Author Topic: கீழடி ஆத்துமாக்கள்  (Read 5475 times)

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
கீழடி ஆத்துமாக்கள்
« on: October 01, 2019, 10:56:27 PM »
கீழடியில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளின் 5ம் கட்ட முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.. பல விஷயங்களைப் பற்றி ஆதாரங்கள் வெளிப்பட்டிருந்தாலும் , அவற்றில் நமது கருத்தைக் கவரும் அம்சம்.... அங்கே வாழ்ந்த மக்கள் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றி வாழ்ந்ததிற்கான எந்த ஒரு சான்றும் இல்லை என்பதுதான்....

பாலஸ்தீன பிரதேசத்தில் இருந்துதான் மக்கள் உலகின் மற்ற பகுதிகளுக்கு சிதறி வாழ்ந்திருக்க வேண்டும் என்ற கிறித்தவ புரிதல் உண்மையானால் , கீழடி மக்கள் ஏன் யெகோவாவையோ அல்லது பாகால் போன்ற விக்ரங்களையோ வணங்கவில்லை என்ற இயற்கையான அய்யம் எழுகிறது....

அல்லது..... வேதாகம காலத்திலேயே இங்கும் மக்கள் வாழ்ந்தனர் என்பது நிரூபணமாகிறது.....

இதற்கு விளக்கம் உண்டா..... ( "கீழடியும் கிறித்தவமும்" என்ற தலைப்பில் ஒரு வீடியோ யூ ட்யூபில் உள்ளது. ஆனால் அது இந்த ஐயங்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை )

ஆய்வுகள் தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் ஆதாமுக்கு முன்னரே தமிழ் நாகரிகம் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்படாலும் வெளிப்படலாம்...
« Last Edit: October 01, 2019, 10:59:10 PM by udaya »

Joel

  • Guest
Re: கீழடி ஆத்துமாக்கள்
« Reply #1 on: November 15, 2019, 11:25:06 AM »
இல்லை, கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதாம் மட்டுமே ஆனால், ஆதாமுக்கு பெற்றோர் உள்ளனர் .இது பைபிளில் உள்ளது. பண்டைய மக்களுக்கு எந்த கடவுளும் இருந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் மக்கள் கடவுளிடம் பேசுகிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் நேருக்கு நேர் அல்ல, இங்கே இன்னொரு குழு மக்கள்அல்லது கடவுள் இருக்கிறார், எவாலுக்குமுக்கு பெற்றோரும் உள்ளனர் .அதைப் பற்றி சிந்தியுங்கள்

Vicky alpha

  • Newbie
  • *
  • Posts: 4
    • View Profile
Re: கீழடி ஆத்துமாக்கள்
« Reply #2 on: November 18, 2019, 03:44:13 AM »
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பெற்றோர்கள் உள்ளனரா ? அது வேதத்தில் இருக்கிறதா ?? எங்கே என்று சற்று குறிப்பிட்டு சொல்ல முடியுமா??