Author Topic: Ash Wednesday  (Read 2095 times)

joice

  • Guest
Ash Wednesday
« on: February 23, 2014, 02:07:14 PM »
Hi All.. with god grace. Good day to everyone. in bible ash Wednesday is defined in anywhere or how we are starting the lent with ash Wednesday. Share ur thoughts. Thanks to god.

felixraj2006@gmail.com

  • Guest
Re: Ash Wednesday
« Reply #1 on: February 25, 2014, 01:22:07 AM »
In this holy day every one start to fasting and want to leave their own bad habit for till Easter.
But my opinion is in the Holy bible we can see about Fasting is helping to others...
So Love everyone and Help Others...
From:
Felixraj

Antony devaraj

  • Guest
Re: Ash Wednesday
« Reply #2 on: February 26, 2014, 11:30:51 PM »
இந்த சாம்பல் புதன் என்றால் என்ன ?
உயிர்ப்பு தினத்திற்கு முந்தைய (ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த) நாற்பது நாட்கள் பல கிறிஸ்தவர்கள் தவக் காலமாக அனுசரிக்கின்றனர்.
தவக்காலம் என்பது நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து நம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம்.
பழைய ஏற்பாடுகளில் எஸ்தர், தானியேல், யோபு ஆகிய நூல்களில் இத்தகைய நாற்பது நாள் தவத்தைக் குறித்த செய்திகள் காணக் கிடைக்கின்றன. எனவே இது கிறிஸ்துவின் மறைவிற்குப் பின் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது இல்லை என்பதும், பழைய வழக்கத்திலிருந்து பெறப்பட்டதே என்பதும் உறுதியாகிறது.
கி.பி 900 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், முதலில் சாம்பல் தினம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கத்தோலிக்கத் திருச்சபையில் அன்றைய தினத்தில் பாதிரியார் மக்களுடைய நெற்றியில் “மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே” என்று கூறி சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைகிறார்.
இயேசு சிலுவை மரணத்தை சந்திக்கும் முன் எருசலேமிற்குள் நுழைந்த தினத்தில் மக்கள் ஒலிவ மரக் கிளைகளை அசைத்து அவரை வரவேற்றார்கள். அந்த நாளே இன்றைய திருச்சபையில் “குருத்தோலை தினம்” என கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் குருத்தோலைகளைப் பிடித்து பவனிகள், கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அன்றைய தினத்தில் ஆலய கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் ஓலையே அடுத்த ஆண்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு, “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் பூசப் பயன்படுகிறது.
பழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பாவங்களை நினைத்து மனம் கசிந்து சாம்பலை உடலெங்கும் பூசி மேனி அழகைக் குறைத்துக் கொண்டும், கோணியை ஆடையாய் உடுத்தி ஏழ்மைக் கோலம் பூண்டும், தலைக்கு எண்ணை கூட தேய்க்காமல் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். அதன் நீட்சியாகவே “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளம் வரையப்படுகிறது.
நெற்றி என்பது மனிதனுடைய முழுமையைக் குறிப்பதாக விவிலியம் கோடிட்டுக் காட்டுகிறது. நெற்றியில் பூசப்படும் சாம்பல் மனிதனை முழுமையாக இறையில் சரணடைய வைக்கிறது.
நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது எனும் திருவெளிப்பாடு வசனம் நெற்றி குறித்த விவிலியப் பார்வையை விளக்குகிறது.
இயேசு நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் நோன்பு இருந்த நிகழ்ச்சி விவிலியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் அந்த அனுபவத்தில் இணைகின்றனர்.
தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம்.
இந்த காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதை பலரும் கடைபிடிக்கின்றனர்.
சிலர் வெள்ளிக்கிழமை தோறும் அன்னதானம் இடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.
நோன்பு இருப்பது பிறருக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்கிறார் இயேசு. நோன்பு இருப்பதை பெருமைக்காகவும், புகழுக்காகவும், சடங்கிற்காகவும் செய்யாமல் சுய விருப்பத்தோடும் இறைவனில் சரணாகதி அடையும் மனநிலையுடனும் செய்ய வெண்டுமென்பதே இறைவனின் விருப்பமும் போதனையும்.
இறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்தல் அவசியம். அதையே சாம்பல் புதன் நினைவூட்டுகிறது.

Antony devaraj

  • Guest
Re: Ash Wednesday
« Reply #3 on: February 26, 2014, 11:46:43 PM »
இயேசுவின் நாமத்தினால் உங்கள்க்கு என்னுடைய அன்பான வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

தவக்காலம் ஒரு புனிதமான காலம். மனிதன் இறைவனை அதிகம் தேடுகின்ற காலம். இக்காலத்திலே நாம் ஒறுத்தல் முயற்சிகளும் தவமுயற்சிகளும் செய்ய வெண்டுமென்று  கத்தோலிக்க திருச்சபை அழைக்கின்றது. நான் இங்கு ஒருசில ஒருத்தல் முயற்சிகளையும் தவ முயற்சிகளையும் உங்கள் முன் வைக்கிறேன். இவையெல்லாம் இத் தவக்காலத்திலே உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தும் உங்கள் வாழ்வானது இறைவனோடு ஒன்றாக இணைவதற்கு இது உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

1. தவறாமல் இக்காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் திருப்பலியில் பங்கேற்று நற்கருணை உட்கொள்ளல். அடிக்கடி திருப்பலியில் பங்கெடுத்தல்.

2. வேதாகமத்தை இக்காலத்தில் ஒவ்வொரு நாளும் வாசிக்கப் பழகுவது.

3. வெள்ளிக்கிழமைகளில் இயேசுவின் பாடுகளை வேதாகமத்தில் வாசித்துத் தியானிக்கலாம்.

