Author Topic: யாருடைய விசுவாசம் பெரியது?  (Read 49068 times)

love_all

  • Guest
ஆபிரகாமா? இல்லை யோபுவா? யார் விசுவாசம் பெரியது? ஆபிரகாம் ஏன் விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார் ?

udaya

  • Guest
Re: யாருடைய விசுவாசம் பெரியது?
« Reply #1 on: January 03, 2015, 07:29:39 AM »
யோபுவின் விசுவாசமே பெரியது . ஆபிரகாமுக்கு கானான் தேசத்தை தருவதாக தேவனாகிய கர்த்தர் வாக்கு கொடுத்திருந்தார் . யோபுக்கு அவ்வாறு இல்லை . மேலும் ஆபிரகாமுக்கு துக்க துயர வேதனையான சூழ்நிலை இல்லை.

love_all

  • Guest
Re: யாருடைய விசுவாசம் பெரியது?
« Reply #2 on: January 03, 2015, 01:17:40 PM »
பின்பு எதற்காக ஆபிரகாமை விசுவாசத்தின் தந்தை என்று வேதாகமத்தில் எழுதியிருக்கிறது?

udaya

  • Guest
Re: யாருடைய விசுவாசம் பெரியது?
« Reply #3 on: January 04, 2015, 12:40:02 AM »
தெரியவில்லை . எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் . தவறானால் திருத்தவும் .
செல்வந்தனான ஆபிரகாம் கானான் தேச வாக்குத்தத்திற்கு இசைந்து , தன் ஐசுவரியத்தையெல்லாம் துறந்து பரதேசியாய் கானானுக்கு போனான். எனினும் , கடைசியில் தன் மனைவி சாராள் காலமானபோது அவளது உடலை அடக்கம் செய்யக்கூட இடமில்லாமல் , 400 பணம் கொடுத்து இடம் வாங்கி அடக்கம் செய்ய வேண்டியதாகிவிட்டது. அந்த தருணத்தில்கூட ஆபிரகாம் பரதேசியாய்தான் இருந்ததான் (ஆதியாகமம் 23:4) . ஆயினும் ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்.
இது காரணமாக இருக்க கூடும் .

udaya

  • Guest
Re: யாருடைய விசுவாசம் பெரியது?
« Reply #4 on: January 04, 2015, 12:51:29 AM »
இன்னொரு காரணம் :
முதிர் வயதில் சாராள் மூலம் பெற்ற ஏகசுதனான ஈசாக்கை, கடவுளின் கட்டளையை ஏற்று பலி கொடுக்க முன்வந்தான்.

love_all

  • Guest
Re: யாருடைய விசுவாசம் பெரியது?
« Reply #5 on: January 04, 2015, 12:10:07 PM »
அன்பு நண்பா, உங்கள் பதில் சரியானது தான். ஆனால் ஆபிரகாமை விட யோபு அதிகமான சோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளார். அப்படியிருக்க, யோபுவின் விசுவாசம் இரண்டாம் பட்சமாய் போக காரணம் என்ன?

udaya

  • Guest
Re: யாருடைய விசுவாசம் பெரியது?
« Reply #6 on: January 05, 2015, 01:21:23 AM »
ஆபிரகாமின் seniority தான் காரணம் . ஒருவருக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தை அவருக்கு பின் வருபவர்களுக்கும் தருவது வழக்கமில்லை. இது ஒரு பொதுவான நடைமுறைதானே. மேலும் அவர் முக்கியமான முற்பிதா. தலைமுறை கணக்குகள் அவரிடமிருந்துதான் கணக்கிடப்படுகிறது . எனவே அவருடைய முக்கியத்துவத்தை குறைக்கும் எந்த ஒரு காரியத்தையும் செய்ய , வேதாகம எழுத்தாளர்கள் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது .

hk

  • Guest
Re: யாருடைய விசுவாசம் பெரியது?
« Reply #7 on: January 06, 2015, 04:01:39 AM »
probably job learnt from abraham.

udaya

  • Guest
Re: யாருடைய விசுவாசம் பெரியது?
« Reply #8 on: January 06, 2015, 06:36:31 AM »
தேவனாகிய கர்த்தர் யோபுவுக்கு " என் தாசனாகிய " என்ற அடைமொழி கொடுத்திருந்தார். (இதே அடைமொழி பெற்ற மற்ற மூவர் : மோசே,தாவீது ,யாக்கோபு ). ஆனால் கர்த்தரோ , "ஆபிரகாமின் " தேவன் என்று அறியப்பட்டார் (அந்நாட்களில் பல் தேவர்கள் இருந்தனர்). அந்தளவிற்கு ஆபிரகாமுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆபிரகாமின் பெயர் பரிசுத்த வேதாகமம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஊத்ஸ் தேசத்தானாகிய யோபுவின் பெயர் , யோபு புத்தகத்தோடு சரி.

