Author Topic: இயேசு என்ற பெயர்  (Read 9133 times)

udaya

  • Guest
இயேசு என்ற பெயர்
« on: October 28, 2018, 12:04:25 AM »
இயேசு என்று குழந்தைகளுக்கு பெயர் வைக்கலாமா ?

Vickyalpha

  • Guest
Re: இயேசு என்ற பெயர்
« Reply #1 on: October 28, 2018, 05:13:25 AM »
வைக்கலாமே brother. எனக்கு தெரிந்து கூட "ஏசு ராஜன்" என்று ஒருவர் இருக்கிறார்

udaya

  • Guest
Re: இயேசு என்ற பெயர்
« Reply #2 on: October 28, 2018, 06:27:28 AM »
ஏசுதாஸ் , ஏசுபாலன் , ஏசுநேசன் என்ற பெயர்களில் , எனக்கு கூட உற்றார் உறவினர் இருக்கிறார்கள் . இம்மாதிரி கூட்டுப்பெயரை குறிப்பிடவில்லை brother . இயேசு என்ற தனிப்பெயரைத்தான் குறிப்பிடுகிறேன் .
கொள்கை அளவில் ,  இயேசு என்ற தனிப்பெயரை வைக்கலாமா என்று எனக்கு தெரியாது . ஆனால் நடைமுறையில் ஏற்படும் சங்கடங்களைப் பற்றி யோசிப்போமே .
பையன் வளர்ந்து பெரியவனாகும்பொழுது , பெற்றோர் பையனைத் திட்டும்பொழுது எப்படியிருக்கும் என்று யோசித்தால் .......அது அவ்வளவு நன்றாக இருக்குமா ?
அவ்வளவு ஏன்......" டேய் இயேசு இவ்வளவு நேரம் எங்கடா போயிருந்தே " .........என்று சாதாரணமாக  கேட்டாலே எப்படியிருக்கும்.........ஏற்புடையதா ?

வாய் நிறைய வாழ்நாளெல்லாம் கடவுளின் பெயரை உச்சரிக்க விரும்பும் அதே நேரத்தில் மேற்சொன்ன சூழ்நிலையும் ஏற்படுமே .

மற்ற மதத்தில் இந்த மாதிரி கடவுளின் பெயரை வைத்துவிட்டு கண்டபடி திட்டும் சூழலை நாம் பலரும் கண்டிருக்கிறோம் .

வைக்கக்கூடாது என்று கூறவில்லை............நிலைமைை சுட்டிக்காட்டுகிறேன் brother .

Vickyalpha

  • Guest
Re: இயேசு என்ற பெயர்
« Reply #3 on: October 28, 2018, 06:52:19 AM »
அப்படி திட்டும் போது கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கும்.
ஆனால் நாம் joshua என்கிற பெயரை பயன்படுத்துகிறோம்.
மொழி அறிஞர்கள் jeshua or yeshua என்றுதான் பெயர் இருந்ததென்றும் , பின்னாட்களில் வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காக மக்கள் பழைய ஏற்பாட்டு பெயர்களை joshua என்றும் , இயேசு கிறிஸ்துவின் பெயரை jesus என்றும் மாற்றி உபயோகப்படுத்தி இருக்கலாம் என்றும் சொல்லுகிறார்கள். அப்படி பார்த்தால் நாம் joshua என்ற பெயர் வைத்து சாதாரணமாக உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோமே brother.!!

udaya

  • Guest
Re: இயேசு என்ற பெயர்
« Reply #4 on: October 28, 2018, 07:27:35 AM »
ஜோஸ்வா என்பவர் மோசேக்கு பிறகு இஸ்ரவேலரை கானான் தேசத்திற்குள் அழைத்துச்சென்ற மாவீரனை குறிப்பதாக எண்ணுகிறேன் . ஜோஸ்வா என்று அழைத்தால் அது இயேசுவை குறிப்பதாக யாரும் எண்ணுவார்களா என்பது சந்தேகமே.

Vickyalpha

  • Guest
Re: இயேசு என்ற பெயர்
« Reply #5 on: October 28, 2018, 07:29:47 AM »
இப்போது யாரும் நினைக்கமாட்டார்கள் brother. ஆனால் joshua என்பதும் jesus என்பதும் ஒரே பெயர்தான் என்று சொல்கிறார்கள் brother.

udaya

  • Guest
Re: இயேசு என்ற பெயர்
« Reply #6 on: October 28, 2018, 08:17:56 AM »
இயேசு ,யோசுவா, என்ற இரு தனித்தனி நபர்கள் இருந்தார்கள் என்பது நமக்குத் தெரியும்.

எனவே யோசுவா என்றதும் பழைய ஏற்பாட்டில் உள்ள அந்த நபரையும் இயேசு என்றால் இயேசுகிறிஸ்துவையும் நமக்கு நினைவூட்டுகிறது.

ஒருவேளை யோசுவா என்ற நபர் இருந்திருக்காவிட்டால் இந்த சந்தேகம் எழாது.

