Author Topic: Wine kudikirathu.......?  (Read 3458 times)

Ishak. J

  • Guest
Wine kudikirathu.......?
« on: October 03, 2018, 03:34:12 AM »
Wine kudikirathu thappa...?

udaya

  • Guest
Re: Wine kudikirathu.......?
« Reply #1 on: October 03, 2018, 04:52:43 AM »
தப்பில்லை .................ஆனா steadyயா நிக்கணும் .

karthick win

  • Guest
Re: Wine kudikirathu.......?
« Reply #2 on: October 16, 2018, 09:39:59 PM »
Puriyala brother @udhaya

udaya

  • Guest
Re: Wine kudikirathu.......?
« Reply #3 on: October 16, 2018, 11:50:31 PM »
நிதானத்தை குறிப்பிட்டேன் .... வைனோ அல்லது வேறு எந்த ஒரு மதுபானத்தையும் நான் பருகியதில்லை . அனுபவமில்லை .மன்னிக்கவேண்டும்.....

Vickyalpha

  • Guest
Re: Wine kudikirathu.......?
« Reply #4 on: October 17, 2018, 01:21:17 AM »
எனக்கு தெரிந்தவரை வைன் குடிப்பதை தப்பு என்று வேதம் சொல்லவில்லை.
இயேசு போஜன பானம் பண்ணுகிறவராக இருந்தார் என்று வாசிக்கிறோம். புசிக்கிறவராகவும், குடிக்கிறவராகவும் இருந்தார் என்று சொல்வது கண்டிப்பாக தண்ணீர் குடிப்பதை பற்றி சொல்லவில்லை. ஏனெனில் தண்ணீர் குடிப்பது பொதுவாக எல்லாரும் செய்வதுதான். அதை தனியாக குறிப்பிட்டு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. எனவே ஏசுவும் திராட்சைரசம் எனப்படும் wine குடித்திருப்பார் என்றே கருதுகிறேன்.(திராட்சை பழ juiceஐ wine என்று சொல்லமாட்டார்கள். எனது சபையில் இருக்கும் பெரியவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் :(  )

6 மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவனுக்கு திராட்சைரசத்தையும் கொடுங்கள்.
நீதிமொழிகள் 31:6

7 அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
நீதிமொழிகள் 31:7

மேலும் பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரைகள் சொல்லும்போது இப்படி சொல்லுகிறார்,

23 நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசமும் கூட்டிக்கொள்.
1 தீமோத்தேயு 5:23

எனவே திராட்சைரசம் குடிப்பது பிரச்சனை இல்லை. ஆனால் குடித்து வெறித்திருக்க கூடாதென்று வேதம் போதிக்கிறது.
எளிமையாக சொன்னால் @udaya brother மேலே சொன்னது போல்,
தப்பில்லை... ஆனால் புத்தி தவறாமல் நிலையாக இருக்கணும்.



udaya

  • Guest
Re: Wine kudikirathu.......?
« Reply #5 on: October 17, 2018, 03:01:53 AM »
@:திராட்சை பழ juiceஐ wine என்று சொல்லமாட்டார்கள். எனது சபையில் இருக்கும் பெரியவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்

திராட்சையை பிழிந்தவுடன் கொடுத்தால் அது JUICE
பிழிந்த சாற்றை மண்ணில் புதைத்து வைத்து , அல்லது இருக்கமாக மூடி வைத்து பலநாட்களுக்குப் பிறகு கொடுத்தால் அது WINE
சரியா ?

Vickyalpha

  • Guest
Re: Wine kudikirathu.......?
« Reply #6 on: October 17, 2018, 03:58:55 AM »
@udaya
ஆமாம் brother. மண்ணில் புதைத்தோ அல்லது இறுக்கமாக மூடியோ வைத்தால், 30-50 நாட்களில் yeast அதில் உள்ள இனிப்பை சாப்பிட்டு அதை ஆல்கஹாலாக மாற்றும். அதையே wine என்கிறோம்.
கேரளாவில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் பல குடும்பங்களில் இது செய்வதுண்டு.