Author Topic: சேர்ந்து வாழ்தல் Living together  (Read 6803 times)

udaya

  • Guest
சேர்ந்து வாழ்தல் Living together
« on: October 20, 2018, 02:07:18 AM »
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் (Living together) சரியா ?

Big boss நிகழ்ச்சிகள் மூலம் இதை ஊக்குவிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

உங்களது கருத்து என்ன ?

Contract marriage அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்தல் .......குறித்தும் உங்கள் கருத்துக்கள் என்ன ?

Vickyalpha

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #1 on: October 20, 2018, 08:47:53 AM »
ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல், நண்பர்களாக மட்டும் சேர்ந்து வாழ்தல் தவறு இல்லை என்று கருதுகிறேன்.
ஆனால் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல், இல்லற வாழ்வு நடத்துவது தவறு.

Bigboss மட்டும் இல்லை: vijay tv, zee tamil channelகளில் வரும் எல்லா programகளும் என் பார்வையில் ஆபாசத்தை மட்டுமே மனதில் வைத்து நடத்துவதை போலவேதான் உள்ளது.

Contract marriage என்பதெல்லாம் marriage category யில் வராது என்று கருதுகிறேன் brother.

udaya

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #2 on: October 20, 2018, 12:13:41 PM »
எல்லா சேனல்களும் , நீங்கள் கருதுவதை போல் ஆபாசத்தை பரப்புகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இந்த BIGBOSS நிகழ்ச்சி living together concept ஐ நியாயப்படுத்துகிறது.
ஊக்குவிக்கிறது.
Promote செய்கிறது.
இது தவறில்லை என காட்ட முயற்சிக்கிறது.

கலாச்சார சீரழிவிற்கு வித்திடுகிறது.

இது ஆபத்தானது.

udaya

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #3 on: October 28, 2018, 12:28:59 AM »
Disclaimer :  என்னுடைய நிலைப்பாடு Living together க்கு ஆதரவானதல்ல.

வேதாகமத்தில் , ஏன் யாரும் திருமணம் செய்து கொண்டதாக நமக்கு காட்டப்படவில்லை ? அதாவது திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவியாக வாழ்ந்ததை வாசிக்கிறோம் .
புதிய ஏற்பாட்டின் காலத்திலேயேகூட , "கலியாணம் " என்ற ஒரு வழக்கம் ஏற்பட்ட பிறகும்கூட , யாரும் திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழந்ததாக நமக்கு காட்டப்படவில்லை . அந்த காலகட்டததில் வாழ்ந்த யோசேப்பு கூட மரியாளை " சேர்த்துக் கொண்டதாக " தானே கூறப்பட்டுள்ளது . திருமணம் செய்து கொண்டுதான் இல்லறத்தில் ஈடுபட வேண்டுமா ? Living together ஆக வாழ்ந்தால் பாவமா ? வேதத்தின் பார்வை என்ன ?

Vickyalpha

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #4 on: October 28, 2018, 05:21:32 AM »
கணவன் மனைவி என்ற பதமே திருமணமானவர்களை குறிப்பதற்காகதான் உபயோகப்படுத்தப்படுகிறது brother.
திருமணம் என்பது என்ன?
தாலி கட்டுவதா? மோதிரம் மாத்துவதா?
என் பார்வையில் திருமணம் என்பது நான்கு பெரிய மனிதர்கள் சாட்சியாக, அவர்களும் இல்லாத பட்சத்தில் தேவனை சாட்சியாக வைத்து ஒரு ஆணும் ,பெண்ணும் இனிமேல் நாம் ஒன்றாக சாகும்வரை ஒருவருக்கொருவர் உண்மையாக, அன்புடன், விட்டுக்கொடுத்து , உதவி செய்து, என்னுடையவைகளெல்லாம் உன்னுடையவை என்றும், உன்னுடையவைகள் எல்லாம் என்னுடையவை என்றும் ஒரு உறுதிமொழி எடுத்து இறுதி வரை இணைந்திருப்பதே திருமணம் brother. நீங்கள் எந்த விதத்தில் திருமணம் முடிக்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. திருமணத்திற்கு பிறகு உங்கள் இறப்புவரை எப்படி வாழ்கிறீர்கள் என்பதே முக்கியம்.

udaya

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #5 on: October 28, 2018, 05:59:26 AM »
@:நீங்கள் எந்த விதத்தில் திருமணம் முடிக்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. திருமணத்திற்கு பிறகு உங்கள் இறப்புவரை எப்படி வாழ்கிறீர்கள் என்பதே முக்கியம்.

