Author Topic: பைபிள் கடவுளை மனித தரத்தில் பார்க்கிறதா??  (Read 7629 times)

Vickyalpha

  • Guest
6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
ஆதியாகமம் 6:6

கடவுள் முக்காலமும் உணர்ந்தவர், அவரே ஆதியும் அந்தமுமானவர் எனில், அவருக்கு மனிதன் பாவம் செய்யப்போவது அவருக்கு தெரியாதா? தெரிந்திருந்தால் ஏற்கனவே தெரிந்த விஷயத்துக்கு ஏன் கவலைப்படவேண்டும்??
தெரியாதெனில் அவர் எப்படி கடவுளாவார்??
கடவுளை தரம்தாழ்த்துவதைப்போல் உள்ளதே இந்த வசனம் !!

(P.S : நான் முஸ்லிமோ, ஹிந்துவோ அல்லது கடவுள் மறுப்பாளனோ அல்ல. விதண்டாவாதத்திற்காகவும் இந்த கேள்வியை கேட்கவில்லை. உண்மையை தெரிந்து கொள்ளும் நோக்கத்திலேயே கேட்கும் ஒரு இளைஞன்.)

udaya

  • Guest
ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் இதற்கு பதிலளிக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

ஒரு உதாரணத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.......

ஒரு ஏழை இளைஞனை பணக்கார பெண் ஒருத்தி காதலித்தாள் .
ஆனால் அவனோ , அவளுக்கு மிக மரியாதை செலுத்திக்கொண்டு அவளிடமிருந்து தள்ளியே இருந்து வந்தான் . 
இதனால் வருத்தம் அடைந்த அந்த பெண் , இளைஞனிடம் ....ஏன் என்னிடம் நெருங்கி பழக மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டாள் .
அதற்கு " நீ பணக்காரியாயிற்றே ...அதனால் உன்னிடம் மனம் விட்டு பழக என்னால் முடியவில்லை " என்று இளைஞன் பதிலளித்தான் .
ஓ..அப்படியானால் என் பணத்தை உதறிவிட்டு உன்னிடம் வருகிறேன் என்று அந்த பெண் பதிலளித்தாள் .
பணத்தை உதறிவிட்டு வந்தால் போதாது ....உன் " பணக்காரத்தனத்தையும் " விட்டுவிட வேண்டும் என்று இளைஞன் கூறினான் .
இப்போது அந்த பெண்ணுக்கு புரிந்துவிட்டது என்ன செய்ய வேண்டுமென்று .
இளைஞனுக்காக  அனைத்தையும் உதறித்தள்ளி , அவனிடம் வந்து சேர்ந்து , ஏழ்மையை ஏற்று ,  அவனை மணந்து கொண்டாள் .
ஏழ்மையை ஏற்ற அந்த பெண் , தன்னையும் ஒரு ஏழையாக பாவித்து , அதே சிந்தனை கொண்டு செயல்பட்டு வாழ ஆரம்பித்தாள் .

இதேபோன்றுதான் கடவுளும் , மனிதத்தனமான செயல்களால் மட்டுமே மனிதனை நெருங்கி சேரமுடியும் என்று கண்டு , தான் படைத்த மனிதனுக்காக அனைத்தையும் செய்ய தயாரானார் .  இதன் முதற்படியைத்தான் நீங்கள் குறிப்பிடும் வசனம் எடுத்துக்காட்டுகிறது . பரலோகத்தை மட்டுமல்ல.. " பரலோகத்தனத்தையும் " புறம்பே தள்ளி மானிட உருவெடுத்து , மணவாட்டியாய் வந்தார்....

*இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
*அடுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.
*என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
*கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்
*இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை, கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
*அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று.
*அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது.

போன்ற வேதாகம வார்த்தைகள் , மனித அளவுகோலில் கூறப்பட்டிருப்பதை கவனித்தால் உங்கள் ஐயம் நீங்கும் .

எனவே , நீங்கள் குறிப்பிடும்  வசனம் கடவுளை தரம் தாழ்த்துவதைப்போல் உள்ளதாக கருத முடியாது .

udaya

  • Guest
நான் கூறிய உதாரணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த பெண் , இப்பொழுது ஏழ்மை வாழ்கையை முடித்துக் கொண்டு ,  அந்த இளைஞனை விட்டுப்பிரிந்து  , தன்னுடைய பணக்கார உலகத்துக்கே சென்றுவிட்டாள் . நீதிமன்றத்திலே அவனை நிறுத்தி , அவன் தனக்கு இழைத்த துரோகம் குறித்து  நியாயம் விசாரிப்பதாக சொல்லி சென்றிருக்கிறாள் .

கடவுளை தரம்தாழ்த்துவதைப்போல் காட்டுவதற்கு வேறு வசனங்கள் உள்ளன .

