General Category > Tamil Bible

டைனோசர்கள்

(1/5) > >>

Vickyalpha:
இன்று டைனோசர்களின் எலும்பு படிமங்கள் உலகமெங்கும் பரவலாக கிடைக்கின்றன. ஆனால் பைபிளின் எந்த இடத்திலும் மனிதன் டைனோசர்களை சந்தித்ததாக நிகழ்வு ஏதும் வரவில்லை. லிவியதானை பற்றி குறிப்பிட்டாலும் அது திமிங்கலத்தை குறிப்பதை போலவே உள்ளது. எந்த இடத்திலும் மனிதர்களை டைனோசர்கள் கொன்றதாகவும் அல்லது மனிதர்களோடு இடைப்பட்டதாகவும் சொல்லப்படவில்லை. அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வாழ்ந்த , அவ்வளவு பெரிய மிருகத்தை பற்றி ஏன் பைபிளில் குறிப்பிடப்படவில்லை??

udaya:
ஆதியாகமம் 1ம் அதிகாரம்..... 1ம் வசனத்திற்கும் 2ம் வசனத்திற்கும் இடையே பல லட்சக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடி விட்டதாக சில வேதாகம ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர் . இந்த காலகட்டத்தில்தான் டைனோசர்கள் போன்ற பல அரிய உயிரினங்கள் வாழ்ந்ததென்றும் , தேவலோகப்போர் ஒன்று நடை பெற்றதாகவும் , அப்போரில் இவைகள் அழிந்து விட்டதாகவும் கூறுகின்றனர் . இதே காலகட்டத்தில்தான் லுசிபர் (ஏதேன் தோட்ட சர்ப்பம் ) பூமியில் தள்ளப்பட்டதாகவும் கூறுகின்றனர். இதற்கு GAP THEORY என்று பெயர் . ( காயினின் மனைவிகூட இந்த காலகட்டத்திலிருந்து வந்தவர்தானோ ? )

இந்த காரியங்களை கடவுள் வேதாகம எழுத்தாளர்களுக்கு வெளிப்படுத்தாமைக்கு காரணம் , மனிதன் , தான் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பம் ஆனவன் என்று கருதவேண்டுமென்றுதான்...

மேற்கூறியவற்றை  ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் விருப்பம் .

Chandruparkulan:
ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் சூரியன் நான்காம் நாள் வேறு பிரிக்க பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இன்றைய கால அளவு 24 மணிநேரம் என்பது சூரியனை மையமாகக் கொண்டு கணக்கிடப்பட்டது. முதல் மூன்று நாள் என்பவை பல மில்லியன் ஆண்டுகளாக கூட இருக்கலாம். அந்த ஒரு நாள் கணக்கு பிரபஞ்சத்தின் மையப் புள்ளியில் இருந்து கணக்கிட வேண்டும். அறிவியலாளர்கள் டைனோசர்களின் காலம் before  231 to 241 million என கூறுகின்றனர். இந்த காலத்தில் டைனோசர் தோன்றி அழிந்து விட்டது என அறிந்து கொள்ளலாம்.

udaya:
முதல் மூன்று நாட்கள் சூரியன் இல்லாமலேயே சாயங்காலமும் விடியற்காலமும் வந்து போகிறது. இதையும் கொஞ்சம் சரி செய்தால் நல்லது.

Chandruparkulan:
முதல் ஐந்து ஆகமங்களும் மோசே அவர்களால் எழுதப்பட்டது. அவற்றை பஞ்சாகமம் என்கிறோம். அதே மோசேசங்கீஒன்உண்டுசஙங்90. சங்:90:4,5,6. ல் காலை மாலை என்பது ஒரு துவக்கம் முடிவு என்பதையே குறிக்கிறது.தான்ஆதியயாகமத்திலும்  சொல்லப்பட்டு இருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னபடி வேதத்தின் மொழி நடை மிகவும் முக்கியமானது .

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version