General Category > Tamil Bible

ஆவியில் எளிமை என்றால் என்ன?

(1/2) > >>

Arockya paul:
;)*ஆவியில் எளிமையாயிருத்தலுக்கு* சிறந்த மாதிரி இயேசுவே (2 கொரி 8:9)
அவர் பரலோகத்தில் தமக்கிருந்த அனைத்து மகிமையையும் துறந்து தம்மைத்தாமே வெறுமையாக்கி இவ்வுலகுக்கு வந்தார்.ஆவியில் எளிமையாயிருத்தல் ஆசீர்வதிக்கபட்ட இரகசியம் கிறிஸ்துவின்நிமித்தமாக ஒருவன் தன்னைத்தானே வெறுமையாக்குவதேயாகும்.
என் அண்ணன் பரிசுத்த புனித அப்.பவுல் இந்த உண்மையை கண்டறிந்த போது அவர் தன்னைத்தானே வெறுமையாக்கி தன் மேன்மைகளை குப்பையாக எண்ணினார்(பிலி 3:7,8)
நாம் நம்மை வெறுமையாக்கி நம்மை நாமே பிரதிஷ்டை செய்திருப்போமாயின் நமக்கு மிக அருமையான ஏதோ ஒன்று திடீரென்று நம்மை விட்டு எடுக்கப்பட்டு போனாலும் தேவனோடுள்ள நமது நெருங்கிய நடக்கை எவ்வித்தத்திலும் தடைபடாது;
நாம் நமது சமாதானத்தை இழக்கவோ கலக்கமடையவோ மாட்டோம்.நமக்குண்டான எரலாவற்றையும் நாம் வெறுமையாக்கிவிட்டோம் அல்லது பிரதிஷ்டை செய்துவிட்டோம் என்பதற்கு இதுவே போதுமான நீரூபணமாயிருக்கும்!!!
இப்பொழுது உங்களுக்குள்ள அனைத்தையும் நீங்கள் வெறுமையாக்கியிராவிடில் ஒருநாள் இவ்வுலகை விட்டு நீங்கள் பிரியவேண்டிய வேளை வரும்போது உங்களை வெறுமையாக்கிக்கொண்டு இவ்வுலகை விட்டுச்செல்வது உங்களுக்கு மிக கடினமாயிருக்கும்
________________________________சிலுவையைப்பற்றிய உபதேசம்________

udaya:
வெறுமையாக்குதல் என்றால் என்ன ?
ஒன்றின் மீது ஏற்படும் பற்றை நீக்கி கொள்ளுதல் என்று பொருள் கொள்ளலாமா?

//////இப்பொழுது உங்களுக்குள்ள அனைத்தையும் நீங்கள் வெறுமையாக்கியிராவிடில் ஒருநாள் இவ்வுலகை விட்டு நீங்கள் பிரியவேண்டிய வேளை வரும்போது உங்களை வெறுமையாக்கிக்கொண்டு இவ்வுலகை விட்டுச்செல்வது உங்களுக்கு மிக கடினமாயிருக்கும்/////

இவ்வுலகை விட்டு செல்வதென்பது துரிதமாக நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு. பெரும்பாலும் எதிர்பாராதது... எதற்கும் நேரம் கிடைக்காது.... அந்த சமயம் , நம்மை நாம் வெறுமையாக்கிக் கொள்ளுதலில் கடினம் என்ன சுலபம் என்ன...

அது சரி......
இந்த உலகில் உள்ள அனைத்தையும் ஆண்டனுபவித்துக் கொள்ளுங்கள் என்று தேவனாகிய கர்த்தர் சொல்லியிருக்கும் பொழுது , வெறுமையாக்கிக் கொள்வதனால் என்ன பலன் , என்ன பயன் ?