Chandruparkulan

  • Guest
#2
கடவுளின் தரம் குறைக்கும் அவ்வசனங்கள் யாது.

udaya

  • Guest

Chandruparkulan

  • Guest
இதில் எவ்வசனமும் தேவனின் தரத்தை குறைக்கும்படி காணப்படவில்லை. தொடைச்சந்து நரம்பை குறித்து இப்படி சொன்னீர்கள் என்றால் அது புரிதலில் உள்ள தவறேயாகும்.

udaya

  • Guest
மன்னிக்க வேண்டும்........தொடைச்சந்து நரம்பை நான் குறிப்பிடவில்லை . தேவன் யாக்கோபுடன் போராடியதை குறிப்பிடுகிறேன் . ஒரு மனிதனுடன் போராடி அவனால் மேற்கொள்ளப்படும் அளவிற்கா தேவன் இருந்தார் ?
இவ்வசனம் தேவனின் தரத்தை குறைக்கும்படி காணப்படுவதாக நான் நினைக்கின்றேன் .

Chandruparkulan

  • Guest
வேதத்தை படிக்கும் போது அதன் மொழி நடை மிகவும் முக்கியமானது. ஆதி :32:24,25,26 ல் சொல்லப்பட்டது போராட்டம் தான் ஆனால் நீங்கள் எண்ணுகிற போராட்டம் அல்ல. இவ்வசனங்களை தெளிவாக படித்தால் அர்த்தம் புரியும். 26 ல் என்னை ஆசிர்வதித்தால் ஒழிய உம்மை விடுவதில்லை என்று சொல்லப்பட்டு இருக்கிறது. தேவன் யாக்கோபோடு போராடி மேற்கொள்ளாதது தேவனின் தரத்தை குறைக்கும்படி அவ்விடத்தில் காணப்படவில்லை. அங்கு தேவன்பால் யாக்கோபிற்கு உள்ள
பற்றுதலையும் உறுதியையுமமே குறிக்கிறது.

udaya

  • Guest
"உயிர் தப்பிப் பிழைத்தேன்"என்று யாக்கோபு கூறும் அளவிற்கு இருவரும் விடியுமளவும் போராடியிருக்கிறார்கள். Physical activity !

Chandruparkulan

  • Guest
அந்த வசனத்தை முழுமையாக படித்தால் இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும்.  It's not physical activity.

udaya

  • Guest
தொடைசந்து நரம்பை தொட்டு.....சுளுக்கி...பிறகு நொண்டி நொண்டி நடந்து......

Physical activity?

Stephen selvam

  • Guest
@Reply 2

Andha kadhaiyil siriya matram seidhal porundhum... Avarai panakkara Paiyan endru vaithu kolvom.. idhuthan sariyaga porundhum...

That particular rich man, gave up all his sovereignty to love the poor girl. And so he did. Yet the girl did not react to his sacrifice and did not bother to love him.back and so comes the condemnation for her stubbornness.  Niyayam mathiram seiyapovadhu illai avar. Avar avarukku yetra pennai thirumam seidhukondu andha pennodu avarukku uriya yaavatraiyum sudhandharippal.
Idhu oru ulaga pragaramana udharanamagave eduthu kollungal..

Neengal innoru oru incident ah ninaivu kooravendum endru ninaikkiren..

Andha incident enakku sariyaga gnabagam varavillai.

Oru Deva thoodhananavar purppattu Deva janangalukku virodhamaga vandha 135000 perai adithu veezhthiya seyal irukkiradhu..
Appadi parthal Jacob evlo siriyavar. Jacob pizhaithadhu avarudaya oru anbaga irukkalam. Oru malyudha veeran than kuzhandhaiyidam sandai poda vendum endru illai, where it's clear that the father will conquer. Adhu Pola oru incident agave naan adhai parkindren.

Stephen selvam

  • Guest
35 அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான், அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.

2 இராஜாக்கள் 19

Chandruparkulan

  • Guest
தொட்டார் என்றே சொல்லப்பட்டு இருக்கிறது. அவனை அடிக்கவோ அல்லது குத்தவோ இல்லை. இது physical activity ஆகாது. இதில் உங்களுக்கு சந்தேகம் தான் என்ன.

udaya

  • Guest
25ம் வசனம் :
அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார். அதினாலே அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.

யாக்கோபை தேவனால் சமாளிக்க முடியவில்லை . அதனால் ஒரு அக்குபஞ்சர் touch கொடுத்தார் .

யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கும்படி நடந்த போராட்டம் physical ஆகத்தானே இருக்க வேண்டும் !


"உயிர் தப்பிப் பிழைத்தேன்"என்று யாக்கோபு கூறும் அளவிற்கு என்ன போராட்டம் ?
அது எந்த போராட்டமாக இருந்தாலும் , தேவன் மனிதனோடு போராடினார் என்பதே , கடவுளை இறக்கி விட்ட விசயம்தான் .