+1.


udaya

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #6 on: October 28, 2018, 06:42:07 AM »
திருமணம் என்ற " சாட்சியுடன் கூடிய உறுதிமொழி " எடுத்து இல்லறத்தை ஆரம்பிப்பது சிறப்பானதுதான் . ஆனால் ...............
திருமணம் செய்து கொண்டுதான் இல்லறத்தில் ஈடுபட வேண்டுமா ? Living together ஆக வாழ்ந்தால் பாவமா ? வேதத்தின் பார்வை என்ன ?.............என்பது பற்றி ஏதாவது கருத்து இருந்தால் கூறுங்களேன்.....

( Living together என்பது , ஒரு ஆணும் பெண்ணும் " ஒருவருக்கொருவர் நேரடி உறுதிமொழி கொடுத்து இல்லறத்தை ஆரம்பிப்பது " , என்று வைத்துக்கொள்ளுங்களேன் )

Vickyalpha

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #7 on: October 28, 2018, 06:56:09 AM »
அதுதான் brother. யாரும் இல்லாத பட்சத்தில் ஆணும் பெண்ணும் தேவனை சாட்சியாக வைத்து தாங்களே வாழ்க்கையை தொடங்கலாம்.
ஆனால் இறுதி வரை அது தொடர வேண்டுமே. அங்கேதான் பிரச்சனையே.
இன்று living together என்ற நடைமுறை,
"பிடிக்கும் வரை சேர்ந்து வாழ்ந்துவிட்டு , பின்னாளில் பிடிக்காத பட்சத்தில், பிரிந்து சென்று விடலாம்" என்றல்லவா இருக்கிறது.
அப்படி இருக்கும்பட்சத்தில் அது வேதத்தின் படி தவறுதானே brother.

Vickyalpha

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #8 on: October 28, 2018, 07:05:05 AM »
கற்பனையாக இப்படி எடுத்துக்கொள்ளலாம் brother.
நான் ஏதோ ஒரு வெளிநாட்டில் வேலை விஷயமாக இருக்கிறேன். எனக்கு இந்தியாவில் என்று யாரும் இல்லை. நான் ஒரு தனிக்கட்டை. நான் என்ன செய்தாலும் அக்கறை எடுத்து பார்க்க யாரும் இல்லை.
என்னை போலவே ஒரு பெண்ணும் இருக்கிறாள். நாங்கள் இருவரும் திருமணம் செய்து சேர்ந்து வாழ முடிவெடுக்கிறோம். ஆனால் நாங்கள் யாரை வைத்து திருமணம் செய்வது? எங்களுக்குதான் செய்து வைக்க யாரும் இல்லையே. எனவே நாங்கள் தேவன் சாட்சியாக திருமணம் செய்து கொண்டு வாழ முடிவெடுக்கிறோம். இப்போது வாழ்க்கையை தொடங்கிவிட்டோம். நாங்கள் கணவன் மனைவி தான் இனிமேல். ஆனால் கொஞ்ச நாளுக்கு பிறகு நாங்கள் பிரிந்து, நான் வேறொரு பெண்ணுடனோ அல்லது அவள் வேறு ஒரு ஆணுடனோ சேர்ந்து வாழ முற்பட்டால் அது விபச்சாரம். அது பாவம்.
இன்றைய living together நடைமுறை இப்படித்தான் இருக்கிறது.

udaya

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #9 on: October 28, 2018, 07:44:45 AM »
இந்த living together concept ல் இருக்கக்கூடிய மிகப்பெரிய minus point என்று நான் கருதுவது சுலபமாக பிரிதல் என்ற ஒரு அம்சம்தான்

திருமணம் செய்து கொண்டவர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக பிரிய முற்பட்டால் அது அவர்களுக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது நீதிமன்றம்,  வழக்கு , விவாகரத்து என்று பல சட்ட சிக்கல்கள் எழும் .
எனவே தங்களைத் தாங்களே அட்ஜஸ்ட் செய்து கொண்டு சிறிய சிறிய  குற்றங்களை மன்னித்து மறந்து தங்களுடைய திருமண வாழ்க்கையை தொடர்வர் .

ஆனால் living together concept ல், சுலபமாக பிரிய முடியும் என்ற ஒரு தன்மை இருப்பதே பிரிவதற்கான எண்ணத்தை உருவாக்கும்.

