General Category > Tamil Bible

இயேசு என்ற பெயர்

(1/3) > >>

udaya:
இயேசு என்று குழந்தைகளுக்கு பெயர் வைக்கலாமா ?

Vickyalpha:
வைக்கலாமே brother. எனக்கு தெரிந்து கூட "ஏசு ராஜன்" என்று ஒருவர் இருக்கிறார்

udaya:
ஏசுதாஸ் , ஏசுபாலன் , ஏசுநேசன் என்ற பெயர்களில் , எனக்கு கூட உற்றார் உறவினர் இருக்கிறார்கள் . இம்மாதிரி கூட்டுப்பெயரை குறிப்பிடவில்லை brother . இயேசு என்ற தனிப்பெயரைத்தான் குறிப்பிடுகிறேன் .
கொள்கை அளவில் ,  இயேசு என்ற தனிப்பெயரை வைக்கலாமா என்று எனக்கு தெரியாது . ஆனால் நடைமுறையில் ஏற்படும் சங்கடங்களைப் பற்றி யோசிப்போமே .
பையன் வளர்ந்து பெரியவனாகும்பொழுது , பெற்றோர் பையனைத் திட்டும்பொழுது எப்படியிருக்கும் என்று யோசித்தால் .......அது அவ்வளவு நன்றாக இருக்குமா ?
அவ்வளவு ஏன்......" டேய் இயேசு இவ்வளவு நேரம் எங்கடா போயிருந்தே " .........என்று சாதாரணமாக  கேட்டாலே எப்படியிருக்கும்.........ஏற்புடையதா ?

வாய் நிறைய வாழ்நாளெல்லாம் கடவுளின் பெயரை உச்சரிக்க விரும்பும் அதே நேரத்தில் மேற்சொன்ன சூழ்நிலையும் ஏற்படுமே .

மற்ற மதத்தில் இந்த மாதிரி கடவுளின் பெயரை வைத்துவிட்டு கண்டபடி திட்டும் சூழலை நாம் பலரும் கண்டிருக்கிறோம் .

வைக்கக்கூடாது என்று கூறவில்லை............நிலைமைை சுட்டிக்காட்டுகிறேன் brother .

Vickyalpha:
அப்படி திட்டும் போது கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கும்.
ஆனால் நாம் joshua என்கிற பெயரை பயன்படுத்துகிறோம்.
மொழி அறிஞர்கள் jeshua or yeshua என்றுதான் பெயர் இருந்ததென்றும் , பின்னாட்களில் வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காக மக்கள் பழைய ஏற்பாட்டு பெயர்களை joshua என்றும் , இயேசு கிறிஸ்துவின் பெயரை jesus என்றும் மாற்றி உபயோகப்படுத்தி இருக்கலாம் என்றும் சொல்லுகிறார்கள். அப்படி பார்த்தால் நாம் joshua என்ற பெயர் வைத்து சாதாரணமாக உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோமே brother.!!

udaya:
ஜோஸ்வா என்பவர் மோசேக்கு பிறகு இஸ்ரவேலரை கானான் தேசத்திற்குள் அழைத்துச்சென்ற மாவீரனை குறிப்பதாக எண்ணுகிறேன் . ஜோஸ்வா என்று அழைத்தால் அது இயேசுவை குறிப்பதாக யாரும் எண்ணுவார்களா என்பது சந்தேகமே.

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version