைத்திருக்கும் என்பது தேவனுடைய வார்த்தைக்கு எதிரானது..

_*அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது* என்று *அறிவீர்கள்* .. 1யோ3:15._  என்று நித்தியஜீவனின் தன்மையை தெளிவுபடுத்துகிறார் அப்போஸ்தலர் யோவான்...

××××××××××××××××
ஆண்டவர்  கிருபையாய் இரக்கப்பட்டு,, பாவம் செய்த விசுவாசியின் மேல் வைராக்கிய வாஞ்சையாய் மனந்திரும்பும்படியாக *அனேக வாய்ப்பளிக்கிறார்* என்பதையும் மனதில் கொள்வோம்..

_2 பேதுரு 3:9-14,17
[9]தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, >> *நம்மேல்* நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.<<

[10]கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்.

[11]இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் *நீங்கள்* எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!

[12]தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும்.

[13]அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

[14] *ஆகையால், பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.*

[17] *ஆதலால் பிரியமானவர்களே* , இவைகளை முன்னமே *நீங்கள் அறிந்திருக்கிறபடியால்* ,* அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே *நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு* எச்சரிக்கையாயிருங்கள்.
*எச்சரிக்கையாயிருங்கள்_* என்ற வார்த்தை வெறும் ஆலோசனை  அல்ல என்பதையும் மனதில் கொள்வோம்..
 
*எனவே
நாம் மனந்திரும்பும்படியாக தேவன்  அளிக்கும் வாய்ப்புகளை அசட்டை செய்வதோ..
அல்லது
வாய்ப்புகள் பல உள்ளதே என்று மனந்திரும்பாமல் இருப்பதோ, இன்னும் இருதயத்தை கடினப்படுத்தி தேவனை விட்டு பிரித்துவிடும் என்பதே வேத சத்தியம்..*

_எபிரெயருக்கு எழுதின நிருபம் 3:12-13 சகோதரரே, ஜீவனுள்ள *தேவனை விட்டு விலகுவதற்கேதுவான* அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் *எச்சரிக்கையாயிருங்கள்* . உங்களில் ஒருவனாகிலும் *பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு,* இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்._

×××××
எனவே தேவன் தாமே அப்படிப்பட்டவனை நீதியாக நியாயத்திலே கொண்டுவருவார்..

_1 தெ 4:6>>முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, *சாட்சியாக எச்சரித்தபடியே* இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் *கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.*_

யோவான் 15:2,6
[2] *என்னில்* கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ *அதை அவர் அறுத்துப்போடுகிறார்;* கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

[6] *ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால்,* வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்; *அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.*.

(((4) *கடைசி  ஆயுதம்:*))
உடனே _கிரியைகளினாலா இரட்சிப்பு அடைகிறோம்??_ என்று கேட்க வேண்டாம்...

நன்றாக மேலே வாசித்துப்பாருங்கள்.. இயேசுகிறிஸ்துவின் *கிருபையை #முற்றிலும்# மறுதலிப்பதால்* தான் நித்தியஜீவன் இழக்கப்படும் என்று பார்த்தோம்...
*_தேவனின் கிருபையில்லாமல் இரட்சிப்பு இல்லை_ என்பதற்கு இதுவே சிறந்த  ஆதாரம்....*

எப்படியாக , *இயேசுகிறிஸ்துவின் கிருபையை* _விசுவாசத்தினால்_ ஏற்றுக் கொண்டு இரட்சிப்படைந்தோம் என்பது  உண்மையோ..

அப்படியாக இயேசுகிறிஸ்துவின் கிருபையை அவிசுவாசமுள்ளவனாய் முற்றிலும் மறுதலிப்பதால் நித்தியஜீவன்  இழக்கப்படும் என்ற *வேதத்தின்*  எச்சரிக்கைகளும் உண்மை..


_கலா5:6 >>கிறிஸ்து இயேசுவினிடத்தில் *அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்,*._

_1 தெ 4:8 அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, *தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின* தேவனையே அசட்டைபண்ணுகிறான்._

*கிருபையோடு தொடருவோம்* ..

நன்றி..

udaya

  • Guest

karthick win

  • Guest
Thank you so much brother