General Category > Tamil Bible

பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கும

(1/18) > >>

Jasmine:
பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கும் இயேசு என்ற நாமதிற்கும் என்ன உறவு?
இயேசுவுக் பிதாவும் எவ்வாறு ஒன்று என்று விளக்கவும்.

இயேசு தான் பிதா என்று கூறுகிறீர்கள் ஆனால். இயேசு உலகம் உருவான பொழுது எங்கே உள்ளார்?
விளக்கம் தேவை..

udaya:
ஏசாயா 45:18
ஏசாயா 45:5
ஏசாயா 45:6
ஏசாயா 46:9
ஏசாயா 43:10
ஏசாயா 43:25
ஏசாயா 43:11
ஏசாயா 48:11
ஏசாயா 44:24

Jasmine:
ஆமேன்....
சகோ. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒருவரா?
இயேசு கிறிஸ்து நான் தான் பிதா என்று கூறுகிறாரா?
எவ்வாறு இருவரும் ஒருவரையொருவர் என்று நாம் கூறுகிறோம்?
அப்படி ஒன்று என்றால் தேவன் உலகத்தை உண்டாகும் பொழுது இயேசு எங்கே உள்ளார்?

வேத ஞானிகள் தயவு கூர்ந்து விளக்கவும்.
மிகவும் தேவையான ஒரு பதிவு, தேவன் வழி நடத்துதலின்படி விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்🙏🏻

udaya:
<சகோ. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒருவரா?>

இல்லை என்றுதான் தோன்றுகிறது ..கீழ்க்கண்ட வசனங்களை கவனியுங்கள்

மாற்கு  13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

யோவான்  5:17 இயேசு அவர்களை நோக்கி என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.

..contd

udaya:
லூக்கா  2:49 அதற்கு அவர் நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.

சில வசனங்கள் 'இரண்டு பிதாக்கள் இருக்கிறார்களோ ' என்ற ஐயத்தைக்கூட எழுப்புகின்றன.

யோவான்  8:38 நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.

என் பிதா / உங்கள் பிதா போன்ற சொற்றொடர்களை கவனியுங்கள்

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version