துரைசிங்

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #10 on: October 29, 2018, 05:59:51 AM »
கடவுள் அனுமதித்தால் வாழலாம்.  மனிதர்களுக்கு வரம்புகள் எதுவும் இல்லை.  திருமண வாழ்க்கையை கடவுள் தெளிவாக பைபிளில் சொல்லி இருக்காங்க. விஞ்ஞானமும், தொழில்நுட்பமு. முன்னேறி இருக்கிற நாளில் உயிரை தந்த உயிரை படைத்த கடவுளின் சட்டத்தை தேடி பிடித்து பின் பற்ற உங்களுக்கு கஷ்டம்.  ஜயோ பாவம். 

மனித ஞானம் மனித சட்டம் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் வாழ சொல்லியாச்சு.

இயேசு என்ன சொன்னாங்க கடவுள் கூட சேர்ந்து படைப்பின் வேலை செய்தவர்
மத்தேயு 5:32 திருமணம் செய்ய இப்படி பெண் தேவை மீறி விட்டால் அதுக்கு பேர் திருமணம் இல்லை விபச்சாரம்
1 கொரிந்தியர் 6:9,10 திருமணத்தை பற்றி பேசவில்லையா.
எதுக்கு கண்ட இடத்தில் ஆலோசனை கேட்க வேண்டும்.
மத்தேயு 19:5 திருமண சட்டத்தை தான் சொல்லுது

மனிதன் மகா மேதாவி விட்டால் கடவுளுக்கு சட்டம் கத்து கொடுத்து பட்டமும் தருவான்.
அடங்கி பணிந்து, பயந்து கீழ்படிந்து வாழ பழக வேண்டும். அது தானாகவே வராது
ஒரு அணுவை, ஒரு யானையை, ஒரு திமிங்கிலத்தை, மனிதனை செஞ்ச, படைத்த கடவுள் சேர்ந்து வாழ்வதை(living together)பற்றி ஆலோசனையோ, அறிவோ, வழிகாட்டுதலோ தரல என் மூளையில் என் அனுபவத்தில் என் படிப்பில் தான் முடியும் என்று போவது கடவுளை தெளிவாக அவமதிக்கும் செயல்.
இன்று கடவுளுடைய வார்த்தையை ஆராய்ச்சி செய்து பதில் கண்டு பிடிப்பது ரொம்ப எளிது
Bible2all net பைபிளில் சர்ச் வசதி இருக்கு. எந்த தலைப்பில் கடவுளின் ஆலோசனை வேண்டும்.  வார்த்தையை டைப் செய்தால் போதும். எல்லா வேத வாக்கும் உங்க கையில்.

திருமணம் கடவுள் அனுமதிக்காத வழியில் செய்யகூடாது, செய்யகூடாது. ‌‌‌மீறுவது என்ன மனிதனுக்கு புதுசா

Vickyalpha

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #11 on: October 29, 2018, 07:49:08 AM »
@துரைசிங்

கடவுள் அனுமதித்த திருமண வழிகள் என்ன brother?
அதைப்பற்றி கொஞ்சம் விளக்கி சொல்ல வசன ஆதாரம் காட்ட முடியுமா?


(திருமணத்திற்கு பிறகு நடந்து கொள்வதை பற்றி கேட்கவில்லை நான். எப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று ஏதும் வழிமுறைகள் இருக்கிறதா ? )
« Last Edit: October 29, 2018, 07:58:08 AM by Vickyalpha »

udaya

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #12 on: October 29, 2018, 08:00:07 AM »
@:Reply#10

கருத்து களத்திற்கு அன்புடன் வரவேற்கின்றேன்

இந்த விவாதமே சட்டங்களினால் ஏற்படும் விளைவுகளை பற்றியதுதான்

மனம்போல் வாழ விரும்பும் மனிதன் , தான் இயற்றிய சட்டங்கள் தனக்கு இடையூறாக இருப்பதாக எண்ணி அதிலிருந்து தப்பிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிதான் இந்த விவாதத்தின் தலைப்பு

மனிதன் இயற்றிய சட்டங்கள் அனைத்தும் சிறப்பானது என்று கூற இயலாது .
மனிதன் இயற்றிய சட்டங்கள் அனைத்தும் சரியானது என்றும் கூற இயலாது .
ஆனால் திருமணச் சட்டம் என்பது ஓரளவு நியாயமானதுதான் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்

