General Category > Tamil Bible

திருமணத்தை பற்றிய ஒரு சந்தேகம்

(1/2) > >>

Vickyalpha:
ஞானஸ்நானம் எடுக்காத ஒரு விசுவாசியை, ஞானஸ்நானம் எடுத்த ஒரு விசுவாசி திருமணம் செய்து கொள்ளலாமா? இதைப்பற்றி வேதவசனம் சொல்வது என்ன?
தெரிந்தவர்கள் தயவுசெய்து விளக்கவும்.

udaya:
ஞானஸ்நானம் ?.................... தண்ணீர் ஞானஸ்நானமா , ஆவியின் ஞானஸ்நானமா ?  (2 ஞானஸ்நானங்களைப்பற்றி வேதாகமம் கூறுகிறது )

ஞானஸ்நானம் எடுக்காத விசுவாசி ?!?!..........

ஞானஸ்நானம் எடுக்கவில்லையென்றால் "நம்மை" அவிசுவாசிகள் பட்டியலில் சேர்த்து விடுகிறார்கள் !!!!
ஆனால் , யோசேப்பு , மரியாள்கள் , எலிசபெத் , யோவாள் ஸ்நானகன் . 12 சீடர்கள் மற்றும் பலர்......நீங்கள் குறிப்பிடுகின்ற " ஞானஸ்நானம் எடுக்காத  விசுவாசிகள் " பட்டியலில் இருக்கின்றார்கள் என எண்ணுகிறேன்.....

அது இருக்கட்டும்......

ஞானஸ்நானத்திற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறதென்று தெரியவில்லை...
ஞானஸ்நானத்திற்கும் தேவனுடைய ராஜ்யத்திற்கும்தான் தொடர்பு இருப்பதாக படித்திருக்கிறேன்....

இனிய இல்லற வாழ்க்கையை வாழ விரும்புவோர்க்கு ,ஞானஸ்நானமோ ,ஞானஸ்நானமின்மையோ ஒரு பொருட்டே அல்ல .
ஒருவருக்கொருவர் அன்பு , விட்டுக்கொடுக்கும் தன்மை , நேர்மை , நம்பிக்கை , சகிப்புத்தன்மை போன்ற இல்லற நற்பண்புகள் மட்டுமே , திருமணம் செய்து கொள்வதற்குரிய காரணிகளாக அமையும் .
மற்றபடி , மேற்கூறிய இல்லற நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளாமல் ,  ஞானஸ்நானம் எடுக்காத- எடுத்த விசுவாசிகள் மேற்கொள்ளும் இல்லற வாழ்வில் சூறாவளி-சுனாமி காத்திருக்கும் என்பதில் ஐயமில்லை .
மற்றும் , ஞானஸ்நானம் திருமண தகுதியை கொடுத்துவிடாது , திருமணம் செய்து கொள்வதற்குரிய காரணியாக அமையாது .

இதைப்பற்றி வேதவசனம் பெரிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை.....
இயேசு கிறிஸ்து கூட இவ்விஷயத்தில் ஒன்றும் போதிக்கவில்லை . தன்னை பின்பற்றுமாறு கூறியவர் , திருமண விஷயத்தில் அவரை எவ்வாறு பின்பற்ற வேண்டுமென்று கூறவில்லை. அவர் திருமணம் செய்துகொண்டாரா இல்லையா என்றுகூட தெரியவில்லை , அதற்கான நேரடி சான்றுகள்கூட வேதாகமத்தில் இல்லை .

Pastor Kumar:
pls dont give the wrong information. read the bible catefully with prayer. you will get the correct answer.

udaya:
Kindiy point out the wrong information.

Vickyalpha:
Thanks for Video link brother.

ஆனால் நீங்கள் என் கேள்வியை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
நான் அவிசுவாசியை பற்றி கேட்கவில்லை. ஞானஸ்நானம் இல்லாத விசுவாசியை பற்றி கேட்டேன்.
தயவு செய்து கேள்வியை மீண்டும் ஒருமுறை படிக்கவும்

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version