General Category > Tamil Bible

சேர்ந்து வாழ்தல் Living together

(1/6) > >>

udaya:
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் (Living together) சரியா ?

Big boss நிகழ்ச்சிகள் மூலம் இதை ஊக்குவிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

உங்களது கருத்து என்ன ?

Contract marriage அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்தல் .......குறித்தும் உங்கள் கருத்துக்கள் என்ன ?

Vickyalpha:
ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல், நண்பர்களாக மட்டும் சேர்ந்து வாழ்தல் தவறு இல்லை என்று கருதுகிறேன்.
ஆனால் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல், இல்லற வாழ்வு நடத்துவது தவறு.

Bigboss மட்டும் இல்லை: vijay tv, zee tamil channelகளில் வரும் எல்லா programகளும் என் பார்வையில் ஆபாசத்தை மட்டுமே மனதில் வைத்து நடத்துவதை போலவேதான் உள்ளது.

Contract marriage என்பதெல்லாம் marriage category யில் வராது என்று கருதுகிறேன் brother.

udaya:
எல்லா சேனல்களும் , நீங்கள் கருதுவதை போல் ஆபாசத்தை பரப்புகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இந்த BIGBOSS நிகழ்ச்சி living together concept ஐ நியாயப்படுத்துகிறது.
ஊக்குவிக்கிறது.
Promote செய்கிறது.
இது தவறில்லை என காட்ட முயற்சிக்கிறது.

கலாச்சார சீரழிவிற்கு வித்திடுகிறது.

இது ஆபத்தானது.

udaya:
Disclaimer :  என்னுடைய நிலைப்பாடு Living together க்கு ஆதரவானதல்ல.

வேதாகமத்தில் , ஏன் யாரும் திருமணம் செய்து கொண்டதாக நமக்கு காட்டப்படவில்லை ? அதாவது திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவியாக வாழ்ந்ததை வாசிக்கிறோம் .
புதிய ஏற்பாட்டின் காலத்திலேயேகூட , "கலியாணம் " என்ற ஒரு வழக்கம் ஏற்பட்ட பிறகும்கூட , யாரும் திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழந்ததாக நமக்கு காட்டப்படவில்லை . அந்த காலகட்டததில் வாழ்ந்த யோசேப்பு கூட மரியாளை " சேர்த்துக் கொண்டதாக " தானே கூறப்பட்டுள்ளது . திருமணம் செய்து கொண்டுதான் இல்லறத்தில் ஈடுபட வேண்டுமா ? Living together ஆக வாழ்ந்தால் பாவமா ? வேதத்தின் பார்வை என்ன ?

Vickyalpha:
கணவன் மனைவி என்ற பதமே திருமணமானவர்களை குறிப்பதற்காகதான் உபயோகப்படுத்தப்படுகிறது brother.
திருமணம் என்பது என்ன?
தாலி கட்டுவதா? மோதிரம் மாத்துவதா?
என் பார்வையில் திருமணம் என்பது நான்கு பெரிய மனிதர்கள் சாட்சியாக, அவர்களும் இல்லாத பட்சத்தில் தேவனை சாட்சியாக வைத்து ஒரு ஆணும் ,பெண்ணும் இனிமேல் நாம் ஒன்றாக சாகும்வரை ஒருவருக்கொருவர் உண்மையாக, அன்புடன், விட்டுக்கொடுத்து , உதவி செய்து, என்னுடையவைகளெல்லாம் உன்னுடையவை என்றும், உன்னுடையவைகள் எல்லாம் என்னுடையவை என்றும் ஒரு உறுதிமொழி எடுத்து இறுதி வரை இணைந்திருப்பதே திருமணம் brother. நீங்கள் எந்த விதத்தில் திருமணம் முடிக்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. திருமணத்திற்கு பிறகு உங்கள் இறப்புவரை எப்படி வாழ்கிறீர்கள் என்பதே முக்கியம்.

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version