Author Topic: டைனோசர்கள்  (Read 6567 times)

udaya

  • Guest
Re: டைனோசர்கள்
« Reply #15 on: October 19, 2018, 08:36:45 PM »
@:reply#9

Gap theory யை ஏற்றுக் கொண்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை reply#8 ன் கடைசி பாராவில் கூறியுள்ளேன்.

Vickyalpha

  • Guest
Re: டைனோசர்கள்
« Reply #16 on: October 19, 2018, 09:29:49 PM »
ஆதாமுக்கு முன்னரே பாவம் இருந்ததுதானே @udaya brother.
ஆதாம் படைப்புக்கு முன்பே சாத்தான் இருந்தானல்லவா?

udaya

  • Guest
Re: டைனோசர்கள்
« Reply #17 on: October 20, 2018, 12:20:41 AM »
ஆதாமுக்கு முன்பே பாவம் இருந்த்தென்றால் அதற்கு கடவுள்தான் முழு பொறுப்பு. சாத்தானுக்கும் அவர்தான் முழு பொறுப்பு. அப்புறம் ஆதாமின் பாவம் கடவுளின் ஏற்பாடு என்றாகிவிடும் .அதைப் போக்க வந்த இயேசு கிறிஸ்து வின் மரணம் ஒரு செட் அப் என்றாகி விடும். மனிதனால்தான் இப்புவியில் பாவம் வந்த்து என்ற வசனம் பொய்யாகிவிடும்.  பிரச்சனை புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

Vickyalpha

  • Guest
Re: டைனோசர்கள்
« Reply #18 on: October 20, 2018, 08:39:14 AM »
கடவுள்தான் சாத்தானையும் படைத்தார். அப்படி என்றால் சாத்தான் பாவம் செய்ததுக்கும் கடவுள் தானே பொறுப்பு ? !!
சாத்தான் மூலமாய் பாவம் உலகத்தில் வந்தது என்றால், சாத்தானிடம் முதன் முதலில் பாவம் எங்கிருந்து வந்தது ??
ஒரே குழப்பமாக இருக்கிறதே !!

udaya

  • Guest
Re: டைனோசர்கள்
« Reply #19 on: October 20, 2018, 12:00:09 PM »
சகோ.  ஒரு விஷயத்தை இங்கு நான் தெளிவு படுத்த விரும்புகிறேன்.  சாத்தானைப் பற்றி பேச்சு செல்வதால் ,
  சாத்தானுக்கும் லூசிபருக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். லூசிபர்தான் தீமையின் அடையாளம். சாத்தான் அல்ல.

2015 ம் வருடம் மே 19 அன்று , " சாத்தான் என்பவன் யார்" என்ற தலைப்பில் இதே கருத்து களத்தில் என்னுடைய புரிதலை பதிவிட்டிருக்கிறேன்.

முடியுமானால் அதை ஒரு glance செய்யவும்.

கருத்து பரிமாற்றத்தை தொடரலாம் .

udaya

  • Guest
Re: டைனோசர்கள்
« Reply #20 on: October 21, 2018, 01:20:42 AM »
@ : Reply#18

சாத்தானை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு கீழ்க்கண்ட வசனங்களை கவனிக்கவும் .

ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே, கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். ஏசாயா - 45 : 7

உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? புலம்பல் - 3 : 38

அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா - 55 : 11

தேவாகிய கர்த்தர் , வாயின் வார்த்தைகள் மூலமாக உலகைப் படைத்தார் என்று கூறும் வசனங்களையும் நினைவில் கொள்ளவும் .


யார் மூலமாக பாவம் வந்திருந்தாலும் , காரணர் அவரே . எதுவும் அவர் சித்தமே என்று எண்ணவேண்டியுள்ளது . ( ஆதாம் பாவம் செய்யப்போவதை தேவன் முதலிலேயே அறியவில்லையா ? தண்ணீரால் உலகத்தை அழித்தாலும் பாவம் போகாது என்பது , அழி்ப்பதற்கு முன்பே தேவனுக்கு தெரியாதா ? போன்ற கேள்விகளுக்கு , பதில் இதுவாக இருக்கலாம் }