General Category > Tamil Bible

ஆதாம் என்னவாக ஆனார் ?

(1/2) > >>

udaya:
ஏதேன் , ஞானப்பழம் , கீழ்ப்படியாமை , பாவம் , சாபம் என்று எல்லாவற்றையும் தாண்டி ,

சரீர மரணம் ஆத்தும மரணம் , திரித்துவம் என்பதையும் தாண்டி ,

தேவனாகிய கர்த்தர் சொன்னது நடந்ததா , சர்ப்பம் சொன்னது நடந்ததா என்பதையும் கூட தாண்டி ,

ஆவலை எழுப்பும் ஒரு வினா எதுவென்றால் " ஆதாம் என்னவாக ஆனார் ?"

முதலில் வசனம்....

பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான். இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றென்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,
ஆதியாகமம் 3:22

மேற்கண்ட வசனத்தில் உள்ள " நம்மில் ஒருவரை போல் ஆனான் " என்பதின் அர்த்தம் என்ன ?
அவர் என்னவாக ஆனார் ?
பரலோக வாசிகளில் ஒருவரைப் போல் ஆனான் என்று எடுத்துக் கொள்வதா ?

முடியுமானால் வேதாகமத்தின் அடிப்படையில் பதில் கூற முயற்சிக்கலாம் .
இல்லாவிட்டாலும் பரவாயில்லை , கற்பனை ஊகங்களின் அடிப்படையில் பதிலளிக்கலாம். நன்றி.

( இதெல்லாம் ஒரு கேள்வியா ......என்று தயவுசெய்து கேட்க வேண்டாம் .
ஏனென்றால் , மனிதன் தேவனாகிய கர்த்தரின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் அவருடைய வார்த்தையை மீறியதால்  " தேவர்களில் ஒருவர் ஆனான் " என்ற ஒரு தர்மசங்கடமான செய்தி இதில் இருப்பதாக கருதுகிறேன் .)

Chandruparkulan:
அதற்கு முன் அவர்களுக்கு நன்மை எது தீமை எது என தெரியாது என்றும் நன்மை தீமை அரியதக்க விருட்சத்தின் கனியை உண்டதால் அவர்களுக்கு அது தெரிந்தது என்றும் வேதத்தை படிக்கு போதே  புரியும் brother.

Arasi Aruldas:
Migavum adhigamana power.

Vickyalpha:
பூமியில் உள்ள எந்த ஒரு உயிரினத்ததை விடவும் மனிதன் மிகவும் அதிக புத்திசாலித்தனம் கொண்டவன். மனிதன் மட்டுமே பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்திலும் உயர்ந்த நிலையில் உள்ளான்.
இந்த அறிவு அந்த கனியை சாப்பிட்டதினால் வந்தது.

"நம்மைப்போல் ஆனான்" என்பது, மனிதன் தற்போது சிந்திப்பதிலும், முடிவெடுப்பதிலும் கடவுள் மற்றும் angelகளை போல் ஆனான் என்று வைத்துக்கொள்ளலாம். நம்மால் எந்த முடிவையும் சுயமாக எடுக்க முடியும். கடவுளுக்கு ஆதரவாகவும் or கடவுளுக்கு எதிராகவும்.

udaya:
@Bro.Chandruparkulan

உண்மைதான் சகோ . ஆனால் அதையும் கடந்து வேறு ஏதாவது குணாதிசயம் அவருக்கு கிடைத்ததா என்பதுதான் கேள்வி .

//இதோ, மனுஷன் நம்மில் ஒருவரைப்போல் , நன்மை தீமை அறியத்தக்கவனாய்  ஆனான். //
என்று வசனம் இருந்திருந்தால் , நன்மை தீமை அறிவு பெற்றதோடு முடிந்திருக்கும் .
ஆனால் வசனம் கீழுள்ளவாறு உள்ளது.

//இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான். //

"எனவே நம்மில் ஒருவரைப் போல் " என்பது கூடுதலான குணாதிசயம் ஆதாமுக்கு கிடைத்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.


@:Sis.Arasi Aruldas ( I assume your are a female )

நீங்கள் கூறுவது போல் மிகவும் அதிக power கிடைத்திருக்கும் என்று  எண்ணுவதற்கு நிறையவே இடமிருக்கிறது . ஏற்கனவே ஆதாமுக்கு ஞாபக சக்தி மிக மிக அதிகம் என்ற என் யூகத்தை இந்தக் கருத்துக் களத்தில் "ஆதாமின் தாலந்து "என்ற தலைப்பிட்ட ஒரு விவாதத்தில்  கூறியிருக்கின்றேன். நேரம் கிடைத்தால் படித்துப் பார்க்கவும்.

@Bro.Vickyalpha

உங்களுடைய கருத்தும் ஏற்கத் தகுந்ததுதான். ஆனால்......

கடவுளுக்கு எதிராக முடிவெடுக்கும் தன்மையை மனிதன் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டானா ?

அதாவது கடவுள் , தனக்கு தானே எதிராக முடிவெடுக்கும் தன்மை பெற்று இருக்கிறாரா ?

(லூசிபர் பெயர் ஞாபகத்திற்கு வருகிறது)

எனக்கு புரிந்தவரை மனிதன்......

1. மகிழ்ச்சி , வருத்தம் , கோபம் , அன்பு , பொறுமை,  பொறாமை போன்ற உணர்வுகளில் கடவுளைப் போல் ஆனான் .
2. Knowledge , wisdom , vision , attitude , போன்ற அறிவுடைமை களில் கடவுளைப் போல் ஆனான்.
3.Creativity , imagination , execution , ruling , warring போன்ற ஆளுமைகளில் கடவுளைப் போல் ஆனான்.
4. ...........
(இந்தப் பட்டியலை நீட்டிக்க விரும்பினால் நீட்டிக்கலாம்)

மொத்தத்தில் தன்னுடைய சாயலைப் போன்றே மனிதனை படைத்துவிட்டு , தன்னுடைய குணாதிசயங்களையும் ( ஒரு குறிப்பிட்ட percentage ஐ ) மனிதனுக்கு கொடுத்து அவனை முழுமையாக ஆக்கினார் என்றால் மிகையாகாது.

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version