Author Topic: Question about Mathew 27: 52 and 53  (Read 3195 times)

James Ruban

  • Guest
Question about Mathew 27: 52 and 53
« on: November 25, 2018, 01:36:41 AM »
52 கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
மத்தேயு 27:52

53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
மத்தேயு 27:53

உயிர்த்தெழுந்த இந்த பரிசுத்த்வான்கள் யார்?
இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்

இரண்டாம் வருகையில் தானே உயிர்த்தெழுதல் நடக்கும் என்று தெசலோனிக்கேயரில் எழுதி இருக்கிறது அப்படி என்றால் இது நடக்க காரணம் ? ( 1 தெசலோனிக்கேயர் 4 : 16-17)

இவர்கள் மட்டும் விஷேசித்தவர்களா ஏனென்றால் வருகைக்கு முன் உயிர்த்தெழுந்து விட்டார்கள்.

இதை குறித்து வசன ஆதாரத்துடன் விளக்கம் தேவை.



Chandruparkulan

  • Guest
Re: Question about Mathew 27: 52 and 53
« Reply #1 on: November 25, 2018, 03:56:36 AM »
அவர்கள் ஒருவேளை பரதீசிற்கு  போயிருக்கலாம்.

James Ruban

  • Guest
Re: Question about Mathew 27: 52 and 53
« Reply #2 on: November 25, 2018, 05:03:46 AM »
Can you give the Bible Reference

udaya

  • Guest
Re: Question about Mathew 27: 52 and 53
« Reply #3 on: November 25, 2018, 05:05:26 AM »
// உயிர்த்தெழுந்த இந்த பரிசுத்தவான்கள் யார்? //

நியாயமான கேள்விதான்...

இயேசு கிறிஸ்து அனேகரை உயிரோடு எழுப்பினார்.
இதையும் சொன்னார்.....

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
யோவான் 14:12

மேற்கண்ட வசனத்திற்கு ஏற்ப பேதுருவும் தபீத்தாளை உயிரோடு எழுப்பினார்
அப்போஸ்தலர் 9 : 36 - 41

எனவே உயிரோடு எழும்புவது , உயிரோடு எழுப்புவது  போன்ற அதிசயங்களை நிகழ்த்துவது , மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக தான்.

அதனாலேயே இயேசுகிறிஸ்து கீழ்க்கண்டவாறு கூறினார்

நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
யோவான் 14:11

மக்களை நம்ப வைக்க கிரியைகள் தேவைப்பட்டன.

// இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் ? //

உயிரோடு எழுந்தவர்களுக்கு இரண்டாம் மரணம் இல்லை என்பதால் , அவர்கள் பூமியில் எங்கோ ஒரு இடத்தில் இருக்க வேண்டும். (மரித்தால் தான் பரதீசுக்கு செல்லமுடியும்)
அல்லது மறுரூபமாக்கப்பட்டு வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும்.

அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.
பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
யோவான் 3:13

...... என்று வசனம் இருப்பதால் பூமியிலேயே தேடி பார்க்க வேண்டியதுதான்.

// இரண்டாம் வருகையில் தானே உயிர்த்தெழுதல் நடக்கும் என்று தெசலோனிக்கேயரில் எழுதி இருக்கிறது அப்படி என்றால் இது நடக்க காரணம் ? ( 1 தெசலோனிக்கேயர் 4 : 16-17) //

அது அப்போஸ்தலனாகிய பவுலின் பார்வை...
இரண்டாம் வருகையிலும் உயிர்த்தெழுதல் நடக்கும்....

// இவர்கள் மட்டும் விஷேசித்தவர்களா ஏனென்றால் வருகைக்கு முன் உயிர்த்தெழுந்து விட்டார்கள். //

விசேஷித்தவர்கள் என்றெல்லாம் இல்லை உயிர்த்தெழுந்த கணக்கு இவர்களிடம் இருந்து துவங்குகிறது என்று வைத்துக்கொள்ளலாம்.

Justin Issac

  • Guest
Re: Question about Mathew 27: 52 and 53
« Reply #4 on: November 27, 2018, 01:09:19 PM »
This was an amazing event that only Matthew recorded. If these people were not actually resurrected until after Jesus’ resurrection when Matthew stated they came out of the graves, then they could have been resurrected with their glorified bodies never to die again.
At any rate, these saints went into Jerusalem after Jesus had been resurrected and appeared to many people. We can only guess at the effect this must have had.

Nalini Ruth deva sudamani

  • Guest
Re: Question about Mathew 27: 52 and 53
« Reply #5 on: November 27, 2018, 11:08:30 PM »
1corin15:23
அவனவன் தன்தன் வரீசையீலே உயிர்ப்பிக்கப்படுவான்
இயேசு உயிர்த்தெழுந்தபின்பு இவர்கள் தன் வரிசையில் உயிர்த்தெழுந்தரர்கள்

Davidj

  • Guest
Re: Question about Mathew 27: 52 and 53
« Reply #6 on: November 28, 2018, 01:50:59 AM »
I request everyone to read about
STRING THEORY

To understand existence of worlds in multiple dimensions