Author Topic: Cinema songs kekurathu thappa?  (Read 3611 times)

Ishak. J

  • Guest
Cinema songs kekurathu thappa?
« on: September 25, 2018, 11:24:03 AM »
Life Pathi.... Motivation cinema songs kekurathu thappa.?

Vickyalpha

  • Guest
Re: Cinema songs kekurathu thappa?
« Reply #1 on: September 26, 2018, 07:21:14 PM »
பொதுவாகவே கிறிஸ்தவத்தில், அதீத கிறிஸ்தவர்கள் ,பைபிளில் இல்லாத கட்டுப்பாடுகளை மக்கள் மேல் திணிப்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நான் என் வாழ்க்கையில் பார்த்த சில முட்டாள்தனங்கள்,

1. கிறிஸ்தவ பெண்கள் பூ வைக்க கூடாது. (ஆனால் பூ போன்ற டிசைன் உள்ள மாடல் கிளிப் வைத்துக்கொள்ளலாம்).
2. கிறிஸ்தவர்கள் வீட்டில் எண்ணெய் விளக்கு போட கூடாது. ( ஆனால் மெழுகுதிரி வைத்துக்கொள்ளலாம்).
3.கிறிஸ்தவர்கள் வாசல் கூட்டி ,கோலம் போட கூடாது.
4.கிறிஸ்தவர்கள் நகை போட கூடாது. ( ஆனால் கையில் கோல்ட் வாட்ச் கட்டலாம். Branded shirts and shoes போடலாம். முகம் முழுவதும் மேக்கப் அப்பிக்கொள்ளலாம்.)

இன்னும் பல.

இதையெல்லாம் கண்டிப்பாக செய்யவேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் இதெல்லாம் செய்யலாமா வேண்டாமா என்பது தனிப்பட்ட விருப்பங்கள். அது அவருக்கும் கடவுளுக்குமானது. கடவுள் உணர்த்தினால் அதை விட்டு விடலாம். மற்றபடி "நான் விட்டுவிட்டேன். நீயும் விட வேண்டும்" என்று பேசுவது தவறு.

இவர்களை பார்க்கும் போது,

7 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
மாற்கு 7:7

8 நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள், மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார்.
மாற்கு 7:8

என்ற வசனங்களே நினைவுக்கு வருகின்றன.