Author Topic: Doubt  (Read 2788 times)

Rubavathi

  • Guest
Doubt
« on: November 24, 2018, 10:12:20 AM »
Share market la inverse pannalama?share market m vattiku veduradhum onnena? So adhu thappa?

Vickyalpha

  • Guest
Re: Doubt
« Reply #1 on: November 24, 2018, 10:34:35 AM »
Share market investment ம் வட்டிக்கு விடுவதும் ஒன்று ஆகாது. Sharemarket ல் நீங்கள் செய்வது தொழில் முதலீடு. அதாவது யாரோ ஒருவரின் தொழிலில் நீங்கள் சிறிய முதலீட்டாளராக ஆகிறீர்கள். ஒரு partner ஆகிறீர்கள். தொழில் லாபடைந்தால் உங்களுக்கும் லாபம் வரும். தொழில் நஷ்டமானால் உங்களுக்கும் நஷ்டம் வரும். அவ்வளவுதான்.
வட்டிக்கு விடுவது பணத்தை பணமாக மாற்றும் விஷயம். அதற்கும் தொழில் முதலீட்டிற்கும் சம்பந்தம் இல்லை.

udaya

  • Guest
Re: Doubt
« Reply #2 on: November 25, 2018, 05:32:55 AM »
@Opening post

ஷேர் மார்க்கெட்க்கும் , குதிரை பந்தயத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை. அங்கே ஓடும் குதிரையின் மேல் பணத்தை கட்டுகிறோம் , அல்லது இன்வெஸ்ட்மென்ட் பண்ணுகிறோம் .இங்கே ஓடும் கம்பெனியின் மேல் பணத்தை investment பண்ணுகிறோம்.

பொதுவான அம்சம் என்னவென்றால் , உழைக்காமல் பணத்தை சம்பாதிக்கிறோம் , அதாவது நமது பணம் மேலும் பணத்தை சம்பாதிக்கிறது.
வட்டிக்கு விடும் தொழிலும் ஏறக்குறைய இதைப் போன்றுதான் இருக்கிறது.
எனவேதான் இந்த கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

"வேலைக்காரன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்" என்பது உழைப்பிற்கும் உழைப்பினால் கிடைக்கும் பணத்திற்கும் உள்ள தொடர்பை கூறுவது உண்மைதான்.
தாலந்து உவமை கூட  உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது என்பதும் உண்மைதான்.

ஆனால் மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் ஷேர் மார்க்கெட் என்பது வாழ்க்கையின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது . அதில் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணுவது தவறில்லை என்பது என்னுடைய சொந்தக் கருத்து.


Vickyalpha

  • Guest
Re: Doubt
« Reply #3 on: November 25, 2018, 07:12:45 AM »
@ udaya brother

உழைப்பு என்பது இருவகைப்படும். ஒன்று உடல் உழைப்பு, இன்னொன்று மூளை உழைப்பு. இரண்டுமே உழைப்புதான்.
ஆனால் நாம் பொதுவாக உடல் உழைப்பை மட்டுமே 'உழைப்பு' என்று எடுத்துக்கொள்கிறோம். இதன் வெளிப்பாடுதான் சமீப காலமாக தமிழ்நாட்டில்
"விவசாயி வெயில்லையும் , மழைலயும் கஷ்டப்படுறான். கம்பெனிக்காரன்/பெருமுதலாளி ac ரூம்ல உக்கார்ந்துகிட்டு சம்பாரிக்கறான்" னு பேசிகிட்டு இருக்காராங்க. ஆனால் ac ரூம்ல உக்கார்ந்துருக்கவனும் மூளையை கசக்கி, தூக்கம் கெட்டு, கஷ்டப்பட்டு, பிளான் பண்ணி ரிஸ்க் எடுத்துதான் ஒரு வேலையை நடத்துறான்.

உதாரணத்துக்கு
உங்கள் நண்பர் ஒருவர் ஒரு சிறிய ஹோட்டல் ஒன்று வைத்து நல்ல லாபகரமான முறையில் நடத்திவருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நகரின் இன்னொரு பகுதியில் புதிதாக இன்னொரு கடை திறக்க நினைக்கிறார்.
எனவே அவர் உங்களிடம் வந்து, தன் கடையின் ஆண்டு அறிக்கை, லாபம் வரும் விதம், இன்னொரு கடையில் கிடைக்க போகும் வருமானம், அது செயல்பட போகும் விதம், எல்லாவற்றையும் விளக்குகிறார்.
தன் கடை தொடங்க 6 லட்சம் ரூபாய் தேவை படுவதாகவும், அதில் நம் இருவரும் ஆளுக்கு பாதி பாதியாக பகிர்ந்து கொள்ளலாம் என்று கேட்கிறார். அவர் working partner ஆகவும், நீங்கள் பணம் மட்டுமே கொடுக்கும் invester ஆக இருப்பதால் silent partner ஆகவும் இருந்துகொண்டு வரும் லாபத்தில் 60%-40% எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லுகிறார். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அவரின் ஆண்டு அறிக்கை, அவரின் லாப கணக்கு, கடை அமையபோகும் இடம், அந்த இடத்தின் சூழல் , அதன் எதிர்காலம் எல்லாவற்றையும் பார்த்து, யோசித்து, சரியென்று பட்டால் உங்கள் சேமிப்பை அதில் முதலீடு செய்து, முறைப்படி பதிவு செய்து, எழுதி வாங்கிக்கொள்வீர்கள்.
இதேதான் sharemarketலும் நடக்கிறது. ஒவ்வொரு கம்பெனியும் வெளியிடும் ஆண்டு அறிக்கை, அரசியல் சூழ்நிலை , எதிர்கால ப்ரொஜெக்ட்கள், பண மதிப்பு எல்லாவற்றையும் யோசித்து, கணக்கிட்டுத்தான் ஒரு முதலீடு செய்கிறோம். எனவே இதில் உழைப்பு இல்லையென்றோ, குதிரைப்பந்தயம் போல் 70% அதிர்ஷ்டத்தை நம்பி செய்வதென்றோ சொல்ல இயலாது brother.
Inverstmentல் longterm investment, short term investment என்று இரண்டு வகை உண்டு. இதில் இரண்டாவது வகையை வேண்டுமானால் குதிரைப்பந்தயம் என்று சொல்லலாம். ஏனெனில் இது குறுகிய கால லாப நோக்கத்துடன் செய்யப்படும் ஒரு ஆபத்தான இன்வெஸ்ட்மெண்ட். நிறைய பேர் இதில்தான் பணத்தை இழக்கிறார்கள்.

Vickyalpha

  • Guest
Re: Doubt
« Reply #4 on: November 25, 2018, 07:19:02 AM »
கொசுறுத்தகவல் :

அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது, அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,
மத்தேயு 25:27

தாலந்து உவமையில் வரும் இந்த வசனத்தின்படி பார்த்தால், வட்டிக்கு கொடுப்பதே சரியானது என்றுதான் சொல்லவருவதாக தோன்றுகிறது.

James Ruban

  • Guest
Re: Doubt
« Reply #5 on: November 25, 2018, 08:43:05 AM »
7 ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்: கடன்வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.

நீதிமொழிகள் 22

அப்படி என்றால் இந்த வசனம் ஏன் சொல்லப்படாடிருக்கிறது