@hk: you may be right . It is a good possibility .

udaya

  • Guest
Re: யாருடைய விசுவாசம் பெரியது?
« Reply #9 on: January 09, 2015, 03:00:03 AM »
In this thread, my last reply has been deleted. Is that by mistake ? or moderation ?

love_all

  • Guest
Re: யாருடைய விசுவாசம் பெரியது?
« Reply #10 on: January 12, 2015, 07:36:15 AM »
முன்னுரிமையை அடிப்படையாக வைத்து பெயர் சூட்ட, வேதாகமாம் வெறும் வரலாற்றுப் புத்தகமா?

udaya

  • Guest
Re: யாருடைய விசுவாசம் பெரியது?
« Reply #11 on: January 12, 2015, 10:38:05 PM »
3 காரியங்களை கூறியிருக்கிறீர்கள்.
1.முன்னுரிமை : வேதாகமம் முன்னுரிமை கொடுக்கவில்லை. அன்று வாழ்ந்த மக்களின் வாழ்வில் சில முன்னுரிமைகள் இருந்ததாக தெரிகிறது . உதாரணமாக ஆதியாகம்ம் 48:14-19 ல் , மூத்த மகனுக்கு சிறப்பு ஆசீர்வாதம் கொடுக்க வேண்டிய அவசியம் பற்றி விவாதிக்கப்படுகிறது. ஆதியாகமம் 25:30-34 மூத்தவனுக்கு சேஷ்டபுத்திர பாகம் இருந்ததை கூறுகிறது . இப்படி முதலில் தோன்றுபவர்களுக்கு பல் முன்னுரிமைகள்.
2.பெயர் சூட்டுதல்: ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தை என்று வேதாகமத்தில் இருப்பதாக கூறியுள்ளீர்கள். ஆனால் , அது எங்கு கூறப்பட்டுள்ளது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. உதவ வேண்டுகிறேன் .
3.வரலாற்று புத்தகம் : வேதாகமத்தை ஒரு வரலாற்று புத்தகமாக வரலாற்று அறிஞர்கள் ஏற்கவில்லை . கிறிஸ்தவ நாடுகளில் கூட இயேசு கிறிஸ்தவின் சரித்திரம் வரலாற்று நூல்களில் இடம்பெறவில்லை . வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்த வரலாற்று ஆதாரங்கள் எதவும் உருப்படியாக இல்லை என்பது அறிஞர்களின் கருத்து .

udaya

  • Guest
Re: யாருடைய விசுவாசம் பெரியது?
« Reply #12 on: January 13, 2015, 01:35:37 AM »
point #2 குறித்து தெரிந்து கொண்டு விவாதிக்க விரும்புகிறேன் .

Francis xavier

  • Guest
Re: யாருடைய விசுவாசம் பெரியது?
« Reply #13 on: January 15, 2015, 03:54:05 AM »
The first, your Questin is wrong.
Kadavul munnilayel visu vasathin adippadayel yarum periyavarum ellai, siriyavarum ellai.

Abiragamku kadavul Vakkuruthi kuduthar, "Un santhathiyei palugi peruga pannuven".Entha vakkuruthi avarukku 99Age il kidaithathu. Avarukku vali marabil appothu oru kulanthai kuda kidaiyathu. Saravukku 89 Vayathu Aanalum visuvasithar.

100Vayathil thanakku kidaitha maganai kadavul ketta pothum,avar visuvasathodu sentar. kadavul vaakku marathavar eantu visuvasithar. Kadavulukku nalthorum bali seluthinar.

YOBU adutha valimarabinan. Eantha maganum thanthayey vida melanavan ellai. Muthirchy adaintha magan thanthai Kattum nal vali nadappan.

Ellarudaya visuvasathukkum muthal valikattiyaga vilangiyavar Abiragam. Eanave than VISUVASATHIN THANTHAI entu alaikkintom.

Ethu varalattil ealutha villai entu kavalai padamal, nam manathil avargalin valkkayey pathithu, visuvasathil Uruthi paduvom.

udaya

  • Guest
Re: யாருடைய விசுவாசம் பெரியது?
« Reply #14 on: January 15, 2015, 01:16:32 PM »
@The first, your Questin is wrong.
what is wrong in/with the question ? typo ? bad grammar ? Or do you mean to say " we should not compare APPLE with ORANGE  "..?

@Kadavul munnilayel visu vasathin adippadayel yarum periyavarum ellai, siriyavarum ellai
ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான், இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.
40. மத்தேயு 5 :19

@Ellarudaya visuvasathukkum muthal valikattiyaga vilangiyavar Abiragam.
ஆபிரகாமுக்கு முன்பே நோவா இருந்தார் . அவருக்கு கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்திருந்தார் .கடவுளை விசுவாசித்து பேழையை கட்டினார் . அவர்தான் முதல் விசுவாசி என்று எண்ணுகிறேன் .

@Ethu varalattil ealutha villai entu kavalai padamal, nam manathil avargalin valkkayey pathithu, visuvasathil Uruthi paduvom.
கவலை எல்லாம் இல்லை நண்பா:)  just a thought .