உதாரணமாக இம்மானுவேல் .

இதுவும் இயேசுவைக் குறிப்பதாகத்தான் கூறப்படுகிறது .

ஆனால் இம்மானுவேல் என்ற ஒரு நபர் இருந்திருக்கவில்லை.

இயேசு , யோசுவா என்ற இரு தனித்தனி நபர்களை வேதம் குறிப்பிடுவதால், யோசுவா என்பதும் இயேசு என்பதும் ஒரு நபரைத்தான் குறிக்கிறது என்று ஏற்றுக் கொள்வது சற்று கடினமாக உள்ளது

Chandruparkulan

  • Guest
Re: இயேசு என்ற பெயர்
« Reply #7 on: October 28, 2018, 08:13:51 PM »
குமாரனுக்கு யெசூவா /யோஸூவா என்று மூலப்பிரதியில் (எபிரெய பாஷையில் ) இருக்கிறதாம். தமிழில் இயேசு என்று பதம் பயன்படுத்தப்படுகிறது.

udaya

  • Guest
Re: இயேசு என்ற பெயர்
« Reply #8 on: October 29, 2018, 01:39:51 AM »
@:குமாரனுக்கு யெசூவா /யோஸூவா என்று மூலப்பிரதியில் (எபிரெய பாஷையில் ) இருக்கிறதாம்.

இருந்தால் என்ன?

ஒரு பெயர் வைக்கும் பொழுது தமக்குத் தெரியாத, புரியாத வேறொரு மொழியில் அதற்கு என்ன உச்சரிப்பு, அர்த்தம் என்று யாரும் பார்ப்பதில்லை.

ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் ஒருவர் அதற்கு சீன மொழியில் என்ன உச்சரிப்பு என்று ஏன் பார்க்க வேண்டும்?

குழந்தைக்கு இயேசு என்று பெயர் வைத்துவிட்டு, பெயரென்ன என்று கேட்டால், யெஷுவா என்று சொல்ல முடியாது .
ஜீசஸ் என்றுகூட சொல்ல முடியாது . இரண்டும் ஒன்றுதான் என்று கூறினால்
ஆதார் கார்டு கிடைக்காது.
பேங்க்ல அக்கவுண்ட் ஓபன் பண்ண முடியாது .
ரேஷன் கார்டு வாங்க முடியாது .
ஸ்கூல் அட்மிஷன் கிடைக்காது.
பாஸ்போர்ட் கிடைக்காது.

ஒரு கேள்விதான்.

யோசுவா , இயேசு என்ற இரு பெயர்களை வேதம் சொல்லுகிறதா இல்லையா.

இயேசுவா கானானியர் களை கொன்று குவித்தார்?
யோசுவாவா சிலுவையில் மரித்தார்?

இயேசுவின் அடிமை என்று பெயர் மாற்றம் செய்து கொண்ட ஏவிஎம் ராஜன் அவர்கள் இயேசு கிறிஸ்துவை மனதில் நினைத்து அந்தப் பெயர் மாற்றம் செய்து இருப்பாரா இல்லை , எபிரேய மொழியை refer பண்ணி இருப்பாரா ?

விஷயம் நேரடியானது.
இயேசு என்று பெயர் வைக்க விரும்புபவர் இயேசு கிறிஸ்துவை தான் தன் மனதில் இருத்தி பெயர் வைப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

எபிரேய மொழி யூதர்களுக்கானது.

எபிரேய மொழியின்படி இம்மானுவேல் ஒரு இளம்பெண்ணின் மைந்தன்.
கன்னிகையின் மைந்தன் அல்ல .
இதை ஏற்றுக் கொள்கிறீர்களா ?
அழிந்துபோன ஒரு மொழியை ஏன் refer செய்கிறீர்கள்?

தமிழுக்கு வாங்க சகோ .





Chandruparkulan

  • Guest
Re: இயேசு என்ற பெயர்
« Reply #9 on: October 29, 2018, 02:01:28 AM »
நசரேயனாகிய இயேசு, கலிலேயனாகிய இயேசு ,இம்மானுவேல், ரபீ, என்றெல்லாம் இயேசு கிறிஸ்து வை கூப்பிட்டார்களே. அது போல இயேசு என்கிற பெயருக்கு பதில் யெஸூவா என்று கூப்பிட்டால் தவறொன்றும் இல்லை என்று கூறினேன். வேறு எந்த நோக்கமும் கிடையாது சகோ. வேத்தில் எங்கும் என் நாமத்தை யாருக்கும் இடக்கூடாது என்று தேவன் சொன்னதாக நான் வாசிக்க இல்லை.என்  மகிமையை யாருக்கும் கொடேன் என்று கூறி இருக்கிறார்.

udaya

  • Guest
Re: இயேசு என்ற பெயர்
« Reply #10 on: October 29, 2018, 08:11:43 AM »
இந்தப் போஸ்டில் நீங்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் சகோ.