4. வெள்ளிக்கிழமைகளில் ஒருசந்தி - சுத்த போசனம் கடைப்பிடிக்க வேண்டும். முடிந்தால் இக்காலம் முழுவதும் சுத்த போசனம் கடைப்பிடிக்கலாம்.

5. வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதையை செபித்தல்... முடிந்தால் ஒவ்வொரு நாளும்.

6. ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லுதல்.

7. நேரம் கிடைக்கும் போது நற்கருணை ஆண்டவரை சந்தித்தல்.

8. குடும்ப இரவுச் செபம் சொல்ல ஆரம்பிக்காதவர்கள் இக்காலம் முழுவதும் சொல்ல முயற்சித்தல்.

9. மனவல்ய ஜெபத்தை அடிக்கடி சொல்லுதல். உதாரணமாக : இயேசுவே என் மேல் இரக்கமாயிரும். இயேசுவே நான் பாவி. இயேசுவே உம் இரத்தம் என்னை கழுவப்படும். உம் பாடுகள் என்னைத் தேற்றட்டும்.

10. துன்ப துயரத்தில் இருப்போர் இயேசுவின் பாடுகளை தியானித்து, ஆறுதலும் நம்பிக்கையும் அடைதல்.

11. பாவசங்கீர்த்தனத்தை அடிக்கடி பெற முயற்சித்தல்.

12. கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் ஆன்மீக வளர்ச்சிக்காக பயன்படுத்துதல்.

13. மது அருந்துதல், புகைப்பிடித்தல் இவற்றை தவிர்க்க முயற்சித்தல்.

14. தொலைக்காட்சி தேவையற்ற புத்தகங்கள் வாசித்தல், இவற்றில் கட்டுப்பாட்டை கொண்டுவர முயற்சித்தல்.

15. கிடைக்கும் அடிப்படைச் சம்பளத்தில் பத்தில் ஒரு பகுதியை இறைப்பணிக்கு செலவு செய்தல்.

16. காலை, மாலை, நண்பகல் உணவுகளுக்கிடையே பயன்படுத்தப் படும் குளிர்பானம், தேனீர், சிற்றுண்டி முதலியவற்றைத் தவிர்த்தல்.

17. நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் சொல்லுதல்.

18. சமாதான குறைவுடன் வாழும் குடும்பத்தில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்தல்.

19. அடிக்கடி செய்யும் பாவத்தை - தவறை விலக்குதல்.

20. விருப்பமான உணவை வகையில் கட்டுப்பாட்டைக் கொண்டு வருதல்.

21. ஒவ்வொரு நாளும் ஏதாவது சிறு உதவி செய்தல்.

22. எளிமையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆடம்பர நடை உடை நகை அழகு சாதனங்களை அகற்றுதல்.

23. மனத்தாங்கல் உள்ளோரை மன்னித்து அன்புடன் பழகுதல்.

24. அநியாய வட்டி வாங்காமல் பிறரைத் துன்பத்திற்கு உள்ளாக்காமல் இருப்பது.

25. ஒருசந்தி நாட்களில் ஏழைகளுக்கு உதவுதல்.

26. ஆணவத்தை அகற்றி தாழ்ச்சியோடு இருத்தல்.

27. கெட்ட சிந்தனையின்றி கெட்ட வார்த்தைகள் பேசாதிருத்தல்.

Sherly

  • Guest
Re: Ash Wednesday
« Reply #4 on: March 06, 2014, 04:43:19 AM »
pls tell me the bible reference keep fasting for..

threeangels

  • Guest
Re: Ash Wednesday
« Reply #5 on: April 19, 2014, 05:21:39 AM »
We need to write a new bible to have ash wensday in it. There is no ash wensday in the scripture. That is not a scriptural tradition to follow.

Immanual

  • Guest
Re: Ash Wednesday
« Reply #6 on: May 17, 2014, 02:46:22 PM »
I agree Bible don't have a references to it. 
But there was a Bible tradition (Jonah 3:7; Job 2: 8 ) of sitting on the ash heap as a sign of repentance and moaning, but they sat on the ash wearing sackcloth whole day long and fasted which in Bible times means no food and water. And it is not practiced on a particular day of the year, they just did it whenever they felt convicted of their sins.
As far as I know, ash wednesday is a pagan dogma that was mixed into the early Christian church during the 4th century. Moreover I don't agree to the unbiblical concept of "be ye holy for 40 days and be ye evil for rest of the 325 days plus one day in every 4 years"
Hope this helps
« Last Edit: May 17, 2014, 02:48:17 PM by Immanual »

Antony devaraj

  • Guest
Re: Ash Wednesday
« Reply #7 on: June 18, 2014, 04:36:41 PM »
/ there is no special day, all days are the Lords and should be holy./ ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு. கட்ட ஒரு காலம் உண்டு; இடிக்க ஒரு காலம் உண்டு.... சகோதரர்கள் தங்கள் வேதாகமத்தில் பார்த்திருக்க வேண்டுமே?

udaya

  • Guest
Re: Ash Wednesday
« Reply #8 on: February 14, 2016, 05:52:50 AM »
@ :Easter is not even a holy day..

Whether it's a Holy day or not, It is not harm to mark certain days to remember GOD.

@: But disgusting in the sight of Yahweh..

sight of Yahweh..? Please consider the following verse.

நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. ஏசாயா 43:11

According to this verse Jesus himself is not SAVIOR !!!

It is true that people no longer consider Yahweh's views.

rajamohan

  • Guest
Re: Ash Wednesday
« Reply #9 on: February 15, 2016, 09:54:18 PM »
Thanks Brothet