ஏதேனின் ஞானப்பழம் தான் சட்டம் என்று ஒன்று உருவாவதற்கு வித்திட்டது என்று கூறலாம்.
மனிதனின் சட்டங்களுக்கு அடிப்படையே மோசேயின் நியாய பிரமாணம்தான் .எனவே மனிதன் தன்னுடைய சுய புத்தியில் சட்டங்களை இயற்றிக் கொண்டான் என்பது ஏற்கத் தகுந்தது அல்ல .சிறப்பான சட்டங்களை இயற்றிய மனிதன் நாளடைவில் தன்னுடைய ஆசைகளுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து பல சட்டங்களை வளைத்தும் மாற்றியும் ஏற்படுத்திக் கொண்டான் என்றால் அது மிகையாகாது.

ஒரு ஆணோ பெண்ணோ தன் துணையை அன்றி வேறொருவருடன் கூடினால் அதன் பெயர் விபச்சாரம் .ஆனால் அதே ஆணும் அதே பெண்ணும் விவாகரத்து பெற்று கூடினால் அது ஏற்கப்படுகிறது.

மனிதன் இயற்றிய
சட்டத்தின் அடிப்படையில் தான் எல்லா குற்றங்களும் நிர்ணயிக்கப்படுகிறது விபச்சாரம் உட்பட.

எனவே மனிதனின் சட்டங்களை, அது குறைபாடுகளுடன் இருந்தாலும் கூட , குறைவாக எடை போடக்கூடாது.
குறைகளை நீக்கி சரி செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் முறை.

கடவுளின் வழிகாட்டுதல்களை பின்பற்றலாம் என்பது ஏற்புடையதுதான்.

ஆனால் எல்லா வழிகாட்டுதல்களும் பொருந்தும் என்று எதிர்பார்க்க முடியாது

ஒருவனுடைய மனைவியை எடுத்து இன்னொருவனுக்கு கொடுத்த கடவுளின் செய்கையை எப்படி ஏற்றுக் கொள்வது ?

கடவுளின் சட்டம் என்று ஒன்றை கூற ஆரம்பித்தால் , எந்த கடவுளின் சட்டம் என்ற கேள்வி எழும் .
பல கடவுள்களை வணங்கும் மக்களை கொண்ட ஒரு நாட்டில் பொதுவான ஒரு சட்டத்தை தான் அமல்படுத்த முடியும்.

ராயனுடையதை ராயனுக்கும் தேவனுடையதை  தேவனுக்கும் செலுத்துங்கள் என்ற வாக்கியம் அரசாங்கத்திற்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.


துரைசிங்

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #13 on: October 29, 2018, 11:48:38 AM »
நன்றி பிரதர் உதய், விக்கிஆல்பா.
இந்த மன்றம் கடவுளை மதிப்பதை, உயிருக்கு மேலாக நேசிப்பதை கற்றுத் தர, பழகி தர வேண்டும்.
மனிதன் எந்நாளும் கடவுளை அவமதிக்க, அசிங்கப்படுததவே குறியாக இருக்கிறான்.
ஏதேனில் நடந்தது வெறும் ஞானப்பழம் பிரச்சினை இல்லை.  நீங்க விளங்கி கொண்டது அவ்வளவு தானா.
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உங்க பிள்ளைக்கு பிள்ளையிள் பிள்ளைக்கு காலம் காலமாக குறையே வந்து விடாமல் பூரணமாக வாழ நீங்க பட்ட பாட்டை துளி கூட கவனத்தில் கொள்ளாமல் சாகவே சாகாம வாழ சாப்பிடுன்னு எவனோ சொன்னதை கேட்டு நம்பி சாப்பிடுவது முதலில் கடவுளை பற்றி இரண்டு குற்றச்சாட்டுகளை ஆமோதிக்கிறதை காட்டுது.
1. கடவுள் ஆதாமுக்கு மிக நன்மையான ஒன்னை மறைத்தவர் அதை ஆதாம் யாரோ ஒருவர் மூலம் தெரிந்து கொண்டான்
2.ஆதாம் நேரடியாக கடவுள் சட்டத்தை மீறியதால் இனியும் ஆதாம் தொடங்கி யாரையும் ஆள்வதற்கு கடவுளுக்கு அதிகாரம் கிடையாது
பிள்ளை இப்படி நிலயை உங்களுக்கு உருவாக்கினால் உங்க அடுத்த மூவ் என்ன?  இது வெறும் ஞானப்பழம் மேட்டரா
இயேசு ஆரம்பத்தில் பூமிக்கு வரதேவை உருவாக வில்லை.
தீர்க்க தரிசியும் அனுப்ப வேண்டிய தேவை இல்லை
இராஜாக்கள், தலைமைக் குரு, ஆசாரியத்துவம் தேவை கிடையாது.

