General Category > Tamil Bible

பைபிள் கடவுளை மனித தரத்தில் பார்க்கிறதா??

(1/7) > >>

Vickyalpha:
6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
ஆதியாகமம் 6:6

கடவுள் முக்காலமும் உணர்ந்தவர், அவரே ஆதியும் அந்தமுமானவர் எனில், அவருக்கு மனிதன் பாவம் செய்யப்போவது அவருக்கு தெரியாதா? தெரிந்திருந்தால் ஏற்கனவே தெரிந்த விஷயத்துக்கு ஏன் கவலைப்படவேண்டும்??
தெரியாதெனில் அவர் எப்படி கடவுளாவார்??
கடவுளை தரம்தாழ்த்துவதைப்போல் உள்ளதே இந்த வசனம் !!

(P.S : நான் முஸ்லிமோ, ஹிந்துவோ அல்லது கடவுள் மறுப்பாளனோ அல்ல. விதண்டாவாதத்திற்காகவும் இந்த கேள்வியை கேட்கவில்லை. உண்மையை தெரிந்து கொள்ளும் நோக்கத்திலேயே கேட்கும் ஒரு இளைஞன்.)

udaya:
ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் இதற்கு பதிலளிக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

ஒரு உதாரணத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.......

ஒரு ஏழை இளைஞனை பணக்கார பெண் ஒருத்தி காதலித்தாள் .
ஆனால் அவனோ , அவளுக்கு மிக மரியாதை செலுத்திக்கொண்டு அவளிடமிருந்து தள்ளியே இருந்து வந்தான் . 
இதனால் வருத்தம் அடைந்த அந்த பெண் , இளைஞனிடம் ....ஏன் என்னிடம் நெருங்கி பழக மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டாள் .
அதற்கு " நீ பணக்காரியாயிற்றே ...அதனால் உன்னிடம் மனம் விட்டு பழக என்னால் முடியவில்லை " என்று இளைஞன் பதிலளித்தான் .
ஓ..அப்படியானால் என் பணத்தை உதறிவிட்டு உன்னிடம் வருகிறேன் என்று அந்த பெண் பதிலளித்தாள் .
பணத்தை உதறிவிட்டு வந்தால் போதாது ....உன் " பணக்காரத்தனத்தையும் " விட்டுவிட வேண்டும் என்று இளைஞன் கூறினான் .
இப்போது அந்த பெண்ணுக்கு புரிந்துவிட்டது என்ன செய்ய வேண்டுமென்று .
இளைஞனுக்காக  அனைத்தையும் உதறித்தள்ளி , அவனிடம் வந்து சேர்ந்து , ஏழ்மையை ஏற்று ,  அவனை மணந்து கொண்டாள் .
ஏழ்மையை ஏற்ற அந்த பெண் , தன்னையும் ஒரு ஏழையாக பாவித்து , அதே சிந்தனை கொண்டு செயல்பட்டு வாழ ஆரம்பித்தாள் .

இதேபோன்றுதான் கடவுளும் , மனிதத்தனமான செயல்களால் மட்டுமே மனிதனை நெருங்கி சேரமுடியும் என்று கண்டு , தான் படைத்த மனிதனுக்காக அனைத்தையும் செய்ய தயாரானார் .  இதன் முதற்படியைத்தான் நீங்கள் குறிப்பிடும் வசனம் எடுத்துக்காட்டுகிறது . பரலோகத்தை மட்டுமல்ல.. " பரலோகத்தனத்தையும் " புறம்பே தள்ளி மானிட உருவெடுத்து , மணவாட்டியாய் வந்தார்....

*இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
*அடுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.
*என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
*கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்
*இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை, கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
*அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று.
*அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது.

போன்ற வேதாகம வார்த்தைகள் , மனித அளவுகோலில் கூறப்பட்டிருப்பதை கவனித்தால் உங்கள் ஐயம் நீங்கும் .

எனவே , நீங்கள் குறிப்பிடும்  வசனம் கடவுளை தரம் தாழ்த்துவதைப்போல் உள்ளதாக கருத முடியாது .

udaya:
நான் கூறிய உதாரணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த பெண் , இப்பொழுது ஏழ்மை வாழ்கையை முடித்துக் கொண்டு ,  அந்த இளைஞனை விட்டுப்பிரிந்து  , தன்னுடைய பணக்கார உலகத்துக்கே சென்றுவிட்டாள் . நீதிமன்றத்திலே அவனை நிறுத்தி , அவன் தனக்கு இழைத்த துரோகம் குறித்து  நியாயம் விசாரிப்பதாக சொல்லி சென்றிருக்கிறாள் .

கடவுளை தரம்தாழ்த்துவதைப்போல் காட்டுவதற்கு வேறு வசனங்கள் உள்ளன .

Chandruparkulan:
#2
கடவுளின் தரம் குறைக்கும் அவ்வசனங்கள் யாது.

udaya:
ஆதி 32:24-30

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version