Rajesh RP:
நாம் அவற்றை ஆள வேண்டும்
அவை நம்மை அல்ல

Joshua R:
*ஆவியில் எளிமை*

ஆவியில் எளிமை என்பது இயேசு கிறிஸ்துவை அதற்கு ஒரு நல்ல மாதிரியாக சொல்லலாம்.

இயேசு கிறிஸ்து சாலமோனிலும் பெரியவர் அவரிடத்திலே ஞானம் அளவில்லாத இருந்தது அப்படி இருந்தும் ஒவ்வோருநாளும் அவர் பிதாவையே சார்ந்திருந்தார் அதுதான் ஆவியில் எளிமை.
எல்லாவற்றையும் விற்று தரித்திருக்கும் கொடுத்துவிட்டு பின்பு என்னைப் பின்பற்று என்று சொன்னவர் ஒருபோதும் நாளைய தினத்தைக் குறித்து கவலைப்பட்டிருக்கவே மாட்டார்

பசியோடு இருக்கும் பிச்சைக்காரன் ஒவ்வொரு வேலையும் பசிக்கு  பிறரை சார்ந்து இருப்பது போல ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே மன்னாவை பாத்திரத்தில் நிரப்பி கொண்டு வந்து சாப்பிடுவது போல தேவனையே சார்ந்து இருக்கிறான்.

அந்த நாள் பசிக்காக தனக்கும் தன் வீட்டாருக்கும் சாப்பிட மட்டுமே அதை பாத்திரத்தில் சேர்த்து அதை சேர்த்து வைத்துக் கொள்கிறான்.

நாளைய தினத்தைக் குறித்து கவலை இல்லாது இருக்கிறான்

போதும் என்ற மனதோடு கூடிய தெய்வபக்தி மிகுந்த ஆதாயம் என்று நிச்சயமாய் அறிந்திருக்கிறான்
உண்ணவும் உடுக்கவும் உங்களுக்கு உண்டாகி இருந்தால் போதும் என்று இருப்பது...
அதுதான் ஆவியில் எளிமை.
ஒரு சிறு குழந்தை தனது வயிற்றுப் பசிக்காக அனுதினமும் அழுது பால் குடிப்பது போல.....
தேவனையே சார்ந்து இருப்பதுதான் ஆவியில் எளிமை.

John philip:
தேவன் ஆவியாய் இருக்கிறார்,  அவர் மனிதனை உண்டாகும்போது தம்முடைய சாயலாக மனிதனை உண்டாக்கினார், அப்படியானால் மனிதனுடைய உண்மையான சாயல் தேவன் ஆவியாய் இருப்பது போலவே, உண்மையான மனிதன் ஆவிக்குரிய மனிதன். மனிதன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனபோது, ஆவிக்குரிய ரீதியில் தேவனை விட்டு பிரிந்தான்.  மறுபடியும் மனிதனால் தேவனை ஆவியில் தொடர்புகொள்ள முடியவில்லை. அதைதான் இயேசுவே சொல்லுகிறார். ஆவியில் தேவனை தொடர்பு கொள்ள முடியாது இருக்கிற மனிதன் பாக்கியவான், ஏனெனில் பரலோகம் அவனுக்காகவே உள்ளது. அதாவது ஆவியில் தேவனை தொடர்பு கொள்ள முடியாத இருக்கிறவர்கள் பாக்கியவான்கள், காரணம் பரலோகராஜ்யம் அவர்களுடையது.  எளிமை என்றால் இயலாமை என்று அர்த்தம் தாழ்ந்த நிலையில் இருப்பது என்று அர்த்தம். அப்படியே தேவனை தொடர்பு கொள்ள முடியாத இயலாமையும், தாழ்ந்த நிலையிலும் இருப்பது. இயேசு சொல்லுகிறார் அவர்களுக்காகவே பரலோகராஜ்யம் உள்ளது. இப்பொழுது நீங்கள் மனம் திரும்பும் பொழுது அந்த பரலோகராஜ்யம் நீங்கள் உடையதாக மாறுகிறது என்றார்.

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version