எப்ப நன்றி கெட்டு அவமதிக்க கூடாத அளவில்லா கருணை,  இரக்கம், அன்பு கனிவு உள்ள உண்மை தகப்பனை எவனோ பித்தலாட்டக்காரன் பேச்சைக்கேட்டு அந்த இரண்டு பதிலளிக்க வேண்டிய கேவலமான கட்டாயத்தை உருவ்க்கினாங்களோ அதுக்கு தான் இயேசு, தீர்க்கதரிசி, ஆசாரியத்துவம், அரசுரிமை எக்சட்ரா எக்சட்ரா.

ஆதாம் உடனே அந்த பழத்தை சாப்பிட வில்லை
அவன் தனிமையில் வாழ்ந்திருந்தான்
ஏவாள் படைக்கப்பட்டான். இரண்டும் தம்பதியாக வாழ ஆரம்பித்தது. ஒரே உடலாக மத்தேயு 19:4,5யும் வாசியுங்கள். 
பழம் சாப்பிடாம வாழ்ந்த காலம் இருந்து இருக்கு.  அப்ப கீழ்படிந்து வாழ்ந்த நாள் இருந்திருக்கு.  கடவுள் பரிசுத்தமானவர்.  எந்த கறையும், களங்கமும் இல்லாதவர்.
ஆதாமுக்கு மறைத்து எந்த செயலையும் நினைத்தது கூட கிடையாது.
மனித குடும்பத்தை தான் படைத்து கொடுத்த A to Z தந்து அன்போடு, பாசத்தோடு, அக்கறையோடு தான் மட்டுமே ஆள முடியும் என்பதை நிருபிக்கும் போது யார் சட்டம் உயர்நதது, அவசியமானதுன்னு விளங்கும்.
திட்டம் இயேசுவை வைத்து தயார் ஆதியாகமம் 3:15 ஏசாயா 9:6,7 தானியேல் 2:44 மத்தேயு 6:9,10
கடவுளை வேண்டும் என்றே எதிர்த்து கலகம் செய்து எல்லாவித வாழ்க்கை முறை ஆட்சி முறை பிரயோகித்து பாத்துட்டான் மனிதன்.  விளைவை இந்த மன்றத்தில் நான் சொல்ல வேண்டாம்
மனிதர்கள் உருவாக்கும் சட்டங்கள் கடவுளை அசிங்கபடுத்தாம, அவமதிக்காம, பரிசுத்தத்தை கெடுக்காத வரை வரம்புகளுக்கு உட்பட்டு அடங்க கடவுளே பைபிளில் வேத பிள்ளைகளுக்கு கட்டளை, உத்திரவு தந்து இருக்கிறார். ரோமர் 13:1-7 லூக்கா 20:25 அப்போஸ்தலர் 4:19

கடவுளுடைய வழிகாட்டுதலை மட்டுமே ஏற்க வேண்டும். அது மட்டுமே ஏற்புடையது.
நமக்கு எது இனிமை பாத்து வாழ்வது மனம் போன போக்கு
கடவுளுக்கு எது உகந்தது பாத்து வாழ்வது வாழ்வு.  அதுக்கு நிறைய கடவுளை பற்றிய அறிவு, விபரம், கடவுளுடைய சக்தி வேண்டும். அதை கடவுளிடம் அன்றாடம் கேட்டு பெற வேண்டும்.  கேக்குறீங்களா. அவர் இல்லை என்று சொல்ல மாட்டார்.
பிரதர் விக்கி ஆல்பா உங்களுக்கு பைபிளில் நடந்த எத்தனை திருமணங்கள் பதிவு தெரியும்.
ஆதாம் ஏவாள் மணவாழ்க்கை
ஈசாக் ரெபேக்கா மணவாழ்க்கை
இயேசு போயிருந்த திருமண விழா
இந்த பதிவுகள் ஏதோ வெறும் உளறல் இல்லை
நியாயப்பிரமாணத்துக்குள் நாம இப்ப கிடையாது
மணப்பெண் பைபிள் தெரிந்திருக்க வேண்டும் (அவிசுவாசியாக இருக்க கூடாது)
கண்ணிப்பெண்ணாக இருக்க வேண்டும் (இல்லன்னா விபச்சாரமாகி விடும்)
உபாகமம் 22:13-30
1தெசலோனிக்கேயர் 4:3,5
எபிரேயர் 13:1-6
தன் வருங்கால மனைவியை சான்றாகக் தேர்ந்தெடுக்க நீதிமொழிகள் 31:10-31 ஒரு சகோதரருக்கு எப்படி உதவும்.
இளமை மலரும் பருவத்தை கடப்பதற்கு முன்பு திருமணம் செய்யாதிருப்பது ஏன் நல்லது 1 கொரிந்தியர் 7:36, 13:31 மத்தேயு 19:4,5
தனக்கு கணவராக வரப்போகிறவரிடம் எப்படிப்பட்ட குணங்கள் இருக்க வேண்டும்
என்பதை தெரிந்து கொள்ள சகோதரிக்கு உதவ இந்த வசனங்கள் எப்படி உதவுகிறது சங்கீதம் 119:97 ‌‌1 தீமோத்தேயு 3:1-7

