Author Topic: கிறிஸ்தவர்கள் காதலிக்கலாமா? கூடாதா? அது எ  (Read 46260 times)

Arockya paul

  • Newbie
  • *
  • Posts: 4
    • View Profile
**** Valentine's DAY BIGGEST WEAPON OF SATAN~!!!!! DANGER DANGER!!!! ---*****
பழைய பதிவு ஆனாலும் திரும்ப இங்கே வெளியாக்கப்படவேண்டிய பதிவு

சிலுவையை பற்றிய உபதேசம்:-

உண்மையான அன்பு தேவனின் அன்பு மட்டும் தான்  தேவனுடைய அன்புடன் ஒப்பிடும்போது காதல் என்பதும் உண்மையான அன்பு அல்ல.

#ஒரு ஸ்திரீயை இச்சையோடே பார்க்கிற எவனும் அவளோடே விபசாரம் செய்தாயிற்று என்று இயேசு சொன்னார். விபசாரம் என்பது திருமணத்துக்குப் பின், வேசித்தனம் என்பது திருமணத்துக்கு முன் பாலியல் பாவம். உங்கள் சரீரங்களை வேசித்தனத்திற்கு ஒப்புக்கொடாதிருங்கள். ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் குற்றமற்றதாய் காணப்படுவதாக என்று வாசிக்கிறோமே.

#அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. இது ஒரு முக்கிய காரணம். பழைய ஏற்பாட்டில் "சேத்" சந்ததி தேவ புத்திரர் என்று அழைக்கப்பட்டார்கள். காயீன் சந்ததி மனுஷ குமாரர் என்றழைக்கப்பட்டார்கள். தேவபுத்திரர் மனுஷகுமாரர்களின் பெண்கள் அழகுள்ளவர்களாயிருந்தபடியால் அவர்களை பெண்கொண்டார்கள். அதன் பின் வந்த சந்ததியின் பாவம் திரளாயிருந்ததால், தேவன் உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழித்தார்.

II கொரி 6:17,18
17. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18. அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

#காதல் என்பது உண்மையான அன்பு அல்ல, அது சில வரம்புகளுக்குட்பட்டது, தேவனுடைய அன்பு மட்டும் உண்மையானது, இவ்வுலகிலும், விண்ணுலகிலும்!

#எனவே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாமல் இருப்போமாக. மனிதர்களின் காதலை ஆதரித்து வேதத்தில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.
காதல் என்பது ஒரு வித வலை. அது அவர்களை பெத்து வளர்த்த பெற்றோர்களின் கையை விட்டு விலக்கி, படிப்பையும் பட்டத்தையும் ஒரு பொருட்டாக எண்ணி அவர்களை சிந்திக்க விடாமல் எதிர்காலத்தில் உள்ள ஆசீர்வாதமான பேரின்பத்திற்குள் அவர்களை நுழையவிடாமல் சிற்றின்பத்தில் சிக்க வைக்கும் அந்த வலை தான் காதல்.
அதை, கடவுளாக பார்க்கும் வாலிபம், இன்று அதை விக்கிரகமாக்கி அதை தொழுகிறபடியினால், இரண்டாம் கட்டளையிலேயே விழ வைத்து நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மெய் அன்பை விட்டே பிரிக்கத் துடிக்கும் கண்ணி தான் காதல்.
பெற்றோர்களின் ஆசை விருப்பங்கள், கனவுகள் எல்லாம் காற்றில் பறக்க விட்டு தன்னுடைய வாலிப வயதில் குடும்பம் என்றால் என்ன? என்று தெரியாத சூழ்நிலையில் அந்த காதலோடு கைகோர்த்து, இன்று சிக்கலில் இருக்கும் அநேகர் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்..
வெற்றி பெற்ற காதலர்கள், திருமணத்திற்குப் பின் அவர்கள் அநேகரின் கதறல்கள் எங்கள் உள்ளத்தை தொட்டபடியினால், வேண்டாம் அது உங்களுக்கு வேண்டாம்.
என்றுரைக்கும் வார்த்தைகளை கேளுங்கள்.
காலம் முழுவதும் வேண்டாம் அந்த சிறை…..
என்றும் விடுதலையோடு தேவனை ஆராதித்து தேவன் உனக்கென உன் எலும்பிலிருந்து உருவாக்கி உன் கண்முன் கொண்டுவருகிற அந்த ஏவாள் போதும் என்ற நல்ல மனதுடன் இருப்பாயா?
ஏவாளே! கர்த்தர் கரத்திற்குள் அடங்கியிரு. ..
#உன்னை பராமரிக்க அன்பு செலுத்த உன்னுடைய ஆதாமிடத்தில் தேவன் உன்னை கொண்டு நிறுத்துவார்.
தேவன் செய்கிற வேலையை தேவன் செய்யட்டும். நீங்கள் அதை செய்ய முற்படுவீர்களானால் தோல்வி நிச்சயம்.
நானும் என் வீட்டாருமோ என்றால் கர்த்தரையே சேவிப்போம்.
திருமணபந்தம் மனித திட்டம் அல்ல. தேவனால் நியமிக்கப்பட்டது. ஆதி 2:18-24
#உண்மையில்லாத நடக்கை திருமண வாழ்வை சிதைக்கும். மத் 5:32
திருமணம் பந்தத்தில் அன்பு கூறுதலும், கீழ்படிதலுமே பார்க்கவேண்டும். கவர்ச்சி அல்ல எபே 5:21-33
திருமண வாழ்வின் எல்லைக்கு வெளியே கொள்ளும் பாலுறவுகள் பாவம் எபி 13:4
திருமணம் கிறிஸ்துவுக்கும் சபைக்கும் நிழலுருவம். எபே 5:23,24
அது கனமுள்ளது…..
அது பரிசுத்தமுள்ளது...

#விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். எபி-13:4
நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக் கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்..!!

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
பிரசங்கத்தை இப்படி ரத்தின சுருக்கமாக முடித்து விட்டால் எப்படி?

Vicky alpha

  • Newbie
  • *
  • Posts: 4
    • View Profile
#Arokiya paul

காதல் என்பதை விபச்சார பாவத்தோடு ஒப்பிட்டு பேசியுள்ளீர்கள்.
திருமணத்திற்கு வெளியே ஏற்படும் உடலுறவு அல்லது மனஉறவே(மத் 5:28) விபச்சாரம் எனப்படும்.
காதல் என்பது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசைபடுவது. அது எப்படி பாவமாகும்??
ஒருவேளை அந்த காதலர்கள் ஊர் சுற்றி, தவறான ஒரு உடலுறவை திருமணத்திற்கு முன்பே வைத்துக்கொண்டால் அது பாவம் என்று சொல்லலாம். ஆனால் எல்லா காதலையும் அப்படி எவ்வாறு சொல்ல முடியும்??

ஒரு உதாரணத்திற்கு கேட்கிறேன்.
என் சபையில் ஒரு கிறிஸ்தவ பெண் இருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். நான் அவளை திருமணம் செய்ய விரும்புகிறேன் . அவளும் அப்படியே விரும்புகிறாள். ஆனால் நாங்கள் இருவரும் வேறு வேறு ஜாதி, பணத்தில் அந்தஸ்தில் வேறுபாடு என்பதால் எங்கள் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது பெற்றோரின் விருப்பத்தை மீறி நாங்கள் மணமுடித்தால் அது பாவமாகுமா?
நாங்கள் இருவரும் தேவனை அறிந்திருக்கிறோம். ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம். இப்போது இதுவும் பாவமாகுமா ?

நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?
யாக்கோபு 4:12

There is only one law giver. நீங்க ஏன் புதுசு புதுசா கட்டளைகளை உருவாக்கி கடவுள் மட்டத்திற்கு உயருகிறீர்கள்? Already இருக்கரத follow பண்ணுங்கப்பா..


T.Arivoli

  • Newbie
  • *
  • Posts: 1
    • View Profile
Honor thy father and mother.
Remember the commandment and act accordingly.

Marshal

  • Guest
காதல்... அது கடவுளின் ஆயுதம். இந்த உலகம் படைக்கப்பட்டதே கடவுளின் காதலால் தான், மனிதனை கடவுள் அன்பு செய்தார், ஆதாமை காதல் செய்ய ஏவாளை படைத்தார் ஆண்டவர். இந்த உலகமே காதலில் தான் இயங்குகிறது. விபச்சாரமும் காதலும் ஒன்றல்ல, சில முட்டாள்களுக்கு இது புரிவதில்லை. காதல் என்பது முழுக்க முழுக்க மனம் சார்ந்தது...

Sinthu

  • Newbie
  • *
  • Posts: 1
    • View Profile
திருமணம்  செய்யப்ோபவருடன்  திருமணத்திற்கு  முன்  உடலுறவு ொண்டால்  பாவமா ?

Gladson

  • Newbie
  • *
  • Posts: 21
    • View Profile
Sis,
It s a 100% sin of fornication


Alby

  • Guest
தாராளமாக காதலித்து திருமணம் செய்து பிறக்கும் உங்கள் குழந்தைக்கும் எப்படி காதலிப்பது என்று கற்றுகொடுங்கள். அதுவும் நீங்கள் போகும் ஆலயத்தில் நீங்களே தேடி கொடுங்கள். தயவு செய்து மற்றவர்களுக்கு ஆலோசனை கூற வேண்டாம்

Nivedha

  • Guest
கூடவே கூடாது
உங்கள் எதிர்பாலினத்தவரை இச்சை எண்ணமில்லாமல் காதலிக்க கூடும் என்று கூறுவது எப்படி என்று தெரியவில்லை.

அவர் கூறியுள்ளபடி அவருக்கேற்ற பரிசுத்தராகும் படி நம்மை அழைத்திருக்கிறார்.
காதல் அசுத்த ஆவி. பிதாவின் வீட்டை கள்ளர் குகையாக்காதீர்கள்


KINGS K

  • Guest
நாம்  ஒருவரில் ஒருவர் அன்பு  கூற வேண்டும் . (இதற்கு Example வேண்டும் என்றால் சொல்கிறேன். 🙏

Viji

  • Guest
காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.. இப்போது நான் இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன்.

எனது கேள்வி எதுவென்றால்...
காதல் தவறென்றால்
ஏன்  இயேசப்பா என்னை
காதலிக்க அனுமதித்தார்...?

கர்த்தர் நினைத்திருந்தால் என்னை தடுத்திருக்கலாமே...?

நான் நினைப்பது
என்னை இயேசு அதிகமாக நேசித்திருக்கிறார்... ஆகையால்
என் கணவர் மூலமாக அவரை நான் அறியும்படியும் காதலை தந்தார்.✝️

Salo

  • Guest
திருமண வாழ்வு கர்த்தரால் வரவேண்டும் என்றால் ஈசாக்கின் வாழ்வே வழி காட்டி...


Philip

  • Guest
கிறித்தவர்கள் காதலிக்கலாம் ஆனால் ஒரு கன்டிசன் திருமணத்திற்கு பின்பு