General Category > Tamil Bible

இன்றைய பாஸ்டர்களின் நிலை

(1/1)

Vickyalpha:
8 வழிக்குப் பையையாகிலும்,அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும்,எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமாத்திரம் எடுத்துக்கொண்டுபோகவும்.
மாற்கு 6:8

9 பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும்,இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்.
மாற்கு 6:9

ஊழியம் செய்ய போகிறவர்களை பற்றி வசனம் இப்படி சொல்வதாய் இருக்கும் போது, இன்றைய பாஸ்டர்கள் கோட்சூட் உடைகளுடனும், சொகுசு கார்களிலும், rev doctor பட்டங்களுடனும், முகம் முழுக்க மேக்கப்புடனும் அலைவது ஏன்??

உங்கள் தேவைகளை பிதா ஒருவருக்கே தெரிவியுங்கள் என்று வசனம் போதிக்கும் போது, இன்றைய பாஸ்டர்கள்(போதகர்கள்) காரணங்களை சொல்லி வீடு வீடாக சென்று(டிவி வழியாக) பிச்சை எடுப்பது ஏன்???

ஏசு, பவுல் வாழ்ந்து காட்டிய கிறிஸ்தவத்தின் பாதையை இன்று இவர்கள் சிதைத்து அதை ஒரு கேலிப்பொருளாய் மாற்றிய காரணம் என்ன??

வரிவரியாய் பைபிள் படிப்பதாக சொல்லும் விசுவாசிகளின் கண்களுக்கு பாஸ்டர்களின் தவறுகளை ஒப்பிட்டு பார்க்ககூடாமற் போனதென்ன???

udaya:
காரணம் , வேதாகமத்தை அவர்கள் serious ஆக எடுத்துக்கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை வேதாகமம் ஒரு "அட்சயப்பாத்திரம்". அள்ள அள்ள குறையாத வருவாயை ஈட்டித்தர வல்லது,

Pastors' mind voice:
வேதாகமத்தில் கூறியபடியெல்லாம் நடக்க முடியுமா ? பூமியில் உங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம் என்று வேதாகமம் கூறுகிறது....அதற்காக வங்கிக்கணக்கு இல்லாமலிருந்தால் என்னவாகிறது ? உனக்கு உண்டானவைகளை எல்லாம் விற்று தரித்திரர்களுக்கு கொடு என்று வேதாகமம் கூறுகிறது....இதை செய்தால் யார் தரித்திரர் ஆவாரென்று தெரியாதா ? கண்களைப் பிடுங்குதல் , கைகளைத் தரித்துக்கொள்ளுதல் etc.........இதெல்லாம் நடக்கிற காரியமா ? காலம் மாறுது...காட்சி மாறுது....பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடா மாறுச்சு.....புதிய ஏற்பாடே 2000 வருஷம் பழசா இருக்குது......ஏன்தான் இந்த மாதிரி கேள்விகளையெல்லாம் கேட்கிறாங்களோ தெரியல.....

udaya:
.

Navigation

[0] Message Index

Reply

Go to full version