General Category > Tamil Bible

அவர் ஏன் அப்படி கூறினார் ?

(1/10) > >>

udaya:
நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 12 :51

பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.

மத்தேயு 10 :34 , 35

____________________________________________________
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மேய்ப்பர்களுக்கு , அறிவித்த தூதர்கள் , பூமியில் சமாதானம் உண்டாவதாக , என்று சொல்லி துதித்தார்கள் . லூக்கா 2: 14.

ஆனால் , " சமாதான பிரபு " என்று கருதப்பட்ட இயேசு கிறிஸ்து , தான் சமாதானத்தை கொடுக்க வரவில்லை என்று கூறுவது ஆச்சரியமாக உள்ளது  . மேலும் , பிரிவினையை உண்டாக்க  வந்தேன் என்றும் கூறுகிறார் . அவர் ஏன் அப்படி கூறினார் ?

jesraj:
Hi brother Praise the Lord, en Peru Rajesh, I just want to put some words about your question...., yen avar apdi sonnar endral saathanukum namaku Ulla uravu, paavathukum namakkum Ulla uravu irundhu nammai pirika than apdi sonna. Avar nammudaiya samadhanthuko alladhu santhosathuko apdi sollavillai. Are you agree.....?  Please let me know......

udaya:
@:yen avar apdi sonnar endral saathanukum namaku Ulla uravu, paavathukum namakkum Ulla uravu irundhu nammai pirika than apdi sonna.

மத்தேயு 10 :35 ல் ... " மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்." என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் ...சாத்தானுக்கும் நமக்கும் உள்ள உறவை பிரிக்க வந்தார் என்று நீங்கள் சொல்கிறீர்கள் ...இயேசு கிறிஸ்து சொல்வது சரியா ? அல்லது நீங்கள் சொல்வது சரியா ?  தெள்ளத் தெளிவாக , எல்லோரும் புரிந்து கொள்ளும்படி , பைபிள்  சொல்லும் ஒரு விஷயத்தை , உங்களுக்கு சௌரியமாக மாற்றி கூறுவது , தவறு ..bro. இப்படி. செய்யக்கூடாது என்று வேதாகமம் பல வசனங்களில் நம்மை எச்சரிக்கிறது :o

@: Avar nammudaiya samadhanthuko alladhu santhosathuko apdi sollavillai.

பின் , வேறு எதற்காக சொன்னார் ?!?!?!
பூமியில் சமாதானத்தை உண்டாக்க வரவில்லை என்று அவர் குறிப்பிடுவது நமது சமாதானத்தைதானே !?! இந்த பூமியில் ஆடுமாடுகளுக்கா சமாதானம் வேண்டும் ? இல்லை ...செடி கொடிகளுக்கா சமாதானம் ? சமாதானம் என்றால் அது மனிதர்களுக்கான சமாதானம்தான்.

jesraj:
En anbu sagotharare... Ipodhum  solgiren avar nammudaiya samadhai kedukkavo alladhu pirivinai undakkavo varavillai, avar samadhana prabhu Yesu christhu pogumbhodhu ennudaiya samadhanathaiye vaithuvitu pogiren endru sonnavar nam thayikum namakum, nam kudumbathil pirivinai irukattum endru nanaitha apdi solli iruppar..?. illai. Pinna yen samadhanathai alla pirivinai undakka vandhen endru sonnar endral.. Oru kudumbathil magan ratchikka patirundhal thaiy ratchikka pattu iruka mattargal marumagal ratchikka patirundhal mamaiyar ratchikka pattu irukka mattargal  ipdi irundhal kudumbathil pirivinaithane undagum idhargagathan apdi sonnar....  Eninum Yesu Christhuvai yetrukondal samadhanam...... Amen.. Jesus loves you.......

udaya:
அன்பு சகோதரா !

நான் கேட்ட கேள்வி 2 பகுதிகளை கொண்டது .
1. சமாதானத்தை உண்டாக்க வரவில்லை என்று கூறியது .
2. பிரிவினையை உண்டாக்க வந்தேன் என்று கூறியது .

1ம் பகுதிக்கு பதிலளிக்கும்போது , நீங்கள் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை ஒதுக்கி புறம்பாக தள்ளிவிட்டீர்கள் . உங்கள் சொந்த கருத்தை அவர் கருத்தாக காட்ட முயற்சி செய்திருக்கிறீர்கள் . சமாதானத்தை உண்டாக்க வராதவர் எப்படி சமாதானத்தை வைத்து செல்லமுடியும் ?

2ம் பகுதியை புரிந்து கொள்ள கஷ்டப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன் . நீங்கள் கூறுவது குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களை , ரட்சிக்கப்பட்டவர்கள் - ரட்சிக்கப்படாதவர்கள் என்று இனம் பிரிப்பது . நான் கேட்க விரும்புவது , பிரிவினையை உண்டாக்க வந்தேன் என்ற அவருடைய வார்த்தைகள் பற்றியது .
பிரிப்பது என்பது வேறு . பிரிவினையை உண்டாக்க வந்தேன் என்று கூறுவது வேறு . இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன் .

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version