General Category > Tamil Bible

பினேகாஸின் வயது என்ன?

(1/1)

Vickyalpha:
பினேகாசின் வயது என்ன?

ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான். அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள். அவரவர் வம்சங்களின்படி லேவியருடைய பிதாக்களாகிய தலைவர் இவர்களே.
யாத்திராகமம் 6:25
இது மோசேயின் நாட்களில் நடந்தது.

ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்நாட்களில் அவருடைய சந்நிதியில் நின்றான். எங்கள் சகோதரராகிய பென்ஜமீன் புத்திரரோடே பின்னும் யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதா என்று அவர்கள் விசாரித்தார்கள். அப்பொழுது கர்த்தர்: போங்கள், நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
நியாயாதிபதிகள் 20:28

இது நியாயிதிபதிகளின் காலத்தில் நடந்தது. கிட்டத்தட்ட 500-600 வருட காலத்திற்கு பிறகு.
அப்படியானால் பினெகாஸ் அவ்வளவு வயதானவரா??
யோசுவாவும் காலெப்பும் தவிர மற்ற பழைய சந்ததியினர் யாரும், கானான் தேசத்திற்குள் பிரவேசிக்கவில்லை என்று எழுதியிருக்கிறதே!! ஆனால் பினேகாஸ் 600 வருடங்களுக்கு பிறகும் ஆசாரியனாக கானானுக்குள் உயிரோடு இருக்கிறாரே??
ஒருவேளை நியாயிதிபதிகளின் புத்தக அதிகாரங்கள் சரியான கால அளவுகளின் படி(time period) வரிசைப்படுத்தப்படவில்லையா? 
தெரிந்தவர்கள் தயவுசெய்து விளக்கவும்.

Navigation

[0] Message Index

Reply

Go to full version