Vickyalpha

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #14 on: October 29, 2018, 05:25:00 PM »
@துரைசிங்
65 ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியே நமக்கு எதிராக நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.

66 ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னான்.

67 அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.
ஆதியாகமம் 24:65-67

மேலே திருமணம் என்ற ஒரு நிகழ்வு நடந்ததாக சொல்லவில்லை. தனக்கு பிடித்த பெண்ணை பார்த்தவுடன், அவளை கூடாரத்திற்கு அழைத்து கொண்டு சென்று வாழ தொடங்கிவிட்டான்.

யாக்கோபு திருமண நிகழ்வு பார்த்தீர்களா?
21 பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.
ஆதியாகமம் 29:21

22 அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான்.
ஆதியாகமம் 29:22

23 அன்று இரவில் அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான். அவளை அவன் சேர்ந்தான்.
ஆதியாகமம் 29:23
இவ்வளவுதான் யாக்கோபின் திருமண நிகழ்வு.

இயேசு திருமண விழாவிற்கு போயிருந்தார். உண்மைதான். ஆனால் பைபிளில் எங்கும் "இப்படித்தான் திருமணம் செய்ய வேண்டும், இப்படி செய்யப்படுகிற திருமணத்தை தான் தேவன் அங்கீகரிப்பார்" என்று எங்குமே குறிப்பிடப்படவில்லையே.


#கன்னியாக இருக்கவேண்டும்# எப்படி கண்டுபிடிப்பீர்கள்? திருமணத்திற்கு முன்பே virgin test எதுவும் எடுக்க வேண்டுமோ??

கன்னிதன்மை என்று எதை சொல்கிறீர்கள்?? உடல் அளவிலா? இல்லை மனதளவிலா??
இச்சையோடு பார்க்கிற எவரும் விபச்சாரம் செய்ததற்கு ஒப்பாயிற்று என்று யேசு சொன்னாரே..
அப்படி பார்த்தால் இங்கு யார் நான் தூய்மையானவன்/தூய்மையானவள் என்று மார்த்தட்ட முடியும்??

சரி இப்படி வைத்து கொள்ளலாம். இயசுவினிடத்தில் கல்லெறியும் படி கொண்டு வரப்பட்ட விபச்சார பெண்ணை பார்த்து
.. இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
யோவான் 8:11
இப்போது இவள் மனம் திரும்பி , தேவனை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பிக்கிறாள் என்று வைத்து கொள்வோம். இப்போது இவள் திருமணம் செய்ய நினைக்கிறாள். இவள் திருமணம் செய்தால் தேவன் இவளை அங்கீகரிக்க மாட்டாரா? இவளையும் இவள் கணவனையும் பார்த்து "விபச்சாரகாரர்கள்" என்று சொல்வாரா??

#நீதிமொழிகள் 31:10-31# நல்ல உண்மையான வார்த்தைகள். ஆனால் இந்த விவாதம் எப்படிபட்ட பெண்ணாய் இருக்க வேண்டும்? எப்படி பெண் பார்க்க வேண்டும் என்று இல்லை.
இப்படித்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வேதத்தில் எதுவும் நடைமுறை இருக்கிறதா? என்பது பற்றித்தான்.
« Last Edit: October 29, 2018, 05:44:07 PM by Vickyalpha »